Advertisement

ஜாமின் பெற்ற கலிதாவுக்கு மற்றொரு வழக்கில் கைது வாரண்ட்

டாக்கா: மாஜி வங்கதேச பிரதமருக்கு மற்றொரு வழக்கில் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது. கடந்த 2001 முதல் 2006 வரை வங்கதேச பிரதமராக கலிதா ஜியா இருந்த போது, அவரது பெயரில் செயல்பட்டு வந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அளவு நிதி பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், கலிதா ஜியாவுக்கு டாக்கா சிறப்பு கோர்ட் 5 வருடம் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தற்போது கலிதா ஜாமின் பெற்ற நிலையில் ,கலிதா ஜியா ஆட்சியின் போது அவர் மீது போடப்பட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளுக்காக கோமில்லா மாவட்ட கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நாடுகள் வித்தியாசம் இன்றி அரசியல்வாதிகள் என்றாலே முறைகேடுகள் மொத்த உருவம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement