Advertisement

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தெடார்பாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில்;


இந்திய பெருங்கடல், தென் மேற்கு வங்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடல் இலங்கை மற்றும் குமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , மாலத்தீவுக்கு கிழக்கே 290 கி.மீட்டர் வேகத்தில் மேலும் லட்சத்தீவு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென்தமிழகத்தில் 13, 14 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யலாம்.


குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை



குமரி மாவட்ட மீனவர்கள் 13, 14, 15 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் , அதிகப்பட்சமாக பாபநாசத்தில் 4 செ.மீ, மழையும், தொண்டியில் 2 செ.மீ., சிவகாசி, இளையான்குடியில் தலா ஒரு செ.மீ., மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இன்று பெரம்பலூரில் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்துள்ளது. காலையில் குமரி, நெல்லை, விருதுநகரில் லேசான மழை பெய்துள்ளது.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Ram - Chennai,இந்தியா

    பெய்யும் மழையில் எத்தனை கடலுக்கு தாரை வார்த்தோம் ?

  • MurugeshSivanBjpOddanchatram -

    எப்படியோ குடிநீர் பஞ்சம் வராமல் இருந்தால் சரி

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ஐயா, வருண பகவானே, அப்படியே, வட தமிழகத்துக்கும், இந்த புயலால் கிடைக்கும் மழை நீரை, வாரி வழங்குமாறு, மிக பணிவன்புடன், உங்களை, நான், பிரார்த்தனை செய்கிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement