Advertisement

ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியல் : ரஜினி

சென்னை: ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : '' பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன். '' இவ்வாறு கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (61)

 • Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்படியே இமய மலையில் தங்கி பாபா ஆகிருங்க....... மகிழ்ச்சி...

 • tamilselvan - chennai,இந்தியா

  திரு சராவணம் கிருஷ்ணா அவர்கள் உங்களை போல் ஆட்கள் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  சினிமா , அப்புறம் ஆன்மிகம், அப்புறம் ஹாஸ்பிடல், அப்புறம் எப்போவது டைம் கிடைச்சா முழு நேர அரசியல் ,நல்ல இருக்குப்பா உங்க முழு நேர அரசியல்....

 • Magesh - Riyadh,சவுதி அரேபியா

  . நீங்களும்.... உங்க பயணமும்..

 • mindum vasantham - madurai,இந்தியா

  Anjuvathu pethaimai ippothu anjinaal 30 varudangalil tamilnadu kristhuva naadaka irukkum parava illayaa

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ///அமிதாப் நலம்பெற வாழ்த்து கூறிய இந்த ரஜினி, குரங்கணி தீவிபத்தில் பலியான 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்?/// - இந்த ஆதங்கம் எனக்கும் இருக்குங்க. என்ன செய்ய?, இப்படி அரசியலுக்கு வருபவர்கள், செலக்டீவ் மனிதநேயம் பேணுபவர்களாக இருந்தால், இப்படிப்பட்டவர்கள், நாளை, தமிழகத்தை ஆண்டால், அவர்களின் ஆட்சி செயல்பாடுகள் எல்லாம், செலக்டீவ் தன்மைகளுடன்தானே செயல்படும்?. தமிழக வாக்காளர்கள், இப்படிப்பட்ட நடிகர்களை புரிந்து கொண்டால் சரி எனலாம்.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இந்தியர்களை பொறுத்தவரை ஆன்மீகமும், இறை வழிபாடும், தேச வழிபாடும் ஒன்றே. மதச்சார்பின்மை என்ற ஒரு போலியான வேறெங்குமே இல்லாத சித்தாந்தத்தால் நாம் இழந்தவை எண்ணிலடங்கா... 47 இல் பிரிவினை ஒப்பந்தப்படி நாம் இந்து தேசமாக ஆகி இருந்தால், படேல் போன்ற தேசிய தலைவர் பிரதமர் ஆகி இருந்தால்மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருப்போம். ஒரே ஒரு குடும்பம் நாட்டை துவம்சம் பண்ணிட்டாங்க... சரி விடுங்க நடப்பதை பாப்போம்...

  • Anandan - chennai,இந்தியா

   முதலில் நேரு என்ன செய்தார் அவர் திறமை என்ன அவர் எவ்வளவு புத்தகங்கள் எழுதி உள்ளார் எப்படிப்பட்ட விஷயங்களை பேசி உள்ளார் அதை எல்லாம் தெரிஞ்சு கிட்டு வாங்க.

 • makkal neethi - TVL,இந்தியா

  தலை சுற்றுகிறதா கவலை வேண்டம் வாங்கி பருகுங்கள் பாபாவின் பதஞ்சலி பன்னீர் சோடா..

 • tamilselvan - chennai,இந்தியா

  ரஜினி அவர்கள் தமிழ்நாடு மக்களை பணத்தை சினிமாவில் நடித்து கொள்ளை அடித்து பணத்தை எல்லாம் கர்நாடகாவில் சொத்து சோந்து வைச்சி போது இப்போ அரசில் தமிழ் நாடு மக்கள் பணத்தை மொத்தமாக அடித்து கர்நாடாவில் கொண்டுபோய் சொத்து சேர்க்க ஒரு முடிவெடுத்திருக்கிறங்கள் ஏன்னா தமிழ் நாடு மக்கள் & ரசிகர்கள் இன்னம் முட்டாளாயிருக்கிறாகள்

  • fire agniputhran - jakarta,இந்தோனேசியா

   திராவிட கட்சி தலைவர்கள் கேரளா ,கர்நாடகா மற்றும் தெலுங்கு என மொழிக்கு 3 -4 தொலைக்காட்சிகளை துவங்கும்போது ரஜினி அவர் சொந்த ஊரில் பணத்தை கொண்டு சொத்து வாங்க கூடாதா? உங்கள் தலைவர்கள் ஈட்டிய பணத்திற்கு கணக்கு கிடையாது என்பது வேறு கதை....

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  ரஜினின் ஆன்மிக அரசியல் என்பது வேறு ஒன்றும் அல்ல பிஜேபி 2.0

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இதை ஒரு வாசகரின் கமெண்ட்டுக்காக போட்டதுங்க.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட்ராசக்க அட்ராசக்க, சூப்பர் சூப்பர்.

 • நற்செய்தி மாலை - Chennai,இந்தியா

  உண்மை உரைப்பதும், ஒழுக்கத்தை நிறைப்பதும், ஓரிறை காட்டும் தெய்வீகம். நன்மை புரிவதும், நன்றியைச் சொரிவதும், நாம் கற்க வேண்டிய ஆன்மிகம். பன்மை மதிப்பதும் பகைமையை மிதிப்பதும், படைத்தவர் பொழியும் அருள்மேகம். அண்மையில் நிற்கும் மனிதனை வெறுக்கும் ஆன்மீகங்கள் பொய்யாகும்

 • KGSriraman -

  ஆன்மீக, பயணம், முடித்து விட்டு அதாவது, நாம் ஒரு நல்ல காரியம் தொடங்கும் போது, இறை வழிபாடு செய்வது போல ரஜினிகாந்த், தனது ஆன்மீக பயணத்தை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக ஈடுபடப்போவது அறிந்து சந்தோஷம். இறைவழிபாடு, ஆன்மீகம், இரண்டும், ஒன்றுதான் இப்படி, இறைநம்பிக்கை உள்ளவர்கள் தவறு செய்ய யோசனை செய்வார்கள். எம்.ஜி. ஆர்., ஜெயலலிதா இருவரும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் தான். இருந்தாலும், ஜெயலலிதா செய்த சில தவறுகளால், அதற்கான தண்டனையை அவர் பெற்றார். மேலும் சிலர், அவரர் செய்த தப்புகளுக்கு ஏற்ப தண்டனை பெற்று அனுபவித்து உள்ளார்கள்... ரஜினியை பொறுத்தவரை ரசிகர் பட்டாளம் உள்ளது. வேண்டிய சொத்து, பணம் உள்ளது. கூடவே, தெய்வ நம்பிக்கை உள்ளது. வரட்டும் பார்க்கலாம்..

  • raghavan - Srirangam, Trichy

   அமிதாப் நலம்பெற வாழ்த்து கூறிய இந்த ரஜினி, குரங்கணி தீவிபத்தில் பலியான 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்?

 • mindum vasantham - madurai,இந்தியா

  Periyaar nallavaro kettavaro avar kaalathil valnthavarukke theriyum anaal avar peyaril irukkum veerame illatha "mani" kunjumani avarkal ,uthavatha sandiyarthanamum,pirivinayum pesi makkalai munera vidamatten enkiraan,avan meethu makkal gandil irukkindranar

 • Maddy - bangalore,இந்தியா

  ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் அரசியல் வருவது என்பது குதிரை கொம்பு போல... முதலில் அவர் ஹிந்து என்பதால் ஒருவித எதிர்ப்பு வரும் பிறகு அவர் கன்னடர் என்பதால் மற்றுமொரு எதிர்ப்பு வரும் அது மட்டும் இல்லாமல் கன்னடராகையா பெரியாரை ஏற்றார்களே என்று கேட்டால் பெரியார் ஹிந்துவையும் ஹிந்து சார்ந்த அனைத்தையும் எதிர்த்தார் அதனால் மற்ற அரசியல் காட்சிகள் ஏற்றுக்கொண்டன இவரோ முதன்மையாக ஹிந்து என்பதாலே எதிர்ப்பார்கள் தேவை இல்லாமல் அனைத்து கீழ்த்தர அரசியல்வாதிகளும் ஒற்றை இலக்கத்தில் திட்டுவார்கள் அதை என்னால் ஏற்கமுடியாது... கடந்த 60 ஆண்டு காலமாக எதையும் சாதிக்காத அரசியல் கட்சிகளும் சில வெளிநாட்டு சதிகார கட்சிகளும் சில குள்ளநரிகளும் சில ஜாதி அரசியல் தலைவர்களும் சேர்ந்து மக்கள் வைத்துள்ள மரியாதையை கெடுப்பார்கள் எனவேய அவர் பேசாமல் ஜனாதிபதி ஆவதே மேல் அந்த பதவிக்குத்தான் ஜாதியும் இல்லை அரசியலும் இல்லை அதே போல மாநில பாகுபாடும் இல்லை...

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  இங்க ரஜினி பத்தி விமர்சனம் பண்ணும் அறிவு ஜீவிகள் ஒரு நல்ல அரசியல் வாதியா காட்டுங்க வியாதியா இல்ல

 • VOICE - CHENNAI,இந்தியா

  காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுக்க பயந்து ஓடிவிட்டார் இவர். கர்நாடக தேர்தல் முடிந்ததும் மறுபடியும் வந்துவிடுவார். கர்நாடக சொத்தை காப்பாற்ற போடும் நாடகம், இவரு வந்து தான் தமிழ்நாட்டை காப்பாற்ற போறார் ? கூத்தாடி வந்தேறி எவரும் இனி தமிழ்நாட்டை அரசியலை நினைத்து பார்க்கக்கூடாது. கூத்தாடி இதுவரை தமிழ்நாட்டை கெடுத்தது போதும்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  உங்களை யார் இப்போ வெத்தலை பாக்கு வச்சு அழைச்சாங்க, இப்ப வருவேன், அப்புறம் வருவேன்னு நேரத்துக்கு ஒரு பேச்சு, சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னவர், எந்த ஒரு முக்கிய பிரச்சனைகளுக்கும் பதிலே பேசுவதில்லை, இதெல்லாம் பார்க்குறதும், நீங்க பேசுறத கேட்குறதும் எங்க தலையெழுத்து

  • sankar - trichy,இந்தியா

   அவரு வந்தா உங்களுக்கு ஏன் எரியுது . நாங்க எல்லாம் நல்லவர் ஒருத்தனாவது இருப்பானா என்று தேடுகிறோம்

  • இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து

   அவரை பார்த்து யாருக்கும் எரியல...ஆனால் 2018 லயும் இவ்வளவு முட்டாள்கள் வாழக் கூடிய மாநிலத்திலா பிறந்தோம் என்றுதான் வயிறு எரிகிறது...அடிப்படை அரசியல் அறிவு, ஆளுமை, சட்ட திட்டங்கள், பொருளாதாரம், அடிப்படை விஞ்சானம், வேண்டாமா, மக்கள் பிரச்சனைகளை பற்றியும், அதற்க்கான திட்டங்களும் வேண்டாமா?.. எல்லாவற்றிக்கும் மேல் சமூக அக்கறை அதை மேம்படுத்திக்கொள்ள வயது ?......

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  "Alaigal Ooivadhillai" so as this man Payanaingal also Ooivadhillai.He is along with his Payanaingal making the people fools.I don't know what he achieved by his Aanmeega payanam and going to be full time politician.He won't start any political party at this moment and will be doing his Payanaingal till with various names.

 • shyamnats - tirunelveli,இந்தியா

  இன்னுமா நம்பிக்கிட்டுருக்கீங்க? 30 வருசமா? புதுப்படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகுமபோது அரசியல் செய்வதும் பின்னர் அடுத்த பட தயாரிப்பில் மூழகுவதும் காலங்காலமாய் நடப்பதுதான்?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட கடவுளே, இதென்னப்பா, புது கரடி வெளிவருது?, அதாங்க, புது சினிமா கதை ரிலீஸ்ங்க?. அட தேவுடா?. இந்த உலகில் எல்லோரும், இந்த பூனையுமா?, என்ற கதைதானோ?.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இறக்கி விட்டுட்டானுக நீந்தித் தானே ஆகனும்.

 • Rajinikanth - Chennai,இந்தியா

  தியாக அரசியல் செய்வீங்கன்னு பார்த்தால்.... எப்போ வருவேன் எப்படி வருவேன்னு இன்னமும் த்ரில்லிங் அரசியல் செய்யும் உங்களை எல்லாம் நம்புவதற்கும் ஒரு கூட்டம் இருக்கு பாருங்கண்ணா ..அவங்களை நினைச்சால்தான் வேதனையா இருக்கு ...அந்தளவுக்கு தமிழக மக்களின் மனநிலையை மனநோயாளி கணக்காய் மாற்றி வைத்திருக்கும் அரிதார அரசியலுக்கு ஒரு ஜே ....

 • kodangi - Greenville,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)

  வயசான காலத்துல எதுக்கு சார், அரசியலுக்கு வந்து, இருக்கின்ற நல்ல பெயரை கெடுத்து கொள்கிறீர்கள்.... நீங்கள் பேசாமலேயே மீம்ஸ் போட்டு தாக்குறாங்க, நீங்க பேச ஆரமிச்சிட்டீங்க எங்களுக்கு நல்ல டைம் பாஸ் ஆகும் ... I am waiting ....

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  நீங்க ஆணியே புடுங்கவேண்டாம்..,எங்கயாவது நல்ல மடமா பார்த்து அங்கேயே இருத்துடுன்ன்க..,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்கள் இருவரும் மவுசு போன வயசான கூத்தாடிகள்... ஏதோ இருப்பது போல பாவலா செய்கிறீர்கள்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்கள் வந்தால் என்ன..? வராவிட்டால் என்ன..? யாருக்கு லாபம்,,? யாருக்கு நஷ்டம் ?

 • Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா

  ஓ அதற்குத்தான் அமேரிக்கா போறாரோ அப்போ டிரும்புக்கு சரியான போட்டிதான்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதை எல்லாம் எழுதி வைக்க எந்த ஆற்றிலும் தண்ணீர் போகவில்லை... வேண்டும் என்றால் காற்று அடிக்கும் திசையில் வானத்தை பார்த்து கையால் எழுதலாம்...

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  நம் தமிழ்நாட்டில் முதன்முதலில் மேக்கப் இல்லாமல் விக் இல்லாமல் டை அடிக்காமல் வெளியே வந்த நடிகர் இவர் தான். இவரின் நேர்மையான அணுகுமுறை அங்கே தொடங்குகிறது. இன்றைக்கும் இவரின் படத்திற்கு இருக்கும் மார்க்கெட் எல்லா நடிகர்களையும் விட அதிகம். 200 கோடி கொடுத்து பிராண்ட் அம்பாஸடராக இருக்க சொல்லி BMW கார் 2007 இல் கேட்ட போது நான் நடிகன் மட்டுமே குறிப்பிட்ட பொருட்களை மக்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டேன் என்று சொன்னவர். இப்போ சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் ரெண்டு நாள் அவர் கடை விளம்பரத்தில் நடித்து கொடுத்தால் 30 கோடி தருவதாக சொல்லியும் குறிப்பிட்ட பொருட்களை மக்களுக்கு வாங்க சொல்ல மாட்டேன் என்று நிராகரித்தவர். நான் அரசியலுக்கு வருவது சேவை செய்வதற்காக என்று சொல்வதை ஏன் நம்ப கூடாது. இதுவரை இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் சாதித்து விட்டது போல இவர் வரும் போதே இவர் மீது விமர்சனம் வைப்பது எந்த வகையில் நியாயம். உங்கள் அபிமான சீமான் வேல்முருகன் வைகோ திமுக அதிமுகவின் மூன்று அணிகள் என வோட்டு போடுங்கள். ஆனால் கீழ்த்தரமான விமர்சனங்களை வைக்காதீர்கள்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   நான் நடிகன் மட்டுமே குறிப்பிட்ட பொருட்களை மக்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டேன்..அப்படின்னா, அரசியலுக்கு வந்தா குறிப்பிட்ட கொள்கைகளை, குறிப்பிட்ட கொடியை, குறிப்பிட்ட சின்னத்தை மக்களுக்கு சிபாரிசு செஞ்சுதானே ஆகணும்??? நடிப்பை விட்டபிறகு, அரசியலுக்கு வந்துதான் சேவை செய்யணுமா? அப்படி ஒண்ணும் எங்கேயும் எழுதி வைக்கலையே. விளம்பரத்துல நடிக்காதது, அவரு இமேஜ் டேமேஜு ஆயிடக்கூடாதுன்னு தான், வேற ஒண்ணும் இல்லை.

 • Gopalsami.N - chennai,இந்தியா

  ஆன்மீகப்பயணம், அமெரிக்கப்பயணம் பிறகு???? அரசியலுக்கு முழுக்கு. எல்லோரும் ஒரு "ஓ" போடுங்கோ.

  • Sarara - Chennai,இந்தியா

   ஓ போடுறாங்களோ... இல்லையோ... நீ ஒரு சரியான பிளேடு போட்டுட்டா.. சரியான .....

 • mindum vasantham - madurai,இந்தியா

  Pirvinai pesuravanum kedu kettavanum,ilangai tamilarai konnavanum arasiyal pesum pothu rajini pesalaam,ippadi ethavathu ethirppu panikitte irunthu oru nalla aalu vara vidaama pannuvaanga

 • suresh - Tirupur,இந்தியா

  அப்போ திரிஷா( சினிமா) வோட வாழ்க்க...............?

 • S.Premachandran - Mississauga,கனடா

  மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு தான் வரவேண்டும் என்பது இல்லை. தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை எதாவது மக்கள் சேவை விஷயத்துக்கு நிர்ணயம் பண்ணி மேலும் இந்த மாதிரி உதவி செய்ய விரும்பும் மற்ற நல்ல மனிதர்களையும் சேர்த்து கொண்டு வேண்டுமானால் வெளி நாடு நன்கொடையைகளையும் வரவழைத்து நிறைந்த பொதுஜன சேவை செய்யலாம். வினோபாஜி அன்னை திசேரா எல்லோரும் அரசியலில் ஈடுபட்ட மக்கள் தெய்வங்கள் ஆனார்கள்.

 • Maha - Singapore ,சிங்கப்பூர்

  We support Rajini

 • ஆண்டவர் -

  சொகுசான ஆண்மிக பயணம், சொகுசான மருத்துவம், வந்ததும் சொகுசான அரசியல் பயணம்!! வாழ்க ஜனநாயகம்!!

 • ManiS -

  . Irangiyaachu... Oru kai paar.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இரண்டு மூன்று படங்கள் இயக்கியவர்களெல்லாம் நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறிக்கொண்டு சுற்றும்பொழுது ரஜினி அரசியலுக்கு வருவதில் தவறில்லை. வாருங்கள் தலைவா..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அ - அமெரிக்க பயணம், ஆ - ஆன்மீக பயணம், இ - இந்தியாவுக்கு பயணம், ஈ - ஈ ஓட்ட பயணம், உ - உருப்படாத பயணம், ஊ - ஊரை சுத்திப்பாக்க பயணம், எ - எதுக்கோ பயணம்.. ஏ - ஏண்டா இன்னுமாடா படிக்கிறீங்க.. ஆளை விடுங்கடா..

  • sankar - trichy,இந்தியா

   அமெரிக்கா பயணம் ஆன்மீக பயணம் இந்தியாவுக்கு பயணம் ஈர்ப்பு நிறைந்த பயணம் . உவகை நிறைந்த பயணம் ஊருக்கு உழைக்கும் பயணம் எளிமையான பயணம் ஏற்றம் தரும் பயணம் . ஐந்து வகை நில (குறிஞ்சி முதல் பாலை வரை ) பயணம் . ஒப்பில்லா பயணம் . ஓசை எழுப்பும் பயணம் (எதிரிகளுக்கு ) . ஓவுஷதமான (தமிழகத்துக்கு மருந்து ) பயணம் . ஃ பூ என ஊத்தி தள்ள போகும் பயணம் .

 • chails ahamad - doha,கத்தார்

  இன்றைய நிலையில் அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களை ஏமாற்றும் கலையறிந்தவர்களாக இருப்பது அவசியம் என்பதை உணர்ந்த திரு. ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக பயணம் எனவும் , அரசியல் ஈடுபாடு எனவும் மக்களை குழப்பி முதல்வராகி விடலாம் என கணக்கு போடுகின்றார் , முந்தைய காலங்களில் தமிழக மக்களில் பெரும்பாலோர்கள் சினிமா மாயையில் நடிகர்களை தேவ தூதர்களாக கண்டார்கள் என்பது உண்மையே என்றாலும் , தற்போதைய நிலையில் முந்தைய நடிகரால் அடைந்த அனுபவங்கள் ஏராளம் என்பதாலும் , அந்த நடிகர் கை காட்டிய நடிகையால் இன்றளவிலும் அவரது மறைவுக்கு பின்பாகவும் நடைபெறும் கோலங்களை கண்ட பிறகும் இனியொரு நடிகரின் பின்பாகவும் மக்கள் திரளுவார்கள் என கருதினால் அந்த வகையில் பெரும் ஏமாற்றங்களையே பரிசாக தந்தருள தமிழக மக்கள் விழிப்புணர்வுடனே உள்ளார்கள் என்பதை திரு . ரஜினிகாந்த் அவர்கள் உணரும் போது , வழி காட்டியவர்கள் தம்மை இயக்கியவர்கள் தவறான வழியில் தம்மை பிரயோகித்ததை உணர்ந்து , இமயமலையிலே நிரந்தரமாகவே ஆளை விட்டால் போதும் என தங்கி விடுவார் என்பதை காலங்கள் நிருபித்திடும் , மக்களை ரட்சிக்க வந்த தேவ தூதர்களாக இந்த நடிகர்களை பிரபலப்படுத்தும் சில ஊடகங்கள் வரிசையில் தினமலர் போன்ற பத்திரிகைகள் சேராது இருப்பதே பெருமைக்கு உரியதாய் மக்களுக்காண சேவைகளாய் இருந்திடும் .

 • ஆனந்த் -

  தலைவரின் இமயமலை பயணம் சுகமாக இருக்க வேண்டும்.

 • krishnan - Chennai,இந்தியா

  கெழவனுகளுக்குத்தான் இப்போ எல்லாம் ஆசை அதிகம்.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  சரி சரி போயிட்டு வாங்க வாழ்த்துக்கள் காத்திருக்கிறோம் உங்களின் பங்களிப்பை அறிய. எல்லாம் சரி அமெரிக்க போறீங்களே அதுவும் ஆன்மீகமா ? அல்லது நிதி நிர்வாக விஷயமா?

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஆன்மீக பயணம் முடிஞ்சதும் அமெரிக்காவிலுள்ள ஆஸ்பத்திரிக்கு போறார்னு இன்னொரு செய்தி சொல்லுதே..

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, நம்ம ஜனங்க, பெரும் கூட்டம் கூடி, புதிதாய் ஓர் கட்சி ஆரம்பித்துள்ள, ஓர் தலைவரை உசுப்பேத்தி, அதை நம்பி, அந்த தலைவர், தன் உழைப்பால் சேமித்த பணம் நகை வீடு கயனி காடுகளை அடமானம் போட்டு, தன் கட்சியை வளர்த்து வருகையிலே, பொது தேர்தல் வர, அதற்கு செலவு செய்ய, அங்க இங்க கடன்கள் வாங்கி, அத்தேர்தலில் தன் கட்சி முழுமையாக தோற்க்க, இப்படி தன்னை நம்ப வைத்து, தன் கட்சியினரும் பொதுமக்களும், பொதுதேர்தலில் ஆதரிக்காமல் கைவிட்டுட்டார்களே என்று, தினம் தினம், தன் மனம் வருந்தி, நினைவு கலங்கி, பெரு நோய்களில் விழுந்து, விரைவாகவே, அந்த தலைவரின் ஆயுள் முடிந்ததையா. (இந்த கருத்துக்கும், ஒரு நடிகர் உதாரணமாக, இருந்தார்தானே, நம் நாட்டில்). ஆக, யதார்த்த நிலையை பரிபூரணமாக உணர்ந்து கொண்டு, புத்திச்சாலித்தனமாக, தன் வாழ்க்கையையும், தன்னவர்கள் வாழ்க்கையையும் அமைத்து கொண்டு, சீறும் சிறப்புமாக வாழ்ந்துவிட்டு செல்வதுதானே, மிக சிறந்த விசயம் எனலாம்.

  • ஜெயக்குமார் - ,

   எப்படியும் அரசியல் ஆசை வந்துவிட்டது ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும் உங்களை அல்ல மக்களை மக்களை

 • RPM - Dindigul,இந்தியா

  தமிழகத்தை காக்க ... உங்களுக்கு அந்த பாபாஜி அருள் புரியட்டும்.... வாழ்த்துக்கள்..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  உ பி யோகி. அத்யானந்தா மாதிரி தமிழகத்திற்கு யோகி ரஜினிகாந்த் . இனி பசு குண்டர்கள் , மருத்துவமனையில் சிறுவர் கொலை , தாஜ் மஹால் எதிர்ப்புமாதிரி தமிழகமும் ஒரே கொலை கொள்ளையும்தான் . எங்கும் சீக்கிரம் தமிழகத்தில் உ பி மாதிரி எதிரிகள் என் கவுண்டர்தான்.

  • Srikanth - chennai,இந்தியா

   தமிழர்நீதி, எதையாவது உளறக்கூடாது.

  • sankar - trichy,இந்தியா

   தமிழர் பேதிக்கு ஆன்மீகத்துக்கும் மதத்திற்கும் வித்யாசம் தெரியல . கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நம்பிக்கை உள்ளவனை புண் படுத்துவான் (பெரியார் கருணாநிதி வீரமணி கமலா ஹாசன் ) . மத நம்பிக்கை உள்ளவன் அடுத்த மதத்தை கேலி பேசுவான் . ஆன்மீக நம்பிக்கை உள்ளவன் எல்லா மதத்தையும் மதிப்பான். அது தான் ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல்

 • Venkatesvaran G - Chennai,இந்தியா

  வி லவ் யு சோ மச்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement