Advertisement

போலீஸ் செய்திகள்

வழிப்பறி செய்த வாலிபர் கைது: திருப்பூர் அனுப்பர்பாளையம், நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார், 26. இவர் ராதாநகர் பகுதியில் நடந்து சென்றார். வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, 150 ரூபாயை பறித்து சென்றார். அப்பகுதி பொதுமக்கள் உதவியோடு வாலிபரை பிடித்து ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர், 28 என்பது தெரிய வந்தது. வடக்கு போலீசார் கைது செய்தனர்.


மூதாட்டி தற்கொலை: திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் கோவிந்தாம்மாள், 74. இவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement