Load Image
Advertisement

ஒன்றரை கோடி ரூபாயில் கட்டடம் அதிகாரிகளே கவனம்! அவசரத்துக்கு ஒதுங்கதான் முடியலை!

அன்னுார்:அன்னுாரில், 1.5 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் கட்டப்பட்டும், ஒரே மாதத்தில் போர்வெல் வறண்டதால் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் இருந்தன. இவை, 50 ஆண்டு பழைய கட்டடங்கள். இவை இடித்து அகற்றப்பட்டு, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயில், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் ஆகியவற்றுக்கு, இரண்டு தளங்களுடன் ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

இந்த வளாகத்தில், புதிதாக போர்வெல் போடப்பட்டு, மேல்நிலைத்தொட்டியில் நீர் ஏற்றி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கட்டடம் திறந்த ஒரே மாதத்தில், போர்வெல் வறண்டு போனது. இதனால் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலக ஊழியர்கள், குடிக்கவும், பிற பயன்பாட்டுக்கும் நீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

இத்துடன் அலுவலகத்துக்கு, பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் விவசாயிகளும் குடிநீர் இல்லாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தண்ணீர் இல்லாததால், இரண்டு தளங்களிலும் கழிப்பறைகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.இங்கு கருத்தரங்குகளுக்கு வரும் விவசாயிகள், இயற்கை உபாதை கழிக்க, மறைவிடம் தேடி ஓட வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே போடப்பட்டுள்ள போர்வெல்லை ஆழப்படுத்துவதே தீர்வு.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement