Advertisement

வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

துரைப்பாக்கம்;நாமக்கல்லைச் சேர்ந்தவர், முகமது சுகேல், 18; சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, பெருங்குடி அருகே, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சுகேலின் மொபைல் போனை பறித்து தப்ப முயன்றனர். அங்கிருந்த துரைப்பாக்கம் போலீசார், மூவரையும் மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் விசாரித்ததில், தாழம்பூரைச் சேர்ந்த சூர்யா, 18, வீராசாமி, 18, விக்னேஷ், 18, என்பதும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபட்டு வருவதும் தெரியவந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, மூன்று மொபைல் போன்கள், ஓர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement