Advertisement

குரங்கணியில் சிக்கியவர்களில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் விபரம்

சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் பிரபு, 30; இவர் திண்டலில், டூர் டி இன்டியா ஹாலிடே என்ற சுற்றுலா அலுவலகம் நடத்துகிறார். இதன் மூலம், கடந்த, 9ல் ஒரு குழுவினர், தேனி மாவட்டம், குரங்கணிக்கு மலையேறும் பயிற்சி, சுற்றுலா புறப்பட்டனர். பிரபுவுடன், ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார், கண்ணன், விவேக், சக்தி கலா, சவிதா, திவ்யா, நேகா, தமிழ்செல்வன், திருப்பூரை சேர்ந்த ராஜசேகர், சாதனா, பாவனா என, 12 பேர் கிளம்பினர். கடந்த, 10ல் இவர்கள் ரஞ்சித் என்ற வழிகாட்டியுடன், கொழுக்குமலை ஏறினர். அங்கு இரவில் டென்ட் கேம்பில் தங்கினர். அவர்களுடன் சென்னையை சேர்ந்த அருண், 26 பேருடன் வந்து, இரவில் தங்கினர். மறுநாள் (11ம் தேதி), மதியம், 2:00 மணியளவில் காட்டுத் தீ ஏற்படவே, அவசர, அவசரமாக இறங்கினர். வழிகாட்டியாக வந்த ரஞ்சித், ஈரோட்டு குழுவை, வேறு பாதையில் அழைத்துச் சென்றார். ஆனாலும், தீ சூழ்ந்தது. தப்பிக்கும் முனைப்பில், அனைவரும் திசைக்கு ஒருவராக பிரிந்தனர். இதில் ரஞ்சித், பாவனா, சாதனா, நேகா, ராஜசேகர், பிரபு தப்பித்து, குரங்கணிக்கு வந்தனர். மற்ற ஆறு பேரும் தீயில் சிக்கியுள்ளனர். விவேக், தமிழ்செல்வன் பலியாகிவிட்டனர். மற்ற நால்வர், பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement