Advertisement

கலை,அறிவியல் கல்லூரி விளையாட்டு போட்டி

திருக்கோவிலுார்;திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியின் 19ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமணி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.


பொருளாளர் ஏழுமலை‚ துணைத்தலைவர் முஸ்தாக் அகமது‚ தாளாளர் பானிராஜ்‚ அறக்கட்டளை உறுப்பினர்கள் சத்தியநாராயணன்‚ சாந்தியம்மாள்‚ ராஜாமணி‚ பாசில்அகமது‚ சதாம்உசேன் வாழ்த்துரை வழங்கினார்கள். டி.எஸ்.பி.‚ அசோக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ‚ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பட்டிமன்ற புலவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு‚ விழா மலரை வெளியிட்டு‚ பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி பேராசிரியர்கள்‚ மாணவர்கள்‚ பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement