Advertisement

தொடர் அமளி: 7 வது நாளாக பார்லி முடங்கியது

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எந்த பணியும் நடக்காத நிலையில் 7 வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.


பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்காக, மார்ச் 5ம் தேதி, பார்லி., கூடியது. ஆனால்,கடந்த வாரம் முழுவதும், சபை கூடுவதும், ஒத்தி வைப்பதுமாக காட்சிகள் இருந்தன.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பிரச்னைக்காக, காங்கிரசும், திரிணமுலும் இணைந்துஅமளியில் ஈடுபடுகின்றன. இருப்பினும், பல்வேறு மாநில கட்சிகளின் ஆவேசம் தான், இரு சபைகளிலும் அதிகமாக உள்ளது.மாநில சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திர, எம்.பி.,க்களும், காவிரி பிரச்னைக்காக தமிழக, எம்.பி.,க்களும், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


7 வது நாளாக இன்றும் பார்லிமென்ட் எந்த அலுவலும் நடைபெறாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா துவங்கியதும், தெலுங்கு தேச எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.,க்களின் நடவடிக்கைக்கு வேதனைபடுவதாக ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

  இப்படி நாடாளுமன்ற முடக்கம் காங்கிரஸ் கட்சியை சாமாதி அடையச் செய்து கொண்டிருக்கிறது. எல்லாம் நன்மைக்கே.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  வங்கியில் வைப்பு தொகை இல்லை என்றால் கட்டணம், அதுபோல பார்லியை முடக்குபவர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தால் அடங்கிடும், இலவச போன், வாகன செலவு, தங்குமிட வசதி இவைகளை தடைசெய்தால் போதும், MP கள் செத்தே போய்டுவார்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ராஜீவ் பார்லிமெட்டை செயல்படாமலடிக்க ஷவுட்டிங் பிரிகேட் என்று ஒரு இளைஞர் எம்பி பட்டாளத்தையே வைத்து அமர்க்களம் செய்தது மறக்காது.இப்போது பல மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றவே போலி போராட்டம் எனத்தோன்றுகிறது

 • Shanmuga Sundaram - Bangalore,இந்தியா

  BJP will have tough time in next central election, also state-wise wins will not guarantee,,, now at least BJP in 20 states... they did not start river connecting program / simply in papers or proposal will not work, do start the work.. voted for BJP governance ...but no major benefits to south india

 • suresh - chennai,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாராளுமன்றத்தை பாஜக பல முறை முடங்கியுள்ளது, தற்போதைய முடக்கத்திற்கு எதிராக கருத்து போடும் பாஜகவினர், அப்போது என்ன பேசி இருப்பார்கள் என்பது சொல்லி தெரிவதில்லை. அது அரசியல், தற்போது அது நமக்கு தேவையில்லை, தற்போதைய முடக்கத்தின் ஒரு பகுதி, தமிழகத்தின் உரிமைக்காக நடக்கிறது, அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த நான்காண்டில் கடந்த ஏழு நாட்கள் தான் தங்கள் கடமையை சரிவர செய்துள்ளனர், ஒட்டு மொத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வாழ்த்துக்கள், முடக்கம் என்பது தவறு என நினைப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துங்கள் என தமிழகம் கேட்கிறது, தீர்ப்பை அமுல்படுத்துக என கேட்பதே மத்திய அரசிற்க்கே கேவலம், அதைவிட கேவலம், அந்த கேவலத்தை சுட்டி காட்டாமல், அந்த கேவலத்திற்கு துணை போகும், தமிழக பாஜக ஆதரவு என்பது கேவலத்திற்கு எல்லாம் மகா கேவலம்.

 • suresh - chennai,இந்தியா

  சந்திரபாபு நாயுடு குற்றசாட்டு கவனிக்கத்தக்கது, "தென்னிந்தியர்களின் பணத்தை வடஇந்திய வளர்ச்சிக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது" ,,,50 வருடங்களுக்கு முன் இதை தான் தமிழகம் சொன்னது, வடக்கே வளர்கிறது, தெற்க்கே தேய்கிறது என்று,,,,சீனாவால் இந்தியாவை வெல்ல முடியாத ஒரே துறை மென்பொருள்துறை, அந்த துறை வாயிலாக ,ஐதராபாத் , பெங்களூரு, சென்னை இவைகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் மட்டும், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளை இந்தியா அரசு கஜானாவில் சேர்க்கிறது, இது போக, உலகெங்கும் உள்ள தென்னிந்திய மென்பொறியாளர்களின் ஊதியம் வாயிலாக அந்நியசெலவாணியும் கணிசமாக உயர்கிறது. அந்த வருமானத்தின் பயனை, சரியாக நம்மை வந்தடையவில்லை, இது காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு ஆட்சிகளுக்கும் பொருந்தும்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  //எம்.பி.,க்களின் நடவடிக்கைக்கு வேதனைபடுவதாக ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.// விதைத்தானே அறுக்கமுடியும். அனுபவி ராஜா அனுபவி.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  தமிழ் நாடு எம்பிக்கள் நடு மையத்தில் போய் போராட்டம் பண்ண வில்லையா? அடங்கி விட்டார்களோ?

 • suresh - chennai,இந்தியா

  ஏழு நாட்களாக பயனற்று போன பாராளுமன்றம், ஏழு நாட்களில் இது வரை 65 கோடி வீண், இதற்க்கு யார் பொறுப்பு ? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் பஞ்சாப் வங்கி கடன் வழங்கியது என்றால், அது குறித்து பாஜக விவாதிக்க தயங்குவது ஏன்? ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்றால், அது குறித்து மத்திய குழு சந்திர பாபு நாயுடுவுடன் ஆலோசனை செய்ததா? அல்லது மோடி அது குறித்து தனிப்பட்ட முறையில் பாராளுமன்றத்திற்கு வெளியே நாயுடுவுடன் பேசினாரா? ஏன் அளிக்க முடியாது என பகிரங்கமாக மத்திய அரசு அறிவித்ததா? சிறப்பு அந்தஸ்துக்கு மாற்றாக மாற்று திட்டம் ஏதேனும் அறிவித்ததா? காவேரி நீரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, காவேரி நீரை தீர்ப்புப்படி பகிர்ந்து அளிக்க ஓர் குழு அமைத்து ஆறு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மூன்று வாரம் வெட்டியாக கடத்திய பின், ஏன் நான்கு மாநில அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் என மேலும் இழுத்ததடிக்க வேண்டும், ஏன் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அமைச்சர் பேட்டி தர வேண்டும் ? குறித்த காலத்திற்குள் அமைக்க முடியாது என ஏன் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் ? குழுவோ அல்லது மேலாண்மை வாரியமோ, காவேரி அணைகள் தீர்ப்புப்படி மத்திய அரசு ஏன் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை ? காவேரியில் கர்நாடக அரசியல், பஞ்சாப் வங்கி பிரச்சனையை எதிர் கொள்ள தயக்கம், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து சட்டப்படி அளிக்க முடியாது என்பதை விளக்க ஆந்திர மக்களிடம் பயம்., தவறுகள் அனைத்தும் பாஜக மீது,,,பாராளுமன்ற முடக்காதால் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் பாஜகவே காரணம் .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  காரணம் எதையாவது காட்டி, மக்களவை நடைபெறுவதை தடுத்துநிறுத்தவேண்டும் என்பது ஒன்றே குறி.

 • MurugeshSivanBjpOddanchatram -

  அரசியல் செய்ய இவர்களுக்கு பாராளுமன்றம்தான் கிடைத்ததா

 • MurugeshSivanBjpOddanchatram -

  எதிர் கட்சிகளின் செயலால் மக்களின் வரிப்பணம் வீண்

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  இனி அமளி செய்வதற்கு என்று ஒரு நேரம் ஒதுக்கி, அந்த நேரத்தில் மட்டும் எந்த கட்சியும் அமளி செய்யலாம் என்று பரிந்துரை செய்யலாம். அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும் என்று அறிவிக்கலாம். மற்ற நேரங்களில் மன்றம் பயனுள்ளதாக அமைய வேண்டும். இந்தியாவில் பல மாறுதல்கள் செய்யப்பட வேண்டும். நமது பாராளுமன்றமும், உறுப்பினர்களும், சட்டசபை மற்றும் அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்கின்றனர். பல மரபுகளும் மாற்றப்பட வேண்டியவை. மாற்றம் வேண்டும் என்று கூறுபவர்கள் முதலில் அவர்களது நடவடிக்கைகளை மாற்ற வேண்டும். சம்பளத்தை, அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை மட்டும் அல்ல. மக்களை நினைத்து முக்கியமாக விவசாயிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள் நலிந்து போகாமல் இருக்க வழி செய்யவேண்டும். உதாரணமாக தமிழகத்தில் வெண்கலம், பித்தளை தொழில், பட்டாசு தொழில், கைத்தறி-நெசவு தொழில், பாய் முடைதல், செருப்பு-ஷூ தொழில் முதலியவை. மாநில அரசு கட்டாயம் செக் டேம் கட்டவேண்டும் என்று அறிக்கை கொடுக்க வேண்டும். மாநிலங்களின் பணியாக இருந்தாலும், சில அரசியல் கட்சிகளுக்கு ஆளுமை இல்லை. வளர்ச்சிக்கான பரிந்துரைகளை / ஆலோசனைகளை, அதை மக்களுக்கு பயனுள்ளதாக செய்யும் விபரங்களை மத்திய அரசு வழங்கலாம். இலவசம் என்பதை நிறுத்தி வைத்து விட்டு, வளர்ச்சி என்கிற பாதையை வளர்த்து விடலாம். மக்கள் கிராமங்களில் இருந்து நகரத்துக்கு படை எடுக்கும் காரணிகளை ஆய்ந்து அவர்களை கிராமத்தில் இருந்தபடியே நல்ல பணம் சம்பாதிக்க, வசதியான வாழ்க்கை வாழ வழி செய்ய வேண்டும். இது மேம்போக்காக எல்லா அரசியல் கட்சிகளும் பேசினாலும், நடைமுறையில் இல்லை. விவசாயிகளிடம் இருந்து பெற்ற நெல் மூட்டைகளை காப்பதற்கு இடம் இல்லை, அதற்க்கு கழக அரசுகள் இதுவரை எதுவும் செய்ய வில்லை. இதில் மாநில சுயாட்சி என்று வீராப்பு மட்டும் பேசுகின்றனர். இதற்க்கு மத்திய அரசு என்ன செய்யலாம் என்று ஆய்ந்து அதை மத்திய அரசும் தன் பரிந்துரைகளை கூறி, உதவி செய்யலாம்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  எதிர்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பார்லிமென்ட் முடங்கியே இருக்கும் நிலைக்கு அச்சாரம் போட்டுவிட்டார்கள். இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாட்கள் இவை.

 • Power Punch - nagarkoil,இந்தியா

  தொடரட்டும் உங்கள் மாநில பணி...வெற்றி பெரும் வரை....

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  They don't care.They do it as a tamasha. People are also indifferent. So they may resort to some other trick tomorrow. When they want to pass a bill they will do it without any discussion whatsoever.

 • makkal neethi - TVL,இந்தியா

  நியூட்டன்ஸ் புத்தியே விதி ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இவங்கள தேர்ந்தெடுத்ததுக்கு மக்கள் தான் வேதனைப்படணும். போன முறை பாஜக இந்த முறை எதிர்க்கட்சிகள் . இவர்கள் விவாதம் நடத்த செல்கிறார்களா? அல்லது கலாட்டா செய்ய அங்கு செல்கிறார்களா?

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  ஈத்த கேட்டா கானா பாலா பாட்டுதா நைனா நினைவுக்கு வருது..காசு பண துட்டு மணி மணி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement