Advertisement

கவுந்தப்பாடி சாப்ட்வேர் இன்ஜினியர் உள்பட 2 பேர் காட்டுத்தீயில் பலி

கோபி: குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கிய, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேரில், கவுந்தப்பாடியை சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர் உள்பட இருவர் பலியாகினர்.தேனி மாவட்டம், கொழுக்கு மலைக்கு சுற்றலா மற்றும் மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள், நேற்று முன்தினம் காட்டு தீயில் சிக்கினர். இவர்களில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, எட்டு பேர் அடங்குவர். அவர்களில், கவுந்தப்பாடியை சேர்ந்த நான்கு பேர், விபத்தில் சிக்கினர். கவுந்தப்பாடி, பொம்மன்பட்டி, மகாத்மாபுரத்தை சேர்ந்தவர் விவேக், 28. சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் மனைவி திவ்யா, 25; இவர் கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லூரியில் பணிபுரிகிறார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 24; இவர் டி.எம்.இ., முடித்துவிட்டு, சென்னையில் பணிபுரிந்தார். கவுந்தப்பாடி, ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் கண்ணன், 26, ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனர். இதில் விவேக், தமிழ்செல்வன் இறந்து விட்டனர். திவ்யா, கவலைக்கிடமாக உள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement