Load Image
Advertisement

வறட்சியை சமாளிக்க, மெகா பண்ணை குட்டை :இனிய வழிகாட்டும் இலுப்பநகரம் கிராமம்

உடுமலை;மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரையும், போர்வெல் மற்றும் பி.ஏ.பி., பாசன திட்டத்தில் கிடைக்கும் நீரையும் சேமித்து வைத்து, ஆண்டுமுழுவதும் பயன்படுத்தும் வகையில், 40 அடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்து விவசாயி அசத்தியுள்ளார்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை, கரும்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறி உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பருவமழை இல்லாமல் ஏற்பட்டுள்ள வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயமே பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிடைக்கும் ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல் சேகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி, குடிமங்கலம் வட்டாரம், இலுப்பநகரத்தில், மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரையும், போர்வெல் மற்றும் பி.ஏ.பி., பாசன திட்டத்தில் கிடைக்கும் நீரையும் சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில், 40 அடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்து அசத்தியுள்ளார் விவசாயி கணேசன். பாரம்பரியமாக இவரது குடும்பத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால் பண்ணை குட்டை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்.

தற்போது பண்ணை குட்டையில், தண்ணீர் தேங்கி நின்று, அணை போல காட்சியளிப்பதால், 10 மாதங்கள் வரை பாசனத்துக்கு பிரச்னையில்லை என்று தெரிவிக்கிறார்.
தென்னை, மல்பெரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில், உரங்கள் தேவைக்காக நாட்டுமாடுகள் உட்பட கால்நடைகளை வளர்த்து வருகிறார். கோழி வளர்ப்பு, பட்டுக்கூடு உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளார்.
விவசாயி கணேசன் கூறியதாவது:
ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். விவசாயிகள் தங்களது வசதிக்கேற்ப தோட்டங்களிலே பண்ணைகுட்டை அமைத்து பயன்படுத்தி கொள்ளலாம். எனது தோட்டத்தில், 40 அடி ஆழம், 160 அடி அகலம் மற்றும் 300 அடி நீளத்தில், பண்ணை குட்டை அமைத்து தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் தண்ணீர் ஊடுருவுவதை தவிர்க்கும் வகையில், கீழ் பரப்பில் நைலான் தார்ப்பாய் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணை குட்டையில், மீன் வளர்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். கடன் வாங்கியே நிலத்தில் பண்ணை குட்டை அமைத்தேன்.
வேளாண், வேளாண் பொறியியல்துறை சார்பில் பண்ணை குட்டை அமைப்பதற்கு, உதவி செய்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement