Advertisement

இறுதியில் இந்தியா ; இளம் தலைமுறை அசத்தல்

கொழும்பு: முத்தரப்பு 'டுவென்டி-20' தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை தலைநகர் கொழும்புவில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இன்று கொழும்புவில் நடந்த 5வது லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமுதுல்லா 'பவுலிங்' தேர்வு செய்தார்.

முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவான் (35) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா (89) அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரெய்னா (47) நம்பிக்கை அளித்தார். இந்திய அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (2) அவுட்டாகாமல் இருந்தார்.

சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (7), சவுமியா சர்கார் (1) ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த தமிம் இக்பால் (27) ஆறுதல் தந்தார். கேப்டன் மகமதுல்லா (11) நிலைக்கவில்லை. சபிர் ரஹ்மான் (27) ஓரளவு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் அரைசதடித்தார்.

வங்கதேச அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. முஷ்பிகுர் (72) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து இந்திய அணி, 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என, 6 புள்ளிகளுடன் பைனலுக்கு முன்னேறியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Srikanth - chennai,இந்தியா

    இந்தியா அணி வேகப்பந்து பௌலர்கள் யார்கர் பந்து வீச கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் எதிர் அணிகள் ரன்கள் குறைவாக பெறமுடியும். வெற்றியும் சுலபமாகும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இதுமாதிரி அரசியலிலும் இளைஞர்கள் கையில் கொடுத்து பாருங்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement