Advertisement

ஆசிரியை சாவில் மர்மம்: போலீசில் தந்தை புகார்

கரூர்: கரூர் அருகே, ஆசிரியை சாவில் மர்மம் உள்ளதாக, போலீசில் தந்தை புகார் செய்தார். கரூர் மாவட்டம், புலியூர் காளிப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 40, லாரி ஓட்டுனர். இவரின் இரண்டாவது மனைவி வெண்ணிலா, 32, கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வெண்ணிலா வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சாவில் மர்மம் உள்ளதாக, அவரது தந்தை கந்தசாமி, 55, பசுபதிபாளையம் போலீசாரிடம் புகார் செய்தார். நேற்று காலை, விசாரணைக்கு உறவினர்களுடன், கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வந்த கந்தசாமி கூறியதாவது: மகேந்திரனுக்கு, ஏற்கனவே சூர்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். எனது மகள் வெண்ணிலாவை காதலித்து, கடந்த, 2012ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு வெண்ணிலாவை, மகேந்திரன் கொடுமைப்படுத்தி வந்தார். இதனால், வேதனையில் இருந்த மகளை, நாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்போம். அவர் சாவில் மர்மம் உள்ளது. போலீசார் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement