Advertisement

சாலையில் ஓடும் கழிவு நீர்:நாற்று நடும் போராட்டம்

பூந்தமல்லி;பூந்தமல்லியில், சாலையில் தேங்கும் கழிவு நீரை அகற்றாததை கண்டித்து, நாற்று நடும் போராட்டத்தில், பொதுமக்கள் ஈடுபட்டனர்.பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட , 14வது வார்டு, ரைட்டர்ஸ் சாலையில், பல நாட்களாக கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம், கொசு தொல்லை அதிகமாகி, தொற்று நோய் பரவும் சூழல் அதிகரித்துள்ளது.பல முறை புகார் தெரிவித்தும், கழிவு நீரை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வராததால், ஆத்திரமடைந்து, கழிவு நீரில் நாற்று நடும் போராட்டத்தில் இறங்கினர்.

பொதுமக்கள் கூறியதாவது:இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பல நாட்களாக, கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் தேங்குகிறது. துர்நாற்றம் அதிகமாக உள்ளது. இப்பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காணாவிட்டால், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    கழிவுநீர் செல்ல சாக்கடை இருக்கிறதா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement