Advertisement

ஆதார் எண் இணைப்பு காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு

புதுடில்லி: வங்கி கணக்கு, மொபைல் போன் எண் ஆகியவற்றை ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

'மொபைல் போன் எண், வங்கி கணக்கு போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் குறிப்பிடுவது கட்டாயம்' என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, மொபைல் போன், வங்கி கணக்கு மற்றும் பல்வேறு சமூக நல திட்டங்களை பெறுவதற்கான கடைசி நாள் 2018 மார்ச் 31 ம் தேதி என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மொபைல் போன் , வங்கி கணக்கு மற்றும் சமூகநல திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஆதார் வழக்கின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்ணை கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏதாவது ஒரு நீதிமன்றம் ஆதார் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவை இல்லை... உடனடி தேவை குடிக்க கட்டணம் இல்லாநல்ல குடிநீர்.. கட்டணம் இல்லா கழிப்பறை தேவை என்று சொல்லுகிறதா...?

 • ஆப்பு -

  முதல்லே இந்தத் தகவல் சரியான்னு சொல்லுங்க... பொறவு இந்தத் தகவலை HDFC வங்கிக் காரங்க காதுல போடுங்க... அவிங்க டார்ச்சர் தாங்க முடியலே... உங்க ஆதார் நம்பரை வங்கி கணக்குடன் இணையுங்கன்னு தினமும் இமெயில்லெ தகவல் அனுப்பி சாவடிக்குறாங்க... நம்ன அரசாங்கம் விவரம் இல்லாம இதுமாதிரி டுபாக்கூர் ஆணைகளை வெளியிடுவதும், சுப்ரீம் கோர்ட் அதை நிறுத்தி வைப்பதும், நீரவ் , லலித் போன்ற மஸ்தான்கள் ஆயிரம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடுவதும்....500, ஆயிரம் ரூவா கணக்கில் வெச்சிருக்கும் பொதுமக்கள் டார்ச்சர் செய்யப் படுவதும்...

 • Narayanan Sklaxmi - chennai,இந்தியா

  ஆதார் என்னை கிராஸ் வெரிஃபிகேஷன் சேய்ய ஒரு முறை ஏற்படுத்தி டெலிபோன் நம்பர் டிரேக்டரி போல் ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் பெயர் உள்ளவர்கள் ஆதார் என்னை இணைத்துவிட்டார்களா ஆமாம் / இல்லை என்று கண்டுபிடிக்க செய்தால் நல்லது அதன்மூலம் பொதுமக்கள் உண்மையான அரசியல் வாதிகளை கண்டுபிடிக்கமுடியும்

 • Giridharan Srinivasan - Chennai,இந்தியா

  கட்டாயம் மொபைல் போன் எண், வங்கி கணக்கு, வருமான வரி போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் நம் நாட்டிற்கு நம்மை பயக்கும்.. மேலும் இவ்வாறு இணைப்பது என்பது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் [அரசியல் வாதிகள், நீதிபதிகள், வக்கீல்கள், ....] இந்த சட்டம் பொருந்த வேண்டும். அதன் மூலம் பினாமி நடவடிக்கைகளை, வருமானத்திற்கு மேல் சொத்து சேர்ப்பவர்களை எளிதில் கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க முடியும். அதே சமயம், வருமானவரித்துறை பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு எளிய வழிமுறையை பின்பற்ற வேண்டும். தற்பொழுது உள்ளது போல் பான் அட்டையில் உள்ள பெயரும் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் வித்தியாசம் உள்ளது என்று மக்களை வருமான வரித்துறை படுத்துவதை நிறுத்த வேண்டும். உதாரணமாக, என் பெயர் பான் அட்டையில் கிரிதரன் என்று உள்ளது ஆனால் ஆதார் அட்டையில் கிரிதரன் ஸ்ரீனிவாசன் என்று உள்ளது என்றால் அதை வருமான வரித்துறை வெப்சைட் "பெயர் வேறு வேறாக உள்ளது, அதனால் உங்கள் பான் உடன் ஆதாரை இணைக்க முடியாது என்றும், உங்கள் பான் னையோ அல்லது ஆதாரையோ மாற்றிவிட்டு பான் னையும் ஆதாரையும் இணையுங்கள்" என்று வருகிறது. இது ஒரு முட்டாள்த்தனமான செயலாகத் தெரிகிறது. இதற்கு மாறாக வருமான வரித்துறை ஒருவரின் பான் நகலையும் அந்த நபரின் ஆதார் நகலையும் பெற்று தானாக இணைத்து விட வேண்டும். இங்கு மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். ஆதார் அட்டை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட நபர்கள் பலர் அதி புத்திசாலியாக இருப்பதாக தோன்றுகிறது. காரணம், என் பெயரை ஆதார் அட்டையில் Giridharan என்பதற்கு பதிலாக Kiritharan என்று அடித்து இருந்தார்கள். இந்த செயலை அவர்கள் என்னுடைய எந்த ஒரு ஆவணத்தையும் [வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட்] பார்க்காமல், நான் கூறுவதை மட்டும் வைத்து செய்து இருந்தால், தவறு இல்லை என்று கூறலாம். ஆனால் நான் மேலே கூறிய என்னுடைய எல்லா ஆவணங்களையும் பார்த்துவிட்டு செய்தது தான் கொடுமை. இதே போல் என் அப்பாவிற்கு எங்கள் வீட்டின் பெயரை எழுதுவதற்கு பதில் எங்கள் வீட்டின் பெயரை எங்கள் தெருவாக எழுதி விட்டார்கள். என் பெயரையும் என் அப்பாவின் ஆதாரில் உள்ள முகவரி தவறையும் உடனடியாக மாற்றி கொடுக்க வேண்டும் என்று கூறியதற்கு சம்பந்தப்பட்ட [முட்டாள்] அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இந்த மாதிரியான நபர்களை / அதிகாரிகளை கொண்டு ஆதார் அட்டை வழங்கினால், நாட்டில் பிரச்சனை தான் உருவாகுமே தவிர, கருப்பு பணம், பினாமி நடவடிக்கைகளை கண்டுபிடிப்படிப்பது மிகவும் சிரமம் ஆகிவிடும். ஜெய் ஹிந்த்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அரசின் அடிப்படை செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட்டு சொதப்புகிறது...

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   ஜனாதிபதி போன்ற பெரும் பதவி வகிப்பவர்களுக்கே கார் நம்பர் இப்பொழுது தான் தரப்படுகிறது ..... ஒருவரிடத்தில் பல செல்போன்கள் பல சிம்கள் இருந்தால் ஆதாருடன் எப்படி இணைப்பது என்பதற்கு வசதி (ப்ரொவிஷன்) இல்லை ....... சொதப்புவது அரசுதான் ...... அரசின் முடிவுக்கு நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்தித்திருக்க வேண்டும் ...... ஆதாருடன் பான் எண் இணைப்பதுதான், அது மட்டும்தான் அவசியம் ...... வங்கிக்கணக்கு மற்றும் மொபைல் எங்கள் இணைப்பு என்பதெல்லாம் தீவிரவாதத்தைக் களைய என்பதே சுத்த ஹம்பக் ..... உளறல் .....

  • Sakkanan Packiaraj - Virudhunagar,இந்தியா

   Both Pan & Aadhar data are collected and managed by government agency. Why cannot they link it by themselves? When there is conflict, which will be less than 10%, ask those people for appropriate information. What is happening is highly idiotic, What NIC is doing?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அரசியல்வாதிகள்,, அதிகாரிகளின் மதிநுட்பம் குறைவாக உள்ளதை இது காட்டுகிறது...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஆதார் கார்டு இணைப்பால் பினாமி க. பணம் புடிச்சாங்களா??? எங்கே, அமெரிக்காவிலா?? செம்ம ஜோக் பா. நடுத்தர மற்றும் ஓய்வு பெற்ற வயதானவர்கள் மற்றும் வயதான விதவைகள் பென்ஷன் வாங்க, ஆதார் கார்டு காரணமாக செத்து பொழைக்கிறாங்க என்பதே நிஜம்.

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   அப்ப 48 வருஷத்திலே எண்ணமே எல்லாவற்றையும் சாதித்து விட்டோம்.... என்கிறார்கள்? சாதித்தால் ஏன் கஷ்ட பட வேண்டும்? அதான் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி எவ்வளவு போச்சு, போக போகுதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கே எதிர் கட்சிக?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அவசர கோலத்தில் அள்ளி தெளித்த எந்த காரியமும் இப்பிடித்தான் இழுக்கும்...

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   அவசரமும் இல்லை தெளிக்கவும் இல்லை....அள்ளவும் இல்லை....கோர்ட் இழுத்து அடிக்கிறது

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  துக்கு லக்கு தர்பாரு

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   காலக்கெடு நீட்டிப்பு செய்தது நீதிமன்றம்? இதில் எங்கே துக்கு லக்கு?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  வருமா வராதா? வரும் ஆனால் வராது.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ///நல்லது. என் நண்பர் ஒருவர், ஏர்செல் சேவையை நிறுத்திவிட்டதால், ஆதரோடு இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஓ.டி.பி எண் பெறமுடியாததால், ஆதாரில் மாற்றம் செய்யமுடியாமல் திண்டாடி கொண்டிருந்தார்../// - இப்ப தெரியுதா அன்பரே?, BSNL-ன் அருமை பெருமைகள். பொதுவாக, தனியார் நிறுவனங்கள், எப்ப வேண்டுனாலும், தங்கள் உறுப்பினர்களை(பொதுமக்களை) நட்டாற்றில் விட்டுட்டு, எஸ்கேப் ஆயிடுவாங்கன்னு, கேரண்டியாகவே கூறலாம். உதாரணம், மல்லையாக்கள், நீரவ் மோடிக்கள், ஏர் செல் போன்றவர்கள் எனலாம்.

  • yila - Nellai,இந்தியா

   BSNL நத்தை வேகத்தில் இயங்குகிறது. அதற்கு போட வேண்டிய தீனியை ஆளுபவர்கள் கார்போரேட்டுகளுக்கு கொடுத்து வருகிறார்கள்.

  • Sakkanan Packiaraj - Virudhunagar,இந்தியா

   Aircel was fed to GIO.

 • chandkec - singapore,சிங்கப்பூர்

  It is worse than the THUKLAK dharbar. The deadline should be speleothems ,if not by date at least by the month. Government should not take its citizens for granted and insulting them at every opportunity. The so-called single digit elite group is not at all worried/ disturbed because they know how to cheat the tem or the govt machinery itself is ready to bail them out for an amount. Shame to be an Indian.. Disgusting.

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  ஆதார் அட்டை இந்திய மக்கள் அனைவரும் எடுத்துவிட்டார்களா. யார் நம்மை கேட்க முடியும், ஆதாருடன் இணைத்தால் பிரச்சனைகள் வரும் என்று அலட்சியமாக இருக்கும் மறைமுக மன்னர்கள் இருப்பார்கள். இந்திய குடிமகன்கள் அனைவரும் ஆதார் பதிவு செய்துள்ளதை அரசு உறுதிசெய்ய வேண்டும். சாதாரண மக்கள் மட்டும் செய்து பயனில்லை.

  • sundaram - Kuwait,குவைத்

   அதுமட்டுமல்ல இதே ஆதார் பற்றி ஆதாரினால் சாதாரண குடிமகனுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி 2014 க்கு முன்னர் நீதி மன்றத்தில் வாதிட்டதையும் வெளியிடவேண்டும்.

 • Raj - sivakasi,இந்தியா

  super

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஆதார் இனிக்கும், ஆதார் கசக்கும் ,ஆதார் இணைக்க வேண்டும் ,ஆதார் இணைக்க கூடாது என்று இதுக்கு ஒரு அரசாங்கம் நாலு வருடத்தை கழித்துவிட்டு தேசத்தை தூங்கவைத்துவிட்டார்கள் . ரொம்ப நல்லவர்கள் , உச்சநீதிமன்றம் எவ்ளவு அடித்தாலும் தாங்குகிறார் மோடி அண்ட் கோ . சுரணை அப்டீன்னு மானம் உள்ளவர்களுக்குத்தான் தெரியும் .

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அப்போ கறுப்புப்பணம் பினாமி ஒழிப்பு இவர்களுக்கு முக்கியமோ அவசரமோ இல்லை போலிருக்கிறது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "ஆதாரே இந்தியாவுக்கு வேணாம்டா.. ..." - அப்டீன்னு Congress period ல காவி சொம்புங்க சொல்லிற்றுந்தானுங்க.....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  வரவேற்க்கலாம்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நல்லது. என் நண்பர் ஒருவர், ஏர்செல் சேவையை நிறுத்திவிட்டதால், ஆதரோடு இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஓ.டி.பி எண் பெறமுடியாததால், ஆதாரில் மாற்றம் செய்யமுடியாமல் திண்டாடி கொண்டிருந்தார்..

  • VnJayaram - ,

   he can contact aadhaar center and give finger print and change what ever he want

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement