Advertisement

சென்னை புகைப்பட கண்காட்சியில்...

சென்னை புகைப்பட கண்காட்சியில்...

சென்னை, போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (psm)சார்பாக சென்னை லலித்கலா அகாடமியில் நடந்து கொண்டிருக்கும் புகைப்பட கண்காட்சி நாளையுடன் (03/4/18) நிறைவு பெறுகிறது.

இந்தியாவில் உள்ள பழமையான புகைப்பட கழகங்களில் பிஎஸ்எம் புகைப்படக்கழகமும் ஒன்றாகும்.350 மெம்பர்களைக் கொண்ட இந்த அமைப்பில் போட்டோ வாக்,பயிற்சி பட்டரை,கருத்தரங்கு,கண்காட்சி ஆகியவை வருடம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கும்.

கடந்த 28ந்தேதி துவங்கிய கண்காட்சியினை ஏாராளமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.கண்காட்சியில் 80 உறுப்பினர்களின் 250 படங்கள் இடம்பெற்றுள்ளன.பல்வேறு தளத்திலும் பல்வேறு கோணத்திலும் எடுக்கப்பட்ட படங்களின் பின்னனி குறித்து விளக்கம் தர பெரும்பாலான போட்டோகிராபர்களும் கண்காட்சி அரங்கிலேயே உள்ளனர்.

மேலும் கண்காட்சியில் பிஎஸ்எம் உறுப்பினராக பதிபவர்களுக்கு போட்டோகிராபர் ஜாக்கெட்,புத்தகம்,தொப்பி போன்றவையும் வழங்கப்படுகின்றது.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement