Advertisement

சென்னையில் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி

சென்னையில் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி

சென்னை, போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (psm)சார்பாக சென்னை லலித்கலா அகாடமியில் வருகின்ற 28ந்தேதி பிரம்மாண்டமான புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்தியாவில் உள்ள பழமையான புகைப்பட கழகங்களில் பிஎஸ்எம் புகைப்படக்கழகமும் ஒன்றாகும்.350 மெம்பர்களைக் கொண்ட இந்த அமைப்பில் போட்டோ வாக்,பயிற்சி பட்டரை,கருத்தரங்கு,கண்காட்சி ஆகியவை வருடம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கும்.

இந்தவருடம் வருகின்ற 28ந்தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 3ந்தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.கண்காட்சியில் 80 உறுப்பினர்களின் 250 படங்கள் இடம்பெறுகின்றன.
கண்காட்சியினை பிரபல புகைப்ப கலைஞர் கார்த்திக் சீனிவாசன் திறந்துவைக்கிறார் அனுமதி இலவசம் ஏற்பாடுகளை தலைவர் எம்.சுவாமிநாதன் தலைமையிலானவர்கள் செய்துவருகின்றனர்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement