Advertisement

முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி

டேராடூன்: நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நடிகர் ரஜினி அதனை நிரப்ப அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர், இமயமலை கிளம்பி சென்றார். தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர் தொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.


அங்கு நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார்.


முன்னதாக இன்று காலை ரஜினி அளித்த பேட்டியில், ஆன்மிக பயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை. நடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (55)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மிக்ஸர் கம் கிரைண்டர் -ன்னு சொல்லுவாங்களே .... அது மேறி இவரு அரசியல்வாதி கம் நடிகர் .... சாரி .... அரசியல்வாதி கம் ஆன்மிகவாதி .....

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  என்ன? எனக்கு கல்யாணம் ஆயிருச்சா -ன்னா கேக்குறீங்க ? இன்னும் நான் வயசுக்கே வரல ....

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  தமிழகத்தின் முதல் பகுதி நேர அரசியல்வாதி ரஜனிகாந்த். part time politician and intern politician under BJP.

 • tamilselvan - chennai,இந்தியா

  ரஜினி முதல் உங்களை வாழவைத்து திரைபடைத்துறை சிஸ்டம் சரியில்லை அதை முதலி சரி செய்ங்கக்ள் அதற்கு அப்புறம் அரசில் பற்றி பேசிங்கள்

 • suman - Bangalore,இந்தியா

  இப்ப என்னதான் சொல்ல வரீங்க இமய மலை சாமி...?

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  இமயமலை யோகி இன்னும் ... வரவில்லை வந்தவுடன் முழு அரசியல் வியாதி ஆகி விடுவார்

 • Ganeshbabu - Chennai,இந்தியா

  முழுசா மாறின சந்திரமுகிய எப்ப பாக்கறது தலைவரே...

 • Vijay - Chennai,இந்தியா

  டிசம்பர் மாதத்தில் இவர் குவாட்டர், இப்போது Half அடுத்த வருடம் புள். ஆகா மொத்தம் நாம தான் போதையில் திரியனும்

 • sanjay rangarajan - chennai,இந்தியா

  He is an indecisive man. He will be a misfit in politics.

 • Adhithyan - chennai,இந்தியா

  ரஜினி நீங்கள் ஒரு சந்தர்ப்பவாதி ஒரு கோழை. சந்தர்ப்பவாதிக்கும் கோழைக்கும் ஆன்மிகமும் அமையாது அரசியலும் வெற்றி தராது.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  ippo thaan apprentice aa ? ... ini eppo kalyanam panni , pillai peththu ...? thalai suththuthu .. :)

 • kodangi - Greenville,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)

  இனிமேல் வந்தா என்ன வரலான என்ன

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எப்பவுமே ஆகமுடியாது நைனா... வேண்டும் என்றால் நடுவில் நடுவில் இது மாதிரி பீட்டர் விட்டு கொண்டு இருப்பீர்கள்...

 • Ram -

  இதுமாதிரி ஏயாவது உளறிக்கொம்டே இருங்கம். அப்போத்தான் நீங்கள் ஒரு....

 • ஆப்பு -

  போன வாரம் தானே கூத்தாடி எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தன்னால் தரமுடியும்னாரு? அதுக்குளேயே பல்டியா? டூப் போட்டு நடிங்கப்பு....உங்க எடுபுடிகள் மூலமா அறிக்கை வுடுங்க...தப்பா போச்சுன்னா எடுபுடியை நீக்கிரலாம்.

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  நீ ஒரு பயந்தாங்கொள்ளி கேமரா முன்னாடி தான் வீரமும் வசனமும் வரும். போன இடத்திலேயே நிம்மதியா இருங்க.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @mscdoc: இவர் என்ன அரசியல் கோர்ட் நீதிபதி யா? அரசியலுக்கு வர யாருக்கு தகுதி இருக்கிறது இல்லை என்று சொல்ல? கூட்டம் கம்மியா இருக்கிற பஸ்ஸில் தான் ஏறுவாங்க. சசிகலாவின் அடிமையாக டம்மி பீசாக இருந்த ஜெயலலிதா இருக்கிறப்போ அரசியலுக்கு வந்திருக்கணுமாம் கண்டுபுடிச்சுட்டார்பா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உங்களையும் நம்பறாங்களே.... அவர்களை அடிக்கவேணும்...

 • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஐயோ ..அவ்ளோ தானாதலைவா நீ எப்போ முழு நேர அரசியல்வாதி ஆகுறது நாங்க எப்போ கருத்து போடுறது..எங்களுக்கே வயசாகிப்போயிடுச்சு ...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அப்படின்னா அரை வேக்காடு ன்னு ஒத்துகிறாரா?...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அவர் தனிமை நாடி , இமயமலைக்கு சென்றுள்ளார், அவரை தொடர்ந்து சென்று , அரசியல் பற்றிய செய்தி, கேள்வி போன்றவற்றை கேப்பது அறிவீனம். அவரை விட்டுவிடுங்கள் , அவர் வந்தால் வரட்டும், இல்லை வேறு வேலையை பாருங்கள். எதற்கு சும்மா கிடப்பதை கிளறிக்கொண்டு உள்ளீர்கள்.

 • RSaminathan - Thirumangalam - Abu Dhabi,இந்தியா

  முழு மனுசனா என்றாவது சொல்ல முடியுமா?

 • makkal neethi - TVL,இந்தியா

  தன்னிலை மறந்தவன் கடவுளை நெருங்கலாம் மக்களை நெருங்க சுயசிந்தனை வேண்டும்.. இவர் இப்பொழுது தன்னிலை மறந்துவிட்டார் அரசியலுக்கு லாயக்கில்லை

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ///SasiKumar - 13-மார்-2018 16:51 ஏன் தேனியில் 11பேரோட உயிர் போயிருக்கு அதுக்காக ஒரு அனுதாபம் இல்லை........///. - இந்த நடிகர் தான், தமிழகத்தை வளர்ச்சிக்கு இட்டுச்சென்று, உலக தமிழர்களை காபாற்ற போகிறாராம்?, முதலமைச்சர் பதவிக்கு வந்து. எனவே இனிமேலாகினும், இவரை ஆதரிப்பவர்கள் திருந்துவார்களா?.

 • GV.குமார் -

  தலீவருக்கு தலயும் வழுக்கையாயிட்டுண்னு பார்த்தா மூளையும் வழுக்கையாயிட்டு.

 • Sandru - Chennai,இந்தியா

  இனிமேல் இவர் வயசுக்கு வந்தால் என்ன ? வராவிட்டால் என்ன? மாபெரும் கோழை.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Avare free ah poirukkaru,ethukku disturb panreengo,kundakka mandakka kelviyai vida nithanamana nambikkayana thalamayum munetramum thaan ippodhaya thevai

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  தலீவா.. அமிதாபச்சன் குணமடைய பிரார்த்திக்கிறது ஓகே.. அதே போல பாவம், அந்த கொலை செய்யப்பட்ட உஷா அவர்களோட ஆன்மா சாந்தியடையவும், தீ விபத்துலருந்து மீட்கப்பட்டவங்க குணமாகணும்னும் பிரார்த்தித்திருக்கலாமே தலீவா?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "பரட்டை கண்டிப்பா வரணும், மண்ண கவ்வனும்...." - இதான் என்னோட ஆசெ...

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  ஓ.. அப்படியா தலீவா.. அப்போ இப்போதைக்கு உங்களை 'அரைகுறை அரசியல்வாதினு' கூப்பிட்டுக்கவா தலீவா..?

 • matheen - chennai,இந்தியா

  இந்த ஆள நம்பி ஒட்டு போட்டா இமயமலைக்கு நாம போக வேண்டியது தான்.. நம்பிக்கை இல்லாத மனிதர் இவர்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அரை கிணறு தாண்டியாச்சு..

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  நேற்று வந்த சகாயம் தான் எப்போவோ அரசியலுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார். ஜெ இருக்கும் வரை அரசியல் பத்தி பேசாத கமல், தானும் எப்போவோ அரசியலுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார். ஆனால ரஜினி 1996 இல் இருந்து அரசியல் பற்றி பேசுகிறார் சினிமாவில் அரசியல் பேசுகிறார். அனால் தான் இன்னும் முழு அரசியவாதியாக மாறவில்லை என்கிறார் . இந்த அடக்கம் தான் ரஜினியை இவ்ளோ உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது.....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் , சமூக சேவகர்கள் , ஊடகத்துறை ஜாம்பவான்கள் , சமூக சீர்திருத்தவாதிகள் , இந காவலர்கள் , வர்க்க போராளிகள், மத நல்லிணக்க வாதிகள் ,சுதந்திர போராட்ட வீர்கள், மாணவ தலைவர்கள் , TASMAC ஒழிப்பாளர்கள் , ஊழல் ஒழிப்பாளர்கள், ராணுவ வீரர்கள் , எல்லாம் சிறை நிரப்பி , உண்ணாவிரதம் இருந்து நாட்டை காத்துவிட்டு இன்னும் சேவைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் .இந்த அரிதாரம் சிகரெட்டை தூக்கிப்போட்டு புகைத்து அதுதான் வீரம் என்று தமிழகத்தை கெடுத்துவிட்டு பகுதி நேர அரசியல் செய்யுதாம் இமயத்திலிருந்து இதுக்கு பாலூத்த ஒரு கூட்டம் . தமிழகம் ஜெயா , சசிகலா , பழனி ,பன்னீர் ,கமல் என்று உழுது போயிருக்கு அதுக்குள்ள இந்த காவி கறையான் நுழையுது .

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  இவர்கள் செய்வதையும் பேசுவதையும் பார்த்தtல் வடிவேலு சினிமாவில் நானும் ஜெயிலுக்கு போறேன் நானும் ..ரவுடி .............. தான் என்று கூவுவதை போலெ உள்ளது தமிழ் நாட்டில் ஒரு தலைவருக்கு இடம் காலியாக உள்ளது அதை தைரியமாக உண்மையாக யதார்த்தமாக நிரப்ப யாருக்கும் தில் இல்லை தற்போது டீ டீ வி தினகரன் அதை மிக மிக சரியாக செய்து கொண்டு வருகிறார் வந்தார் கண்டார் வென்றார் என்று செயல்படவேண்டும் - தாய் டீ டீ வி தினகரன் செய்கிறார் - ரஜினி கமல் இதை புரிந்து கொண்டால் சார்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, கடந்த காலங்களில், ஐந்து முறை, ஆறு முறை முதலமைச்சராக இருந்தவர்களின், கடந்த கால பேச்சுக்களை, அரசியலுக்காக, அவர்கள் தந்த போலி உறுதி மொழிகளை, ஒரு தடவையேனும் படித்து பாருங்களேன். அரசியலில் வெற்றிகள் குவிக்க, அவர்கள் எத்தனை எத்தனை பொய் புரட்டுக்களை, பொதுமக்களின் காதுகள் மீது, பூச்சரங்களாக சுற்றி, தொங்க விட்டார்கள் என்று. பிறகு நினைச்சு பாருங்கள், இன்றைய நாட்களில், அரசியல் செய்வது என்பது, எவ்வளவு மோசமான விசயம் என்று. அதிலும் அரசியலில், வெற்றி பெற முனைவது என்பது, எவ்வளவு ஆபத்தானது என்று உணர்வீர்கள்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  எல்லாமே பாதி..பாதி...ஆனமீகத்தில் ..பாதி....வாழ்க்கையில் பாதி.... அரசியலில் பாதி ...தாமரை இலை தண்ணீர் போல் ஓட்டும் ஒட்டாமலிரு...

 • mscdocument - chennai ,இந்தியா

  ரஜினி, கமல் இவ்விருவருக்கும் அரசியலுக்கு வர எந்த ஒரு தகுதியும் இல்லை. இவர்கள் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதும், கருணாநிதி அவர்கள் ஆரோக்கியமாக இருந்தபோதும் அரசியலுக்கு வந்து இருக்க வேண்டும் அப்படி வந்து இருந்தால் உண்மையிலேயே திராணி உள்ள மனிதர்கள் எனலாம். இப்போது இரண்டு பெருந்தலைகள் இல்லா வெற்றிடத்தில் இவர்கள் களம் காண நினைப்பது அருவறுப்பான அரசியலாகத் தெரிகிறது. இத்தனை வருடகாலமாக இவர்கள் பொதுமக்கள் இன்னலின் போது குரல் கொடுத்ததில்லை. எந்த ஒரு சிறிய அரசியல் பங்கீட்டையும் செய்ததில்லை. இவர்கள் அரசிலுக்கு வர ஒரு துளி அளவு கூட தகுதி அற்றவர்கள். இவர்கள் தேர்தலில் நின்றாலும் வெற்றி பெற மாட்டார்கள். கொள்கையும், நாட்டு மக்களின் மீது நலமும் இல்லா கூ முட்டைகளை அரசியல் அதிகாரத்தில் அமர்த்திப் பார்க்கும் அளவிற்கு தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி///உண்மைதான் தலைவர் இன்னமும் முழுநேரஅரசியல்வியாதியாதிகவில்லை, இப்போதான் ஆன்மீக பயணமாக டேராடூன் செல்லும்வழியில் தலைமை சொல்படி, இமாச்சல முன்னாள் முதல்வர் , மூத்த தலைவர் பிரேம்குமார் டுமாலை சந்தித்து ஆலோசனை செய்து, அரசியல் எப்படி செய்யவேண்டும், என்ன செய்தால் தன வீட்டுக்கு ரைட் வரமாட்டார்கள் என்று பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார் எங்கள் தலைவர்.

 • SasiKumar -

  ஏன் தேனியில் 11பேரோட உயிர் போயிருக்கு அதுக்காக ஒரு அனுதாபம் இல்லை. அமிர்தாப்பச்சன் ஆஸ்பத்திரியில் சேத்தவுடன் பேட்டியா

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  குவாட்டர் அரசியல்வாதி ஆகிட்டீங்களா?.....

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இன்ஸ்டாலமென்ட் ல வருவார் போல இருக்கு,....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement