Advertisement

சிறுமியை திருமணம் செய்ததை கண்டித்த பெற்றோர் குடிசைக்கு தீ: 7 பேர் மீது வழக்கு

வேலூர்: நாட்றாம்பள்ளி அருகே, சிறுமியை கடத்தி, கட்டாய திருமணம் செய்து வைத்ததால், ஆத்திரமடைந்து, வீட்டுக்கு தீ வைத்த, ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியை அடுத்த, அக்ராவரம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஞானமணி,24. இவர், பக்கத்து கிராமமான வெட்டபட்டு பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதற்கு, சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 7ல், ஞானமணி சிறுமியை கடத்தி சென்று, திருமணம் செய்து, அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். சிறுமியின் பெற்றோர், ஞானமணியின் வீட்டுக்கு சென்று அவர்களது மகளை அழைத்த போது, ஞானமணியின் உறவினர்கள், அவர்களை தாக்கினர். சிறுமியின் பெற்றோர் வசித்து வந்த, குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். இதற்கிடையே, சிறுமியை அழைத்து கொண்டு, நாட்டறம்பள்ளி போலீசில், பாதுகாப்பு கேட்டு, ஞானமணி தஞ்சம் அடைந்தார். சிறுமியை மீட்டு, திருப்பத்தூர் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்தி, கட்டாய திருமணம் செய்ததாக, ஞானமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறுமியின் பெற்றோரை தாக்கி, வீட்டுக்கு தீ வைத்ததாக, ஞானமணியின் உறவினர்கள், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement