Advertisement

ஜனாதிபதி, பிரதமருக்கு தனி விமான வசதி

புதுடில்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்துவதற்காக, இரு தனி விமானங்கள், சிறப்பு வசதிகளுடன் தயாராகி வருகின்றன. 2020ல், இது பயன்பாட்டுக்கு வரும்.


ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் பயணத்துக்காக, தற்போது, 'ஏர் - இந்தியா'வின், 'போயிங் - 747' ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.வி.வி.ஐ.பி.,க்களுக்கு என, தனியாக விமானம் வாங்க, அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், போயிங் நிறுவனத்திடம் இருந்து, 68 விமானங்களை வாங்க, ஏர் - இந்தியா நிறுவனம், 2006ல் ஒப்பந்தம் செய்தது. அதில், கடைசி மூன்று விமானங்கள், சமீபத்தில் வந்துசேர்ந்தன. இதில், போயிங் 747 - 300 ரக விமானங்கள் இரு, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட உள்ளன.


இந்த இரு விமானங்களை, ஏர் - இந்தியாவிடம் இருந்து, மத்திய அரசு வாங்க உள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இதற்காக, 4,469 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த இரு விமானங்களில், வி.ஐ.பி.,க்களுக்கு என, தனி அறை, நிருபர்கள் சந்திப்பு நடத்துவதற்கான வசதி, அவசர கால மருத்துவ சிகிச்சை வசதி உட்பட, பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.


மேலும், ஏவுகணைகள் தாக்குதலை சமாளிக்கும் திறனுடன் கூடியதாக, இந்த இரு விமானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.அதற்காக, ஜூன் மாதம்,
அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்துக்கு, இவை அனுப்பி வைக்கப்பட உள்ளன. 2020ல், இவை பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், 44 விமானிகள் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், குறைந்தபட்சம், நான்கு பேர், எப்போதும் டில்லியில் தயார் நிலையில் இருப்பர். அதே போல், விமான பராமரிப்புக்கென, தனி குழு அமைக்கப்பட உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (36)

 • Raajan - Mumbai,இந்தியா

  இருக்கிற இந்திய மக்களுக்கு அந்த வரி இந்த வரி என்று போட்டு ஓட்டாண்டி ஆக்கிவிட்டு, நீங்கள் தனி விமானத்தில் சுத்துங்க. நாடும் நாட்டுமக்களும் நல்ல வாழ்த்துவாங்க. இந்திய விவசாயிகள் செருப்பு வாங்க கூட வழி இல்லாம இருக்கிறான், நீங்க கிடைக்கிற வரியில் அத்தனை அரசியல் வாதிகளும் கூவத்தூரிலிருந்து உலகின் விலை உயர்ந்த விடுதி எங்க இருக்கிறது என்று தேடிப்பார்த்து போய் தங்குங்க. உங்களுக்கு லட்சக்கணக்குல சம்பளம் ஓய்வூதியம் எல்லாம் கிடைக்கிறது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் ???? "போன்ற" என்னும் இந்திய நாட்டின் சட்டம் இந்திய நாட்டை நிர்மூலமாகிவிட்டது. தயவு செய்து Be Very Categorical and Specific. ஓட்டை ஒன்றே நமது சட்டம் போல இருக்கின்றது. பிற்காலத்தில் போன்றவர்கள்-கவர்னர்கள், மந்திரிகள், எம்.பிக்கள். முதல்வர்கள், எம்.எல்.ஏக்கள்.......என்று கொஞ்சம் கொஞ்சமாக நீண்டுகொண்டே போகும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இந்தியா ஒரு ஜனநாயக நாடா ? மக்களாட்சியா நடக்கிறது இங்கே ??

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இத்தாலி இளவரசர் தான் பயணிக்க போகிறார் ஆகவே போலிமதச்சார்பற்ற மட்டைகள் வயித்தெரிச்சலை கொட்டவேண்டாம்.

 • narayanan iyer - chennai,இந்தியா

  மக்களின் தொண்டர் மக்களுடன் பயணித்தால் நன்று .

 • Divahar - tirunelveli,இந்தியா

  இதற்கு ஏற்றது மாதிரி கோட் வாங்கவேண்டாமா?

 • christ - chennai,இந்தியா

  ஏற்கனவே மஸ்தான் பாதி நாள் நம்மூர்ல இருக்கறது இல்ல .இப்ப தனி சொகுசு விமானம் வேற கொடுக்க போறாங்க மஸ்தான் இனி இந்தியாவிற்கு எப்ப வருவாரு என கேள்வி கேட்கிற நிலைமை வரப்போவுது ?

 • christ - chennai,இந்தியா

  மக்கள் வரி பணத்தில் குளித்து கும்மி அடிக்கிறார்கள் ?

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  இதற்காக, 4,469 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணத்தில் தென்னிந்தியாவின் அணைத்து நதிகளையும் இணைக்கலாம்.

 • Anandan - chennai,இந்தியா

  இந்தியா கண்டெடுத்த மிக எளிய பிரதமர் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் ஆனால் நடப்போதோ வேறு.

 • Suresh - Nagercoil,இந்தியா

  747 விமானங்களே காலாவதியானவைகள் அதை ஏன் இவர்கள் வாங்குகிறார்கள், நம்மூரில் தற்போது அம்பாசிடர் கார் வாங்குவதைபோல் உள்ளது..புதிதாக ஆர்டர் வாங்கி தயாரிப்பதை போயிங் நிறுவனம் நிறுத்திவிட்டது..இதன் பராமரிப்பு சிலவு அதிகம் அதே நேரம் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிய விமான வகைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை...

 • Divahar - tirunelveli,இந்தியா

  வங்கியில் கொள்ளை அடிப்பதை கண்டு பிடிக்க முடியவில்லை . செலவு செய்ய மட்டும் நன்றாக தெரிகிறது.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  இந்த ராக்கெட்டு விண்கலம் மாதிரி ஆர்டர் பண்ணி செவ்வாய்க்கு ஒரு பயணம் செல்லலாமே, சும்மா பூமியமட்டும் சுத்தி சுத்தி வந்தா போரடிக்காதா?

 • Rajinikanth - Chennai,இந்தியா

  கவர்னருமா வி வி ஐ பி ...?ஆட்டுக்கு தாடி போல அரசாங்கத்துக்கு கவர்னர் என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள் ...ஜனாதிபதிக்கு இந்த நாட்டில் பவரே கிடையாது ..ஆட்சியமைக்கும் போது பதவி பிரமாணம் செய்து வைக்கத்தான் இந்த இருவரையும் பார்க்க முடிகிறது ..தேவையில்லாத இந்த ஆங்கிலேய நடைமுறையை மாற்றினால்தான் தேவையில்லாமல் இவர்களுக்காக விரயமாகும் அரசாங்க பணம் மிச்சமாகும் ...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இந்தியா நன்கு பொருளாதார வசதியில் தான் இருக்கிறது, இந்தியாவின் எதிர்காலமும் சிறப்பாகவே இருக்குது, நிறைய தனியார் முதலாளிகள் கூட சொந்தமாக விமானங்களை வைத்துள்ளார்கள், எல்லாம் சரி, அனால் இதை காங்கிரஸ் செய்திருந்தால் மோடி சும்மா இருந்திருப்பாரா, பொங்கி திங்க சோறில்லை, குடிக்க தண்ணீர் இல்லை விமானம் ஒரு கேடான்னு, வித விதமா வசனம் பேசி கிழி கிழின்னு கிழிச்சிருப்பாரு, உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான், இவர் மட்டும் நேரத்துக்கு ஒரு வேஷம் போடுவார்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேவைதான்... மக்களுக்கு எல்லாவசதியும் செயது கொடுத்துவிட்டார்கள்... குடிக்க நல்ல குடிநீர் இலவசமாக கிடைக்கிறது... பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தடை செயது விட்டார்கள்... நல்ல தரமான சாலைகளை கொடுத்து விட்டார்கள்.. மின்சாரம், உணவை பொறுத்தவரை தன்னிறைவு பெற செய்த்துவிட்டார்கள்... தேசம் முழுமைக்கும் ஒரே சீரான தரமான கல்வியை கொடுத்து விட்டார்கள்... வேலைவாய்ப்பு நமது நாட்டில் எல்லோருக்கும் கொடுத்தது போக வெளிநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வேலை தருகிறோம்...

 • Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா

  அதான் மக்களை சுரண்டி பல்லாயிரம் கோடிகளைக் கண்டுள்ளீரே அனுபவியுங்கள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இது கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம் தான் . பாதுகாப்பு மிக அதிகம் தேவைப்படும் இக்காலத்தில் இது தவிர்க்கயியலாதது எதிர்த்து எழுதுவோர் நேர்மையாக கருத்தெழுத வாய்ப்பில்லை .அது வெறும் பொறாமையின் வெளிப்பாடே .

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  இவர்கள்தான் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்.

 • செந்தமிழ்அரசு -

  2020 ஆண்டில் தான் விமானங்கள் தயாராகும். அதை அனுபவிக்க திரு. மோடி அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதில்லை. பாவம்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அப்படி அவசர அவசரமா விமானத்துல இங்கிட்டும் அங்கிட்டும் பறந்து பறந்து துரித கதியில் இவங்க என்ன செய்றாங்க இந்த நாட்டுல..? வாய்ல பக்கோடா சுடுறதுக்கு எதுக்குய்யா இவ்ளோ உயர்ந்த விலையில விமானங்கள்?

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  உண்மையில் இந்த செலவு இப்போ தேவையானது, இந்தியாவின் முதல் குடிமகனுக்கு இது கண்டிப்பான தேவை

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  மக்கள் பணத்தை கோடிஸ்வரர்கள் ஆட்டயபோடுறார்கள், அரசியல் வியாதிகள் இதுபோல் நாசம்பண்ணுகிறார்கள். common man மோடிக்கு வாழ்த்துகள்.....மக்கள் முட்டாளா இருக்கும் வரை எதுவும் மாறப்போவதில்லை ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதியுள்ள விமானம் நிச்சயம் ஒட்டு மொத்த பயணச்செலவை குறைக்கும்... உதாரணத்துக்கு 30 பேர் இரவோடு இரவாக பயணம் செய்வது நிச்சயம் கூட்டமாக சென்று முந்தய நாளில் தங்குவதை விட குறைவாகவே இருக்கும்...

 • ஆப்பு -

  2050 க்குள் ஒவ்வொரு இந்தியனுக்கும் இதுபோன்ற விமான வசதி செய்து தரப்படும்னு சொல்லிருங்க....ஏழைகளின் பிரதமரும், குடியரசு தலைவரும்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  பாருங்க மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்துவிட்டது என்று இப்போதாவது ஒத்துக்கொள்ளுங்கள். அமெரிக்கா அதிபர் மாதிரி தனி விமானம். சும்மாவே மாதத்தில் இருபது நாள் சுற்றுலா தான். இப்ப தனி விமானம் வேற...பிரதமர் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார். பக்தாலுக்கு கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் பசுக்காவல் படையை ரெடி பண்ணுங்க. மோடியின் ஆட்சியில் வங்கிகள் மட்டும்தான் திவால் ஆகும். வேறெந்த வகையிலும் கஷ்டப்பட்டு ஊழல் செய்ய விருப்பமில்லை. எளிதாக வங்கியில் இருந்தே பணம் கிடைக்கும்போது, ஊழல்கள் எதற்கு செய்ய வேண்டும்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement