Advertisement

அண்ணன் இறந்த அதிர்ச்சியில் நெஞ்சு வலியால் இறந்த தம்பி: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி

வேலூர்: குடியாத்தம் அருகே, அண்ணன் இறந்த துக்கம் தாளாமல், அதிர்ச்சியில், தம்பியும் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சுண்ணாம்பு பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாளின் மகன் வரதராஜ்,61; பைக் மெக்கானிக். இவருக்கு, மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். வரதராஜின் தம்பி ரவி,55; கார் டிரைவர். இவருக்கு, சுஜி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அண்ணன், தம்பி இருவரும், சிறு வயது முதலே பாசமாக இருந்தனர். நேற்று முன்தினம் மாலை, திருப்பத்தூருக்கு, பயணிகளை ஏற்றி கொண்டு, ரவி சென்றார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த, அவரது அண்ணன் வரதராஜ் இறந்தார். போன் மூலம் ரவிக்கு, உறவினர்கள் தகவல் கொடுத்தனர். காரை ஓட்டிக்கொண்டே, துக்கம் தாங்காமல் அழுத ரவிக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக, காரில் பயணித்தவர்கள், ரவியை மீட்டு, மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார். சாவிலும் இணை பிரியாத இருவரின் உடல்களையும், ஒன்றாக உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement