Advertisement

'மாஜி' நடிகை ஜெயா பச்சனுக்கு 1,000 கோடி ரூபாய் சொத்து

லக்னோ : பாலிவுட் மாஜி நடிகையும், சமாஜ்வாதி மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெயா பச்சனுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி, ஜெயா பச்சன், 69. சமாஜ்வாதியை சேர்ந்த ராஜ்யசபா, எம்.பி.,யான இவரது பதவிக் காலம் நிறைவடைவதை அடுத்து, இம்மாதம் நடக்கும்
தேர்தலில் போட்டியிட, கட்சியின் சார்பில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுஇதற்கான வேட்பு மனுத் தாக்கலில், தன் மற்றும் கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தனக்கும், தன் கணவருக்கும், 460 கோடி ரூபாய் மதிப்பிலான, அசையா சொத்துகள் மற்றும், 540 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துஉள்ளார்.

கடந்த, 2012ல், சமாஜ்வாதி சார்பில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட, ஜெயா பச்சன், 152 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், 343 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

பணக்கார எம்.பி.,பா.ஜ.,வை சேர்ந்த, ராஜ்யசபா, எம்.பி., ரவீந்த கிஷோர் சின்ஹா, 2014ல், தனக்கு, 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது, ஜெயா பச்சன், ராஜ்யசபா உறுப்பினராக மீண்டும் தேர்வாகும் பட்சத்தில், அதிக சொத்துகள் உடைய, எம்.பி.,யாக இவரே இருப்பார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்தம்மா என்னமோ தன்னோட பணத்தை வச்சிருக்குரா மாதிரி சொல்றீங்க. எல்லாம் அமிதாப் பச்சனோட பணம் தானே. எந்த ஆடிட்டர் சொல்லி இப்படி இந்தம்மா கணக்கிலே போட்டாருன்னு கேட்டு சொல்லுங்க. அமிதாப்பச்சன் பெயர் எல்லா ஊழல் பேப்பர்களிலும் வந்த பிறகும், மோசடி தர்பாரின் விளம்பர தூதுவராக காசை அள்ளிக்கொண்டு தானே இருக்கார். மோசடியின் தயவு இந்த கூட்டத்துக்கு உண்டு.

 • vbs manian - hyderabad,இந்தியா

  முக்கால்வாசி பார்லிமென்ட் உறுப்பினர்கள் இவரைப்போன்று கோடானு கோடிஸ்வரர்கள் தான். சமீபமாக இவர்களது மாத சம்பளம் 80 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. வாழ்நாள் முழுதும் பென்ஷன். இலவச ரயில் விமான பயணம். இலவச டெலிபோன் கால்கள் எவ்வளவோ. இலவச பெட்ரோல்.மக்கள் சேவை செய்பவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் தேவையா இந்த ஜெயா பச்சன் சபையில் எவ்வளவு தடவை என்ன பேசினார் என்று யாருக்கும் தெரியாது. இரண்டு வேலை சோற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் தவிக்கும் இந்த நாட்டில் இப்படியும் ஓர் அவலம்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  இந்தியா வல்லரசுதான்.....இங்கு கேடிகளெல்லாம் சர்வ சாதாரணம்...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இப்படி சட்டம் இயற்றப்படவேண்டும். 100 கோடிக்கு மேல் சொத்து உள்ள சொந்தக்காரர்கள் இறந்த பின் அவர்கள் சொத்து அரசு கஜானாவுக்கு சென்றுவிடும், அவர்கள் பெயரில் நதிகள் இணைப்பு முதல் மின்சார வசதிகள் வரை எல்லா infrastructure development செய்யப்படும் என்று.

  • குமார்.சு - ,

   நல்ல யோசனை!

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். நேற்று பொறந்த அனுஷ்காவிடம் ரூ. 420 கோடி (+விராட் கோஹ்லி ரூ. 450 கோடி) அப்போ பழம் பெரும் நடிகை ஜெயாவிடம் (நம்ம ஜெயலலிதா கிடையாது) அதாவது உழைத்து சம்பாதித்த ரூ 1 ,055 கோடி அதாவது 1970 l அவர் ஒரு படத்திற்கு ரூ 10 கோடி வாங்கினார்-அப்படித்தானே???????, அவர் 100 படங்களில் நடித்து ரூ 1055 கோடி செய்தார். இப்படி எல்லா சொத்தையும் இவங்க அமுக்கி வச்சி என்ன தான் பண்ணப்போகின்றார்கள், இதை நம்ம வருமான வரித்துறை அப்படியே க்நே என்று கேனையான் மாதிரி பார்த்துக்கொண்டு இருக்கும் அப்படித்தானே. நடித்தது ஒரு 100 படம் இருக்கும் அதில் சேர்ந்த வருமானம் போனால் போகின்றது என்று வைத்துக்கொண்டால் கூட ரூ 10 கோடி இருந்தா அதிகம். நம்ம அமிதாப் தான் "கோன் பனேகா க்ரோர்பதி" முன்னாடி ஐ.பி. கொடுத்ட்க்ட்டு போக ரெடியா இருந்த ஆளாயிற்றே அவர் மனைவியிடம் அப்போ இந்த பணம் எல்லாம் இல்லையா????

 • balasubramanian - coimbatore,இந்தியா

  முறையாக வரி கட்டிய வருமானத்தைத்தான் வெளியில் சொல்ல முடியும்.மனிதருக்கு பல வழிகளில் பணம் வந்து குவிந்து விட்டது.வந்த பணத்தை காப்பாற்றி அதை பல மடங்காக பெருக்கிவிட்டார்.

 • chakra - plano,யூ.எஸ்.ஏ

  குரோர் பனேகாவிற்கு முன் அமிதாப் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் இருந்தார் . இப்போது எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வாழ்க உங்கள் தொண்டு..

 • Divahar - tirunelveli,இந்தியா

  மக்களுக்கு சேவை செய்ய இவர் மாதிரி ஆட்கள் தான் தேவை?

 • smoorthy - bangalore,இந்தியா

  இவர்களுக்கு எதற்கு ராஜ்ய சபா MP பதவி என தெரியவில்லை / கோடி கணக்கில் சொத்து இருக்கிறது / இவர்களுக்கு எல்லா வசதியும் இலவசமாக வேறு கொடுக்கிறார்கள் / மேலும் ஓய்வு பெரும் போது பென்ஷன் வேறு / வெக்கமாக உள்ளது / கட்சில எத்தனையோ உண்மையான தொண்டர் இருந்தும் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை / இவர்கள் ராஜ்ய சபா போய் இது வரை என்ன சாதித்தார்கள் ஒன்றும் புரியவில்லை /

 • Rajinikanth - Chennai,இந்தியா

  இப்படியே.. பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பணக்காரர்களுக்கு பதவி கொடுக்கும் இந்திய அரசியலின் இழிநிலையை கண்டுதான் உலகநாடுகள் கழுவிக்கழுவி ஊற்றுகின்றன ...மூட்டையை மூட்டையாய் கறுப்புப்பணம் பத்துக்கும் இருட்டு அரசியல்வாதிகளின் சொர்க்கபுரியாக இந்திய அரசியலமைப்பு இருக்கிறது ...ஜென்ம ஜென்மத்துக்கும் ஏழைகளும் பாமரர்களும் பாராளுமன்றத்துக்குளேயோ அல்லது சட்டமன்றத்துக்குள்ளேயோ செல்வதென்பது நடக்காத காரியம் ....கணக்கில் காட்டிய பணமே ஆயிரம் கோடி என்றால் கறுப்புப்பணம் எவ்வளவு இருக்கும் எனக் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் மக்களே ...எப்படி இந்தியா முன்னேறும் ....பெருந்தனக்காரர்களின் கொட்டடியாகவே மாறிப்போனது நமது பாராளுமன்றம் ...இவர்களுக்கு எங்கே ஏழை படும் பாடு புரிய போகிறது ....?

 • Jothi - PUDUCHERRY,இந்தியா

  இவர் வீட்டுக்காரர் இன்னும் ஜட்டி மற்றும் புட்டி விளம்பரத்தில் நடிக்கறாரு ...என்ன இன்னும் ஆசை பணத்தின் மீது ....காடு போகிற வயசு

  • sam - Bangalore,இந்தியா

   But he is not begging money from you, It is not illegal money .. hard earn money, what is wrong with it. If possible he can earn till death. Is it something wrong.. I do not see any.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இவங்க தான் நம்ம மக்களோட பிரச்சனைகளை பேசப்போறாங்க , எல்லா கட்சிக்காரங்களும் திறமையை மதிப்பதில்லை, காசு, பணம், இனம், குடும்பம் தான் பதவியை நிர்ணயம் செய்கிறது, ஒட்டுமொத்த அரசியல் இயக்கங்களையும் ஒழித்துக்கட்டவேண்டும், புதிய இந்தியாவுக்கு புதிய கட்சி, புதிய இயக்கம் வேண்டும்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வருமானதுறை தான் இதை கவனிக்கவேண்டும்... கணக்கு ஏற்கனவே அவர்களால் கொடுக்கப்பட்டு வரி கட்டி உள்ளார்களா..?>

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   பெரும்பாலும் சொத்து வெளியில் தெரியும் போது வரிகளை செலுத்தி விடுவார்கள்.. வருமானதுறை க்கு அதுதான் முக்கியம்.. வரி கட்டப்பட்ட சொத்து சரியாக வந்த சொத்தாகவும் எடுத்துக்கொள்ளப் படும். ஆனால், அது எப்படி வந்தது என்று ஆராய மாட்டார்கள்..

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  AMITHAB BACHAN, YEARS BACK, HAD GONE TO STAGE OF ISSUING INSOLVENCY NOTICE. NOW HIS WIFE S ASSETS WORTH MORE THAN Rs.1000 CRORES. HOPE, IT DEPARTMENT IS ALIVE TO THIS INFORMATION AND ACT AS PER RULES.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  ஏறக்குறைய ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அமிதாப் பச்சனுக்கு படங்களும் இல்லை , பண வசதியும் குறைந்துவிட்டதாக பத்திரிக்கை ஒன்றில் படித்ததாக நினைவு ..அது உண்மையானால் , இங்கேயும் ஏதோ குறுக்கு வழி புகுந்திருக்கிறது என்று தான் யூகிக்க முடிகிறது . ..அந்த செய்திக்கு பின் ,அவர் குரோர்பதி டிவி நிகழ்சியில் நடித்தார் ....குரோர்பதிக்களுக்கெல்லாம் குரோர்பதி ஆகும் வாய்ப்பு எப்படியோ கிடைத்திருக்கலாம்.///பெரிய பெரிய பணக்காரன் இருக்கிற நாடும் நம்ம நாடு தான் .பெரிய பெரிய ஏழைகள் இருப்பதும் நம்ம நாடு தான் ..இப்படி தான் வெளிநாட்டு மக்கள் நம்மை நாட்டை பற்றி இங்கே பேசி கொள்கிறார்கள் .

  • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

   உடுத்த உடை கூட சரிவர இல்லாது காலுக்கு செருப்பு போடக்கூட வக்கில்லாமல் பேரணி செல்லும் விவசாயிகளும் இங்கேதான்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement