Advertisement

சிட்டி கிரைம்

தாய், மகள் மாயம்
கருவலுார், உப்பிலிபாளையம் ஏ.டி., காலனியை சேர்ந்தவர் சின்னராசு; இவரது மனைவி ஜெயலட்சுமி, 36; இவர்களுக்கு தீபிகா என்ற நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜன., 10ல் மகளுடன் வெளியே சென்ற ஜெயலட்சுமி, வீடு திரும்பவே இல்லை. கணவர் கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


துாக்கிட்டு தற்கொலை
-திருப்பூர், பிச்சம்பாளையம் காட்டன் மில் ரோட்டை சேர்ந்தவர் ரங்கத்துரை; இவர் பி.என். ரோட்டில் தியேட்டர் வைத்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி, 55. தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில், வீட்டில் ராஜேஸ்வரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
l திருப்பூர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 44. அவரது மனைவி ராஜேஸ்வரி, 35. விசைத்தறிக்கூடத்தில் வேலை செய்து வந்த ரமேஷ், மது அருந்தி, சரிவர வேலைக்கும் செல்லவில்லை. இதனால்,தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த ரமேஷ், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
l திருப்பூர் மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத், 50; பனியன் தொழிலாளி. இவரது மனைவி குமாரி, 40. கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்து இருந்த சம்பத், யாரும் இல்லாதபோது, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.


சாக்கடையில் விழுந்தவர் பலி
காங்கயம், நத்தக்காடையூர், பாரதியார் நகரை சேர்ந்தவர் குருசாமி, 60. லாரி கிளீனர். மருதுார் பிரிவு அருகே, ரோட்டோரம் நடந்து சென்ற அவர், தடுமாறி அங்குள்ள சாக்கடை கால்வாய்க்குள் விழுந்தார். இதில், மூச்சுத் திணறி அவர் உயிரிழந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


விஷம் குடித்து பெண் தற்கொலை
திருப்பூர் பாரதிநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கொம்புசாமி, 50. அவரது மனைவி தங்கமணி, 45. வேறு வீட்டுக்கு குடிபுகுவது தொடர்பாக தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தங்கமணி, விஷம் மாத்திரை சாப்பிட்டார். அவரை மீட்டு, திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தங்கமணி இறந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement