Advertisement

களத்திற்கு வர மறுக்கும் தம்பிதுரை

அமளி, ஆர்ப்பாட்டம் என, எதிலும் பங்கேற்காமல், தினந்தோறும் ஊடகங்களிடம், 'பார்லிமென்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை கூறுவது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு துவங்கிய தினத்திலிருந்து, தினமும், அமளியால், லோக்சபாவும், ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தனை காலமும் அமைதியாக இருந்த, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் தான் தற்போது பலம் காட்டுகின்றனர்.


காலை, 10:00 மணிக்கு, காந்தி சிலை; 11:00 மணிக்கு சபையின் உள்பகுதி; 12:00 மணிக்கு பார்லிமென்டிற்கு வெளியே உள்ள, விஜய் சவுக் புல்வெளி என, மாறி மாறி இடம் பெயர்வது, .தி.மு.க., - எம்.பி.,க்களின் அன்றாட அலுவலாக மாறி விட்டது.ஆனால், டில்லியில், அ.தி.மு.க., - எம்.பி.,க் களை வழிநடத்துபவராக கூறப்படும், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரையின் நடவடிக்கைகள், புரியாத புதிராக உள்ளன.

காந்தி சிலை முன் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் வருவதில்லை; சபைக்குள் அமளி நடக்கும் போது, அதிலும் பங்கேற்பது இல்லை. குறைந்தபட்சம் இருக்கையை விட்டு எழுந்து நிற்பதைக் கூட, காண முடியவில்லை.ஆனால், 12:00 மணிக்கு, சபை ஒத்தி வைக்கப்பட்டதும், சக, எம்.பி.,க்களுடன்விஜய் சவுக்கில் உள்ள, 'டிவி' கேமராக்கள் முன், தவறாமல் ஆஜராகி விடுகிறார்.


இதுவரை, ஏழு நாட்கள் பேட்டி அளித்துள்ளார். இவற்றில், பிரதமரை சந்திப்பது குறித்தோ, அடுத்தகட்ட அணுகுமுறை குறித்தோ, எதுவும் தெளிவுபடுத்தவில்லை. 'சபையை நடத்த விட மாட்டோம்' என்பதையே, திரும்பத் திரும்ப கூறுகிறார்.


முதல் நாள் ஆர்ப்பாட்டமே, தம்பிதுரை தலைமையில் தான் எனக் கூறப்பட்டும், அவர் வரவில்லை. விசாரித்த போது, 'துணை சபாநாயகர் என்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர், ஆர்ப்பாட்டம் செய்வது சரியாக இருக்காது என்பதால், வரவில்லை' என, கூறப்பட்டது.'சபையை நடத்தும் பொறுப்பில் இருந்து கொண்டே, 'சபையை நடத்த விட மாட்டோம்' என, பேட்டியளிக்க மட்டும் துணிச்சல் உள்ளது.


'அதே துணிச்சல், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கும், அமளி செய்வதற்கும் மட்டும் அவருக்கு இல்லையா' என, சக, எம்.பி.,க்கள் கூறுகின்றனர்.பல்வேறு பிரச்னைகளுக்காக, பல கட்சிகளும் ஏற்படுத்தும் நெருக்கடியை, தானும் பயன்படுத்திக் கொள்ளவே, அ.தி.மு.க., தினந்தோறும் ஆர்ப்பாட்டமும், அமளியும் செய்கிறது.


ஆனால் அதையும், தம்பிதுரை, தனக்காக பயன் படுத்துவதாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குமுறுவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


எம்.பி.,க்கள் வாயில் திருப்பதி லட்டு எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, ஏழாவது நாளாக நேற்றும், இரு சபைகளின் அலுவல்களும் பாதிக்கப்பட்டன. காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, திருப்பதி லட்டு பிரசாதத்தை, ஆந்திர, எம்.பி.,க்கள் தங்களுக்குள் வினியோகித்தனர். அருகிலேயே கோஷங்கள் போட்ட, அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் வாய்களிலும், லட்டை ஊட்டிவிட்டனர். நட்போடு ஊட்டிய லட்டை சாப்பிட்டதும், உற்சாகத்தில், மீண்டும் கோஷங்களை ஓங்கிப் போட்டு விட்டு, ஓரிரு நிமிடங்களில் கலைந்து சென்றனர்.

- நமது டில்லி நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா

  துணை சபாநாயகர் சபையை முடக்குவோம் நடத்தவிடமாட்டோம் என்று மீடியாக்களிடம் முழங்குவது கேவலம். இவருக்கு வோட்டு போட்டவர்களுக்கு செய்யும் அநீதி.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அசிங்க தி.மு.க. எம்பிக்கள் என்றால் இப்படித்தானிருப்பர், சேறு என்றாவது சந்தனம் போல நறுமணம் கொடுக்க முடியுமா????

 • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜெயலலிதா சிங்கமாக இருக்கவேண்டும் என்பதற்க்காக இந்த சிறு நரிகளை வளர்த்துவிட்டு போய்விட்டார்...இன்று மக்கள்தான் அவதிப்படுகிறார்கள் ..அதிலும் இந்த தம்பித்துரை நோகாமல் நொங்கு குடிப்பவர்..

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  எம்பிக்களுக்கு லட்டு மக்களுக்கு அல்வா

 • christ - chennai,இந்தியா

  இவனை போன்று மங்குணிகளுக்கு வாய்ப்பு கொடுத்ததே ஜெயலலிதாவின் மிக பெரிய தப்பு .இவனை போன்று இன்னும் பல மங்குணிகளிடம் தமிழ்நாடு மாட்டி கொண்டு முழிக்கிறது.

 • ஸாயிப்ரியா -

  வந்தாலும் பட்டும்படாமலும் பொதுவாக பதவிக்கு பங்கம் வராது எச்சரிக்கை உணர்வோடு பேசுவார்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இந்த ஆள் தனக்கு மெடிக்கல் காலேஜ் ஆரம்பிப்பதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக வாய மூடிக்கிட்டு இருக்கார்

 • J sundarrajan - Coimbatore,இந்தியா

  Pack of jokers

 • balakrishnan - coimbatore,இந்தியா

  யாரும் செத்துக்கிடந்தாலும் பிரதமர் வரப்போவதில்லை, இவங்க கோஷம் போடுவதால் எந்த பிரயோஜனமும் கிடையாது, அவர் யாரையும் மதிப்பதில்லை, அத்வானிக்கே ஆப்பு அடிச்சவர், உங்களை எல்லாம் எப்படி சந்திப்பார், நீரவ் மோடி போல பெரிய ஆளுங்களோட தான் உறவு, நட்பு எல்லாமும், உங்களுக்கும் எனக்கும் தரிசனம் எல்லாம் கிடைக்காது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  முரசொலி மாறன் எதிலும் பங்கேற்காமல் ,தியாகங்கள் இன்றி பலமடங்கு உடைமைகளை சேர்த்தவர்... அதே மாதிரிதான் தம்பியும் ......

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  ஜெயலலிதாவின் பல்வேறு தவறுகளில் இது போன்றவர்களை வளர்த்துவிட்டதும் அடங்கும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சபையை முறையாக நடத்த வேண்டிய பொறுப்புள்ள துணை சபாநாயகருக்கு அவையை முடக்குவோம் எனப்பேசும் தகுதியில்லை. சபாநாயகர் போலவே துணை சபாநாயகருக்கு அரசியலில் ஈடுபடுவதைத்தடுக்க விதிகளை உருவாக்கவேண்டும்

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  சீட்டுக்கும் அவமானம், நாட்டுக்கும் பாரம், ஆனால், சம்பள நோட்டுக்கட்டு மட்டும் ஏராளம். என் வரிப்பணம் வீணாகுது.

 • rajan. - kerala,இந்தியா

  இவன் குக்கர் விசில் சத்தம் கேட்டல் ஓடி போயிடுவான். இப்போ ஆதாய அரசியலில் மும்முரமா பதவி சுகத்தை காப்பாத்திக்க இடம் பார்த்து பார்த்து வெண்ணை தடவிகிட்டே இருப்பான் இந்த அதியமான் முதல்வன்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  இவர் யாருக்கு பின்னால் திரிபவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நன்றாக வேசம் போடுகிறார்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இவன்லாம் உதவி சபாநாயகராம் கேவலமாக இல்லை ?வேண்டுமென்றால் ராஜினாமா செயது விட்டு சபையை நடத்த விட மாட்டோம் என்று சொல்ல வேண்டும் அது இன்றி சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே இவ்வாறு செய்வது பெரிய ஸ்டண்ட்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement