Advertisement

சிட்டி கிரைம்

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
திருப்பூர் ஆலாங்காட்டை சேர்ந்தவர் சையுதா பேகம், 46. அவரது வீட்டின் அருகே விஸ்வநாதன், 23 என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டின் முன், சையுதா பேகம், அவரது மகள் நின்றிருந்தனர். அப்போது, மது போதையில் சென்ற விஸ்வநாதன், இருவரிடம் தகராறு செய்தார். தொடர்ந்து இருவரையும் தாக்கியுள்ளார். காயமடைந்த சையுதா பேகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஸ்வநாதனை சென்ட்ரல் போலீசார் கைது செய்தனர்.


தீ விபத்தில் வாலிபர் பலி
தஞ்சாவூரை சேர்ந்தவர் மகேஸ்வரன், 30. இவர், திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் பிரிண்டிங் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த, 5 ம் தேதி கொசுவர்த்தியை வைத்துவிட்டு துாங்கினார். திடீரென, தீப்பொறி விழுந்து தீ பிடித்தது.
இதை அணைக்க மகேஸ்வரன் முயற்சித்தார்; இருப்பினும், அவரது ஆடையில் தீ பரவி காயமேற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


கஞ்சா விற்றவர் கைது
சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். திருப்பூர் கே.ஆர்.ஆர்., தோட்டத்தில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், மதுரை, சோழவந்தனை சேர்ந்த விஜயகுமார், 35 என்பதும், கஞ்சா விற்று வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement