Advertisement

குறைந்தபட்ச இருப்பு தொகை: அபராதத்தை குறைத்தது ஸ்டேட் வங்கி

மும்பை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையை, 75 சதவீதம் ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.


இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கியாக ஸ்டேட் வங்கி திகழ்கிறது. இதில் 41 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கி, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகையை வைத்து பராமரிக்க வேண்டும் என புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், இந்த அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கை:

குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, மெட்ரோ மற்றும் பெருநகர பகுதி வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்பட்ட அபராத தொயைான ரூ.50 (ஜிஎஸ்டி தனி) ஆனது, ரூ.15 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.40 (ஜிஎஸ்டி தனி) முறையே ரூ.12 (ஜிஎஸ்டி தனி) மற்றும் ரூ.10 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும், 25 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் கூறியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (38)

 • ஆப்பு -

  அப்போ அபராத தொகை வசூல் இலக்கை அடைந்து விட்டார்கள்...பரவாயில்லை நல்லா வேகமாகவே பணத்தை உருவிட்டாங்க... 2019 ல எலக்ஷன் வருதுல்ல....இதுமாதிரி ஸ்டண்ட் அடிப்பாங்க....ஜெயிச்சுட்டாங்க்கன்னா திரும்ப உருவல் ஆரம்பிச்சுரும்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  naadu vittu oadiya periya mudhalaikalin soththu, vanki kanakku ivaiikalai vasooliththaale, paamara makkalukku free banking service kodukkalaame. minimum balance etharku? Koadanu kodi makkalin vaervai sindhi uzhaiththa saemippukalai vaaraakkadanaaka indha vankikal kadan koduppatharkkaa? Vankiyil kanakkoa depositto seybavarkal, avarkal kodukkum siriya vattikku paeraasai patta seykiraarkal. illai. Than panam paadhukaappaaka irukkum endra noakkaththhil thaan. Nadakkamudiyaatha ondrai yoasiththu paarunkal. siru saemippu kanakkukal ellam moodappattuvittaal, indha vankikalin kathi. Velinaattu vankikal rajyaththil mazhai pozhiyum. BSNL/MTNL kathithaan vankikalukkum, private service providers aadhikkam perukiathu allavaa. adhe nilai inkum ethirpaarkkalaam. podhu vankikalil ivai ellaam maelum maelum nikazhndhaal, meendum privatisation thaan theervu. kanakku vaippavarkalukku evvallavu satta thittankal. idhupoal bank managementukku ondrum kidayaatha, Nalukku oru thaeseeya vanki scam.

 • suresh - Tirupur,இந்தியா

  இந்த எட்டு மாசத்துல அடிச்ச பணத்த வச்சு நட்டத்த ஈடுகட்டி இலாபத்துல கொண்டு வந்துட்டாங்க...... இனி நீரவ்மோடி போல ஒரு பரம ஏழைக்கு கோடிக்கணக்கில் வாரிக்கொடுத்து விட்டு இதே யுக்தியை மீண்டும் கொண்டு வருவார்கள். இப்போதைக்கு இந்த மகிழ்ச்சி எத்தனை நாள் என்பதுதான் கேள்விக்குறி....?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @Kuppuswamykesavan - Chennai, மிகவும் மடத்தனமாக பலவீனமான சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள் பாவம். யாருமே இங்கே மோ_ ஒழிக என்று சொல்லவேயில்லை. முதல்முதலாக நீங்கள் தான் அப்படி எழுதியிருக்கிறீர்கள். உள்மன ஆசை..பக்கத்து இலைக்கு பாயசம் என்கிற மாதிரி நீங்கள் சொல்ல விரும்புவதை பிறர் மேல் ஏற்றி எழுதியிருக்கிறீர்ள்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  எனது நண்பர் SBI வங்கியில் பணமாற்றும் முறைக்கு அதன் பட்டி எனப்படும் செயலியை பயன் படுத்தினார் . பட்டியில் 10000 rs வைத்து விட்டு அதை வேறொருவருக்கு மாற்றம் செய்ய முயன்றார். 3 % பணத்தை வங்கி ஆட்டைய போட்ருச்சு (ஆட்டைய போடுதல் என்றால் திருடுதல் எங்க வட்டாரத்துல ). வெறும் ரஸ் 10000 மாறுவதற்கு 333 எடுத்துட்டாங்க இது பகல் கொள்ளை ஆகாசக் கொள்ளை . நண்பர்களே பட்டி எனும் செயலியை தொடாதீர்கள் முடிந்தால் SBI வங்கிக் கணக்கை மூடுங்கள் . பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் . ஆங்கிலத்த்தில் இந்த செயலை organised loot என்பார்கள் .

  • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

   மிஷினுக்கும் கொள்ளையடிக்க கத்துக்கொடுக்கும் வங்கிகள்....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வேற வழி... நுகர்வோர்களை உங்கள் வங்கியில் இருக்க வைக்க இதுவும் ஒரு வழி...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இப்படி வங்கியின் லாபத்தை குறைத்தால், நீரவ் மோடிக்கு எப்படி கடன் கொடுக்க முடியும்? டிஜிட்டல் இந்தியாவை நாசப்படுத்திவிடாதீர்கள்....மல்லையாவிற்கு கொடுத்த கடன் திரும்பவரவில்லையென்றால், அதற்கு மக்கள் தான் பொறுப்பு என்று புது சட்டத்தை கொண்டு வந்தால் தான் இந்தியா உருப்படும்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  பேங்குல காசு வைக்காமுடியம இருக்குறவங்களுக்கு ந்த பேங்க் நடத்துற காரவுங்கதா காசு கொடுக்கணுமில்ல. அப்பத்தா நா எல்லம் அக்கௌன்ட் வைக்குவ.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அப்ப குச்சிவைச்சு அடிக்கமாட்டாங்களா?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அப்ப இதுவரை வாங்கிய தண்டமெல்லாம் sbi யின் லாபகணக்கிலே சேர்த்தாச்சா பகல் கொள்ளையாக இருக்கே

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   பணமே செலவில்லாமல் வங்கி நடத்துவது எப்படி என்று சொல்கிறீர்களா ? அதான் ஜன்தன் யோஜனா மூலம் அபராதமில்லாத கணக்குகள் தொண்டங்குகிறார்களே , அதை பயன்படுத்தி கொள்ள வேண்டியதுதான்.

 • sundaram - Kuwait,குவைத்

  நான் சம்பாதித்த பணத்தை வங்கியில் வைத்திருந்தாலும் அதற்கு குறைந்த வட்டியே கொடுக்கிறார்கள். இதில் அவர்கள் திருப்திப்படும் அளவு நான் என் கணக்கில் பணம் வைத்திருக்கவேண்டுமாம். இல்லையென்றால் அவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு என்னிடம் அபராதம் வசூலிப்பார்களாம். நல்ல ஜனநாயகம். இதற்குத்தான் 2014 ல் இவர்களை தேர்ந்தெடுத்தோம். கேட்டால் எல்லா மாநிலத்திலேயும் ஐயாயிரம் கோடிக்கு சிலை வைக்கிறோம் என்கிறார்கள். பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடுபவர்களை நல்லவர்களாக்கி அதற்க்கு ஈடு கொடுக்க ஏழைகள் சேமிப்பில் கைவைக்கிறார்கள்.

  • natarajan - Hyderabad,இந்தியா

   ஓய் அபிஷ்டு .SBI பிஜேபி கை பிள்ளையை இல்லை. அது லிமிடேட் கம்பெனி. . எல்லாத்துக்கும் BJP தான் காரணமா . கர்மம்

  • raja - Kanchipuram,இந்தியா

   மக்களிடம் எப்படி வசூலிப்பது என திட்டமிடுவது ஆட்சியாளர்கள் தான்

 • makkal neethi - TVL,இந்தியா

  அப்போ இவ்ளோ நாள் மக்களிடம் அடிச்சதுக்கு பெயர் கொள்ளையா? ஊழலா?.. எத்தனை ஆயிரம் கோடி? இந்த பணம் மக்கள் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதா ? மெகா ஊழலின் தொடர்கதைகள் இனி அடுத்து வரும் எபிசோடில் மக்களுக்கு தெளிவாக்குங்கள்

 • RAMESH - CHENNAI,இந்தியா

  The beggar also getting money from us with our knowledge but this SBI people looting money from customer without our knowledge... Worst service

  • Karthik - ,

   Correct 100%

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  முன்பெல்லாம் வங்கியில் பணம் இல்லாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படவில்லை, அப்போது மல்லையா போன்றவர்களுக்கு கோடிக்கணக்கில் அவர்களுக்கு கடன் கொடுத்ததே, அப்படி இருந்தும் வங்கிகள் திவாலாகிப்போகவில்லையே. ஒருவருடைய வாங்கி கணக்குக்கு அவரின் சம்பள பணம் நேரடியாக வருமாய் இருந்தால் அவர்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இது பல நாடுகளில் வழமையில் இருக்கு. அதேநேரத்தி ஒரு குறிப்பிட்ட தொகை பண பரிவர்த்தனை நடந்தால் கட்டணம் தேவை இல்லை,

 • M Pandiarajan - New York,யூ.எஸ்.ஏ

  ATM ல் பணம் இல்லை அல்லது ரிப்பேர் என்றால், நாங்கள் SBI ஐ சார்ஜ் செய்ய அனுமதி தருவார்களா?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  கடந்த ஆட்சி காலத்தில்... கடனாளிகள் பெயரை வெளியிட உச்சநீதிமன்றம் சொல்லியும் பெயரை வெளியிட மறுத்தவர் தான் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் இவரை மீண்டும் பதவியில் அமர்த்த தான் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஏன் தமிழக போராளிகள் கூட மோடியை விமர்சித்தனர் பிரதமர் மோடி அரசு கடனாளிகள் பெயரை அறிவித்தது விஜயமல்லையா கடன் வாங்கி தப்பியோட காரணத்தை ஆராய்ந்த மத்திய மோடி அரசு இம்மாதிரியான மோசடிகளை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதை தடுக்க மோடி அரசு NCLT (தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ) 2016 ல் அமைத்தது அடுத்து FRDI (financial Resolution deposits and insurance ) இந்த இரண்டும் தான் காங்கிரஸ் வளர்த்த ஒவ்வொரு முதலையாய் வெளிவர காரணம் கடனை அடையுங்கள் அல்லது கம்பெனியை வங்கியிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றது வங்கிகள் பல நிறுவனங்கள் பயந்து கம்பெனியை விற்று கடன் கட்ட தயாராகிறது எந்தப் பின்னணியையும் தெரிந்து கொள்ள மாட்டோம் வழக்கம் போல மோடி ஒழிக என குரல் கொடுப்போம்.

  • DuraimuruganRamachetty - ,

   fool

  • Kailash - Chennai,இந்தியா

   . ரகுராம் ராஜன் வரகடனை வசூல் செய்ய ரொம்ப கெடுபிடி செய்தார் பல நடவடிக்கை எடுத்தார் அவர்தான் வெளிப்படையாக இவ்வளவு இருக்கிறது என்று நாட்டுக்கு அறிவித்தார் அதுவரை இவ்வளவு கோடி இருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துஇருந்தனர்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  அதெல்லாம் சரி, ஆனால் புதிதாக ஒரு கட்டணத்தை போட்டிருக்கிறார்கள், காசோலை பணமில்லாமல் திரும்புவதற்கு கட்டணம் போடுவது போல , டெபிட் கார்ட் போட்டு பணமெடுக்கும் போது, ஒரு வேளை எடுக்க விருப்பப்பட்ட பணமில்லாமல் குறைவாக இருந்தால், பணமில்லாமல் அந்த நடவடிக்கை வங்கியால் நிறுத்தப்படும் போது , அந்த நிறுத்தப்பட்ட நடவடிக்கைக்கு இப்போது SBI கட்டணம் வசூலிக்கிறார்கள், கடந்தவாரம் ஒரு வங்கியில் இருந்து SBI க்கு மாற்றியபணம் , வங்கியில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக வரவு வைக்காமல் போக, அபராத கட்டணம் போட்டார்கள் ரூபாய் இருபது மற்றும் GST . இது அநியாயம் இல்லையா? இந்த நடவடிக்கையை இலவச மொத்த நடவடிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் அபராதம் அநியாயமில்லையா? பாமரர்கள் இனி அநியாய கட்டணம் கட்ட வேண்டி இருக்கும், அவர்கள் தவறுதலாக இதை போல நடந்துகொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

  • Kailash - Chennai,இந்தியா

   இந்த கட்டணம் ரொம்ப காலமாக இருக்கிறது... நேற்று கூட பணமில்லாமல் பல atm இயந்திரம் இயங்கவில்லை 4 இடம் அலைந்து திரிந்து எடுத்தேன். இதற்க்கு நாம் அவர்களிடம் இருந்து வசூலிக்கவேண்டும்... ஆனால் rbi ஒன்றும் செய்யாது. நான் என்ன செய்வேன் என்றால் எப்போதும் மற்ற வங்கிகளில் இருந்து இலவச வரம்பு இருக்கும் அந்த 3 பரிவர்த்தனை பணம் எடுப்பேன் அப்போதுதான் கணக்கு உள்ள வங்கி இன்னொரு வங்கிக்கு கட்டணம் செலுத்துவார்கள் அதனால் நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கும் காசு அவர்களுக்கு இழப்பாகட்டும் என்று அப்படி செய்வேன் அதுவும் அவர்கள் sms என்ன கூறும் என்றால் மற்ற வங்கிகளை விட எங்கள் வங்கியில் பாதுகாப்பு அதிகம் அதனால் வேறு வங்கி atm எடுக்காதீர்கள் என்று sms வரும் இவர்கள் காசை மிச்சப்படுத்த அப்படி மெசேஜ் வரும்.. atm கார்டு வருட கட்டணம் gst யோடு ரூபாய் 177 கழிக்கின்றனர் இது ரொம்ப அதிகம்... அதுவும் rupay கார்டுக்கு இதே கட்டணம் விசா கார்டுக்கு இதே கட்டணம் ஆனால் எப்போதும் default ஆக rupay கார்டு கொடுக்கிறார்கள் இது நம்மூர் தயாரிப்பு அவ்வளவு செலவு கிடையாது ஆனால் கொள்ளை கட்டணம் நம்மிடம் இருந்து வசூலிக்கிறார்கள் விசா கார்டுக்கு வருடத்திற்கு பெரிய தொகை கொடுக்கிறார்கள் ஆனால் rupay கார்டு இவர்களுக்கு லாபம். வாடிக்கையாளருக்கு ஒரு பிரோயஜனமும் இல்லை...

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   மாதம் மூன்று முறைக்கு மேல் கிளை சாராத வேறு ஏடிஎம் ல் டெபிட் கார்ட் பயன் படுத்தினால், சேவை கட்டணம் உண்டு. பணம் எடுத்தால் தான் சேவை என்றல்ல, எவ்வளவு இருப்பு என்று பார்ப்பதும் சேவையாக கருதப்படும். அதற்கு இருபது ருபாய் கட்டணம் போடுகிறார்கள்.

 • Prabhakaran - Delhi,இந்தியா

  பயன் பெறுவார்களா? அடப்பாவிகளா அவங்களோட பணம் அவங்களுக்கு கிடைச்சா அவர் பயனாளியா? இதில் பாதிக்கப்படுவது படிப்பறிவில்லா அப்பாவி ஏழை எளியவர்கள் தான். மோடி அனைவரையும் வங்கி கணக்கு ஓப்பன் பண்ண சொல்லிட்டு இப்படி வங்கிகள் வாட்டி வதைப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி?

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  பெரிய பணம் முதலைகள் பல ஆயிரம் கோடியே ஆட்டைய போட்டுவிட்டு ஜாலியாக கூத்தடித்து கொண்டு இருக்கிறார்கள் வெளிநாட்டில். ஆண்டு தோறும் வாரகடன்களை தள்ளுபடி செய்கிறீர்கள். ஏமாளிகளாகிய எங்களிடம் பணம் புடுங்குவது ....

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இன்றும் பேஸிக், ஜன்தன்  மற்றும்  No  FRILLS  கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு கட்டாயமில்லை.  ஆனால் இலவச உள்ளூர் காசோலை பரிமாற்றம், இணையவங்கி, கைபேசி வங்கி, ஏடி எம், இலவச காசோலை வசதிகள் வேண்டுமானால் குறைந்தபட்ச இருப்பு வைக்க கேட்கத்தான் கேட்பார்கள். இல்லையெனில் இவற்றுக்காகும் செலவுகளை   சமாளிக்கமுடியாது. அப்படிக்கேட்கும் குறைந்தபட்ச இருப்புக்கூட மாதாந்திர சராசரியின் இருப்புதான். இவையெல்லாம் ஏழைகள் கேட்கும் வசதிகளல்ல. அப்படி குறைந்தபட்ச இருப்பு வைக்க பிடிக்காதவர்கள் அஞ்சலக வங்கிக்கு மாறலாம். அங்கும்கூட Rs 100குறைந்தபட்ச இருப்பு கட்டாயம் .

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /போங்கப்பா..புடிச்சா கணக்கு வைங்க... இல்லையென்றால் நடையை கட்டு, அஞ்சலக வங்கிக்கு ஓடு... என்று SBI செய்தி தொடர்பாளர் சொல்லிட்டாருப்பா...ஒடுங்கப்பா. ஒடுங்க...

  • Kailash - Chennai,இந்தியா

   .பேசிக் அக்கௌன்ட் டில் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது இது தெரியுமா? சம்பளம் வாங்குபவர்கள் அதில் போட்டு விட்டு 4 முறைக்கு மேல் atm , நேரடியாக cheque, நெப்ட் என்று எடுத்தாலும் 4 முறைக்கு மேல் எடுக்கமுடியாது... இது புது விதி... அதற்க்கு மேல் எடுக்கவேண்டும் என்றால் அடுத்த மாதம் தான் எடுக்க முடியும்... இது நிறையபேருக்கு தெரியாது. அப்படி கஷ்டப்பட்டு வங்கியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை... டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற முழக்கம் வெறும் பேச்சாகத்தான் இருக்கும்...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சேமிப்பு கணக்கில் குறைந்த இருப்பு உள்ளதா உடனே வாடிக்கையாளர் தண்டம் கட்ட வேண்டும். ஏன் என்றால் அதிலே நஷ்ட்டம் வருகிறது, அதை வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கவேண்டும், அது சரி, இப்போது அந்த வங்கி அதிகாரிகள் கொடுத்த கடன் வராக்கடன் ஆகி அதனால் வங்கிக்கு நஷ்டம் வந்தால் அதற்க்கு யார் பொறுப்பு.? நாற்பத்தியோராயிரம் வாடிக்கையாளரின் பணம் அது, இந்த அதிகாரிகளுக்கு. அந்த பணத்தை வைத்து லாபம் சம்பாதித்து , வாடிக்கையாளருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டி , சம்பளம் , மற்றும் இதர சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இவர்கள் கொடுத்த கடன்கள் வாராக்கடன் ஆனால் , அவர்களுக்கு இதுவரை கொடுத்த சம்பளம், அனுபவித்த இதர சலுகைகைகள் அத்தனையையும் திரும்ப பெறவேண்டும். அதுதான் நியாயம்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   வங்கியின் அதிக பங்குகளை வைத்திருப்பவர்கள் கேட்காத கேள்விகளை வெறும் ஒன்றைரையணா கணக்கு வைத்திருப்பவர்கள் கேட்பதுதான் வேடிக்கை .தற்போது ஸ்டேட் வங்கியில் தேவைக்கு/சமாளிப்பதற்கு மேலேயே செயல்படாத கணக்குகள் உள்ளன ஆனால் ரிசர்வ் வங்கி சட்டப்படி அவற்றை வங்கி தானாக மூடமுடியாது அவற்றை நிர்வகிக்கும் கட்டாயம் மட்டுமுண்டு . முதலீட்டாளர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்

  • Kailash - Chennai,இந்தியா

   //ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா // வாரா கடனை வசூலிக்க துப்பு இல்லை... முன்னாள் SBI MD கூறிவிட்டார் ஒன்றைரையணா கணக்கு வைத்துள்ளவர்களிடம் கறார் காண்பிக்கிறது அதில் இருக்கும் அனா பைசா உட்பட பிடுங்க படுகிறது பல்லாயிரம் கோடி கடனை வைத்திருப்பவனிடம் ஒன்றும் புடுங்க முடியவில்லை இது ஒரு பிழைப்பா இங்கே பேச துணிவு இருக்கிறது அங்கே கூன் போட்டு காலை கழுவ முடிகிறது....

 • Srinivasan Guru Murthy - BANGALORE,இந்தியா

  This is the bank which has hidden huge amount running into crores from its NPA accounts and known only after full checking.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The people are started to close their accounts in these banks as the customers are not treated well and they are not able to withdraw their own money from these banks to meet their emergency needs and also not functioning of ATMs of these banks. Hereafter these SBI banks will work properly in order to get back the customers. This action is the sample for the future development of these banks.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  மக்களுக்காக வங்கி, மக்களால் வங்கி என்பது உண்மையானால், ஓர் பத்து ரூபா மட்டும் அபராதமாக வசூலிக்கலாமே?, செய்வார்களா?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement