Advertisement

அரசு டவுன் பஸ்- பைக் மோதல்: எலக்ட்ரீசியன் உட்பட இருவர் பலி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, அரசு டவுன் பஸ், பைக் நேருக்கு நேர் மோதியதில், எலக்ட்ரீசியன் உட்பட, இருவர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, பென்னங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ், 24, எலக்ட்ரீசியன். அதே பகுதியை சேர்ந்தவர் சிவா, 19, தனியார் கம்பெனி தொழிலாளி. இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு, தேன்கனிக்கோட்டையில் நடந்த, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இருவரும் யமகா பைக்கில், பென்னங்கூர் திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை சிவா ஓட்டினார். பென்னங்கூர் அருகே இரவு, 9:45 மணிக்கு, ஓசூரில் இருந்து, தேன்கனிக்கோட்டை நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ்விபத்தில், ஹரிஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த, சிவாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், நேற்று இறந்தார். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி விசாரிக்கிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement