Advertisement

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் எப்போது?

சென்னை;நிதி நெருக்கடி காரணமாக, தமிழக பட்ஜெட்டுக்கு பின், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும். இந்தாண்டு, இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. நாளை மறுநாள், தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதன்பின், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பல ஒப்பந்ததாரர்களுக்கு, பல கோடி ரூபாய் நிலுவை பாக்கி உள்ளது. மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், மத்திய அரசு நிதியும் கிடைப்பதில்லை.
தமிழக பட்ஜெட்டுக்கு முன், பட்ஜெட் தாக்கல்செய்தால், 650 கோடி ரூபாய் வரி வசூலை மட்டும்வைத்து தான், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
தமிழக பட்ஜெட்டில், உள்ளாட்சி அமைக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரத்தில், சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் நிதியை பார்த்து, பட்ஜெட் தயாரிக்கப்படும். இம்மாத இறுதியில், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement