Advertisement

எண்ணத்தின் வளம்... தேசத்தின் வளம்


ஒவ்வொரு நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார,வாழ்வியல் நிலை என்பது அந்தந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தை பொறுத்தேஅமைகின்றது. பல்வேறு விதமான அரசியல் நிர்வாகங்கள் இருந்தாலும்,சமூக கட்டமைப்புகள் இருந்தாலும்,அந்த நாட்டின் மனிதவளத்தின் தன்மை தான் நாட்டின் வளர்ச்சிக்குபெரும் பங்கு வகிக்கின்றது.இந்தியாவை பொருத்தமட்டில் சர்வதேச அளவில் வளர்ந்து வருகின்ற நாடு என்ற அந்தஸ்து தான் நமது நாட்டின் அடையாளம். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் வளர்ந்து வருகின்ற நாடு என்ற முத்திரைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். நம்மை சுற்றியுள்ள நாடுகளை எல்லாம் சமூக வாழ்வியல் குறியீடுகளில் பெரும் வளர்ச்சி அடைந்து, தன்னிறைவு பெற்று விளங்குகின்றது. நமது நாடு ஏன் இத்தகைய நிலையை அடையவில்லை என்ற கேள்வி நம் மனதில் எழவேண்டும்.
நமது நாடு சமூக பொருளாதார நிலையில் தன்னிறைவு பெற்று விளங்குவதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அதற்கான ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொள்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்பு. இதன் இடையில்எத்தனையோ அறிஞர்கள், விஞ் ஞானிகள், தொழிலதிபர்கள், சமூக சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள்,ஆட்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வ தொண்டு சேவையாளர்கள், கலாசார பிரதிநிதிகள் ஆகியோரின் உன்னத உழைப்பும் உயர்ந்த தியாகமும் அபார சாதனைகளும் இருந்துவருகின்ற வேளையில் நாட்டின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டுமென்றால் மக்களின் எண்ணங்களும் அத்
தகைய குறிக்கோளை நோக்கி ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.சமூகநிலையும் வாழ்வியலும்


இந்திய தேசம் பாரம்பரிய மிக்க தேசம் என்பது நம் எல்லோருக்கும் பெருமையே. உலக வரைபடத்தில் இந்திய நாட்டின் பிரதிநிதித்துவத்தையும் பல்துறையில் இந்தியர்களின் ஒப்பற்ற சாதனைகளையும் மறந்துவிடமுடியாது, மறுத்துவிட முடியாது. இருந்தபோதிலும் இன்றைய காலகட்டத்தில் நமது நாடு எதிர்கொண்டுஉள்ள சமூகபிரச்னைகள் அனைத்து துறையிலும் ஏராளம்;. சராசரி மனிதன் வாழ்வதற்கு பெரும்சவாலாக இன்றைய சமூகபொருளாதார நிலை இருக்கிறது.வறுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிகொண்டே இருக்கின்றது. போதிய வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் அவதிப்படுவது, நாள்தோறும் நடக்கிறது. விஞ்ஞானதுறையில் முன்னேற்றம் பெற்று வந்தாலும் பல
வகையான உடல்நல கோளாறுகளால்மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார துாய்மையின்றி பெரும் நகரங்கள் குப்பைமேடுகளாக காட்சியளிக்கின்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வன்முறைகள் நாள்தோறும் சர்வ சாதாரணமாகசமூகத்தில் நடைபெறுகின்றது. குடும்ப வன்முறைகளும், சமூகபிரச்னைகளும், மது, போதைஉள்ளிட்ட பழக்கவழக்கங்களும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் உள்ள இடைவெளி நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இவ்வாறு ஏராளமான சமூக அவலங்களை அடுக்கிகொண்டே போகலாம்.
இத்தகைய சமூக அவலங்களை அலட்சியப்படுத்தி தனிப்பட்ட வாழ்க்கை நிலையை மட்டும் பெரிதென எண்ணி, சுயநலத்தில் நம்மில் அநேகமானோர் வாழ்வது தான் கவலைக்குரியது. இந்த சமூக அவலங்கள்தவிர்க்கப்படவேண்டும் என்றால் நமது எண்ணங்களும் அதற்கேற்ப ஆக்கப்பூர்வமாக செலுத்தப்படவேண்டும். எண்ணங்களின் வலிமைதான் மனிதர்களுக்கு செயலாற்றும் நடைமுறையை ஊக்குவிக்கின்றது. நாம் வெறும் பார்வையாளர்களாக இருந்துவிடாமல், நமது
சக்திக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப சமூக அவலங்களை ஒழிக்கமுயற்சிகளை மேற்கொண்டால் நமது நாட்டின் நிலை தலைகீழாக மாறிவிடும்.மனிதவளமும் எண்ணவளமும்

மனிதவளம் என்பது மிகப்பெரிய சக்தி, அந்த சக்தியை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்தினால் சரித்திரம் போற்றும் சாதனைகளை மிக எளிதில் செய்துவிடலாம் என்று உலக வரலாறு நமக்கு அவ்வப் போது சுட்டிக்காட்டி கொண்டுஇருக்கிறது. மக்களின் எண்ணத்தின் கூட்டுதொகை தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது. மனிதர்கள் எல்லாம் ஆரோக்கிய எண்ணத்தோடு அனைவரின் நலனையும், தமது குடும்பநலத்தோடு உயர்த்தி பார்க்க துவங்கினால் சமூகத்தில் மற்றவர்களுக்கு தீமைகள்
கண்டிப்பாக குறைய துவங்கும். எல்லோரும் நல்ல நிலையில் வாழவேண்டும் என்பது மனிதர்களுக்கு இயற்கையான மனநிலை தான். இதற்குமாறாக மற்றவர்களை காட்டிலும் தாம் தான் உயர்வாக வாழவேண்டும் என்ற பேராசையுடன் திகழ்வது பல்வேறு சமூக சீரழிவுகளுக்கு வித்திடுகிறது. ஒரு சமூகத்தில் மனிதவளத்தை பல்வேறு பிரிவுகளாக பிரித்து பார்ப்போமே
யானால், அது பிறந்து குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிஇருக்கும். ஒவ்வொரு பருவத்தினரும் ஒவ்வொரு வகையான வாழ்க்கைமுறைக்கு உட்பட்டவர்கள். இதில் அவரவர் நிலைக்கேற்ப தனது வாழ்க்கை முன்னேற்றத்தில் தேசத்தின் முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பதை புரிந்து
கொண்டு வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கைமுறை ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியை ஆரோக்கியமாகவும், வளமாகவும்மாற்றும். உயிரற்ற பொருள்களையே பாதிக்கும் வல்லமை படைத்தது எண்ணங்கள், உயிருள்ள மனிதர்களை பாதிக்காமல் விட்டுவிடுமா?தேசவளம் காப்போம்


இந்தியாவில் தற்போது உள்ள மக்கள்தொகை கணக்கீட்டின்படி சராசாரியாக 700 மில்லியனுக்கு மேல் 35 வயதுக்குட்பட்டவர்கள். வருங்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியையும் சமூக பொருளாதார அந்தஸ்தையும் தீர்மானிக்க போகின்றவர்கள் இந்த வயதுக்கு உட்பட்டவர்களில் தான் இருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் இளமை பருவத்தினரும், குழந்தைகளும் இருக்கின்றனர். நாட்டின் வருங்கால நலத்தை பற்றி யோசிக்கும் பொழுது இவர்களின் மீது நமது பார்வை திரும்பவேண்டும். இவர்களது வாழ்க்கையை ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் நெறிப்படுத்த ஊக்குவித்தால் இவர்களது எண்ண அலைகள் அபாரசக்தி பெற்று மற்றவர்களுக்கு எளிதில் பரவும். இதுவே தேசநலத்திற்கு பெருமளவில் உதவிசெய்யும்.
* நமது குடும்பங்களில் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவோம். பெற்றோர்களின் அரவணைப்போடும், அன்போடும் வாழ உதவிசெய்வதோடு, அவர்கள் திறமைகேற்ப அவர்களின் வாழ்க்கையை அமைத்து கொள்வதற்கு உற்சாகம் அளிப்போம்.
* பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை புரிந்திட உதவிசெய்வோம்.
* வேலைவாய்ப்பு துறைக்கு தயாராகும் நமது இளைஞர்களுக்கு குடும்பத்தினர்கள் அவர்களது தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் உயர்த்துவதற்கு உற்சாகம் அளிப்போம்.
* குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவோம்
* குழந்தைகள் மற்றவர்களுக்கு உதவிசெய்யும் பண்பையும், கருணை கொள்ளும் உள்ளத்தையும் பெற்றிட முயற்சி மேற்கொள்வோம்.
* நல்ல எண்ணங்களை மேற்கொள்வதற்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளின் மத்தியில் அறிமுகம் செய்து உற்சாகப்படுத்துவோம்.
* நமது தேசத்தின் மலர்ச்சி பெரும் தியாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளதை நமது குழந்தைகளுக்கு நினைவுப்படுத்தி, தேச நலனை முன்னிறுத்தும் வகையில் உற்சாக செயல்களை மேற்கொள்வதற்காக ஊக்குவிப்போம்.
* இந்திய நாட்டின் அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், கண்டுபிடிப்புகள்,ராணுவம், விண்வெளி ஆகிய துறைகளின் சாதனைகளை பெருமைகொண்டு உயர்வாக மற்றவர்களிடம் எடுத்துரைக்கும் குணத்தை ஊக்குவிப்போம்.
* முடிந்தவரையில் இந்தியாவில் உள்ள பிற பகுதிகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்று பலதரப்பட்ட மக்களையும் அவர்களது வாழ்க்கை கலாசாரத்தையும் புரிந்துகொள்வோம்.
* எந்தநேரத்திலும் நமது தாய்நாட்டையும், தாய்நாட்டின் இயற்கை வளத்தையும் அவமதித்து வாழாமல் இருப்பதற்கு கற்றுக் கொடுப்போம்.நாட்டை உருவாக்குவோம்

இந்தியர்களாகிய நாம் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு வரும்பொழுது, நாம் சென்ற ஊர்களின் மதிப்பை பெருமையாக பேசுவது வழக்கம். இதில் முக்கியமாக
நகரத்தின் துாய்மை, அந்த நகரத்தின் வசதிகள், பெருமைகளை உயர்வாக போற்றி பேசுகின்றோம். இதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அத்தகைய நிலை நமதுநாட்டிலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அத்தகைய நிலைக்கு குடிமக்களாகிய நமக்கு பொறுப்பு இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டு வாழவேண்டும்.
நமக்குள் இருக்கின்ற திறமைகளையும், ஆற்றல்களையும் அங்கீகாரம் கிடைக்கின்றதோ, இல்லையோ நாமாகவே முன்வந்து நாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பது நமது கடமை. இவ்வாறு வாழ்வதினால் நமது தேசத்தின் நலம் மகத்தான வகையில் உருவாக நம்மால் ஆன உதவி செய்திடமுடியும்.
''நமது எண்ணம் நமது தேசம்!தேசத்தை உயர்த்தும் ஆரோக்கிய எண்ணத்தைநமது வாழ்க்கைமுறை ஆக்குவோம்,சரித்திரம் போற்றும் சாதனைகளை புரிந்திடுவோம்”. நிக்கோலஸ் பிரான்சிஸ்தன்னம்பிக்கை எழுத்தாளர்மதுரை94433 04776

.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement