Advertisement

நக்சல் தாக்குதல்; 10 வீரர்கள் வீர மரணம்

சுக்மா: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் தாக்குதலில் 10 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.


சிஆர்பிஎப்பின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் சத்தீஸ்கரின் சுகமா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்களின் ரோந்து பணியை முன்கூட்டியே தெரிந்திருந்த நக்சலைட்கள், அந்த பாதையில் ஏராளமான வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தனர்.


வாகனம் வந்ததும், வெடிபொருட்களை வெடிக்க வைத்தனர். இதில் 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மறைத்து வைத்த வெடி பொருள்களை கண்டுபிடிக்க இன்னும் சாதனம் வரவில்லையா...?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இது நமது ஒற்றர் படையின் , செயலற்றதனம் என்று கூறவேண்டும். போதிய முன்னெச்சரிக்கை இல்லாததாலும், கண்காணிப்புகளை பலப்படுத்தாததாலும் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  குரங்கனியிலும் இவர்கள் ஆதிக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறதே.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  ராணுவம் மற்றும் காவலர்களை தாக்கிய நக்ஸல்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.... இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்...அவர்களின் வாழ்வாதாரங்களை அரசு தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது தான்..... அதை தவிர்த்து இந்த நக்சல் அமைப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தலாம்.... ..அவர்கள் இந்த சோம்பேறி கம்மிகள் போலில்லாமல் உழைக்காமல் வாழ ஆசை படவில்லை..என்று படுகிறது.. எனவே அவர்கள் வாழ்வுக்கு உத்திர வாதம் அளித்தால் இந்த பிரச்சினை தீரும்....

 • senapathy n - CHENNAI,இந்தியா

  ராணுவ மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களையும் சாவதற்கே உள்ளனர் என்றும் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று என்பதை மறந்தும் அரசியல்வாதிகளினாலும் மீடியாக்களாலும் பொதுமக்களாலும் அலட்சியம் காட்டப்படுவதே இத்தகை ய மரணங்கள் எல்லையிலும் உள்நாட்டிலும் தொடர்வதற்கு காரணமாக இருக்குமோ?

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  This was anticipated when many naxalites were ed by the BSF somedays back.It is nothing but war.We shouldn't surrer to their demands.Our heartfelt condolences for the valiant jawans

 • Ram - Chennai,இந்தியா

  நக்ஸல்களை கையாளுவதற்கு ட்ரான்ஸ் தாக்குதல்(Drones attack) ஐ பயன்படுத்த வேண்டும்.

 • makkal neethi - TVL,இந்தியா

  அனுதாபங்கள்

 • MurugeshSivanBjpOddanchatram -

  நக்ஸலைட்டுகளுடன் சேர்த்து கம்யூனிஸ்டுகளும் அழிக்கப்படவேண்டியவர்கள்

 • MurugeshSivanBjpOddanchatram -

  வீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! இவர்களைவிட இவர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் மிக கொடூரமானவர்கள்,

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  காடுகள் மலைகள் இருந்தால் அதிக கவனத்தோடு செல்ல வேண்டும் தீவிரவாதிகளுக்கு காடு மலை அத்துப்படிகொரில்லா தாக்குதல் தாக்குவார்கள். நம்மிடம் எண்ணையை வாளியில் அள்ளுகிற தொழில் நுட்ப்பம் தான் உள்ளது. கொள்ளைக்கார அரசியல் வாதிகள் இந்த poor ராணுவ வீரர்களை பலி கிடாவாக ஆக்குகிறார்கள்.முடிவுதான் என்ன ?தொடர் கதையாக இருக்கிறது.

 • natarajan - Doha,கத்தார்

  வன்முறை என்றுமே தீர்வாகாது என்று எப்போது இவர்கள் உணர்வார்கள்? மறைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலை வணங்குகிறேன்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  வேதனை தரும் நிகழ்வுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது, மக்களை பாதுகாக்க தங்கள் இன்னுயிர் நீத்த தியாக வீரர்களுக்கு வீர வணக்கம் , அவர்களை இழந்து வாடும் குடும்பங்களிற்கு ஆழ்ந்த ஆனுதாபங்கள்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வீர வணக்கங்கள். நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறைய உள்ளது..

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  நசல்களை தேட ஆளில்லா குட்டி விமானம் அல்லது வெப் கேமராக்களை பயன்படுத்தலாமே...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இறந்த வீரர்களுக்கு என் வீர வணக்கங்கள் . அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை பிரதிர்க்கிறேன்.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  கொள்கையின் பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இந்த வெறி நாய்கள் செயலையும் நியாயப் படுத்துபவர்கள் அவர்களை விடவும் கொடியவர்கள். எதிர்த்து உயிர் துறந்த பாதுகாப்பு படையினர் நமது மரியாதைக்கு உரியவர்கள். அவர்கள் அடைந்தது- செய்தி தலைப்பில் சொல்லி இருப்பது போல- நிச்சயம் வீர மரணம்தான்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நக்ஸல்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடுமையாக இருக்கவேண்டும். இந்த ஆண்டிற்குள் மொத்தமாக அழிக்கவேண்டும் என்று இலக்கு வைத்து செயல்பட்டால் மொத்தமாக முடித்துவிடலாம். ஒன்று அவர்கள் இறக்கவேண்டும் இல்லை திருந்தி சரணடைய வேண்டும். இவர்களால் அந்த பிராந்தியம் முன்னேறாமல் இருக்கிறது.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஆன்றோரே, சான்றோரே, மேதைகளே, நிபுணர்களே, பெரியோர்களே கூறுங்க, இந்த 'நக்சல் தாக்குதல்', பிரச்சனைகள் தீர வழியே இல்லீங்கலா?.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ஆழ்ந்த அனுதாபங்கள்.... இந்த நக்சல் பிரச்சினையை நேர்மையா கையாளும் ஒரு அரசியல் வியாதி கிடைக்கும் வரை இந்த நட்டங்கள் மூலமா எத்தனை குடும்பங்களை பரிதவிக்க விடப்போகிறோமோ???

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement