Advertisement

சின்னமலை - டி.எம்.எஸ்., இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை;சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், நேற்று நடந்தது.சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கும்; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே பணி முடிந்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், நேற்று மாலை முதல் துவங்கியுள்ளது. நான்கு பெட்டிகளுடன், இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம், மேலும் சில நாட்கள் தொடர்ந்து நடக்கும்.'இப்பாதையில், பயணியர் ரயில் எப்போது இயக்கப்படும்' என, அதிகாரியிடம் கேட்டதற்கு, 'அது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்த பிறகே, பயணியர் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். 'நேருபூங்கா - சென்ட்ரல் இடையே விரைவில், பயணியர் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் போது, மீடியாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மெட்ரோ ரயில் நிர்வாகத்தால், போட்டோ மற்றும் வீடியோ, மீடியாக்களுக்கு வழங்கப்படும். நேற்று, ரயில் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் மீடியாக்களுக்கு அனுப்பப்படவில்லை.இது குறித்து, மெட்ரோ ரயில். செய்தி தொடர்பாளரிடம் கேட்டதற்கு, 'சுரங்க நிலையங்களில், ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள, கண்ணாடி, 'ஸ்கிரீன்' கதவுகள் பூட்டபட்ட நிலையில், ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால், போட்டோ, வீடியோ எடுக்க முடியவில்லை. 'ரயில் இயக்கப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட சுரங்கப்பாதை படம் மட்டும் மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என, தெரிவித்தார்.ஏப்ரல், 15ல் பயணியர் ரயில்நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே, வரும், 28ம் தேதி, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், மெட்ரோ ரயில் இயக்கி, சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர், அனுமதி கொடுத்த பின், ஏப்.,15 முதல், பயணியர் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement