Advertisement

பாக்.,கில் ஹிந்து பெண் செனட்டராக பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண், செனட்டராக நேற்று பதவியேற்றார். அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள, தார்பார்க்கர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணகுமாரி கோஹ்லி, 39. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் பிறந்த இவர், தலித் இனத்தைச் சேர்ந்த, ஹிந்து பெண். இவர், பாக்., மக்கள் கட்சியில் சேர்ந்து, அரசியல் பணியாற்றினார்.இந்நிலையில், பாக்., மேல்சபையில், 51 செனட்டருக்கான இடங்கள் காலியானது. இதற்காக, சிந்து மாகாணத்தில் இருந்து, சிறுபான்மையினருக்கான இடத்தில் போட்டியிட்டு, கிருஷ்ணகுமாரி வெற்றி பெற்றார். இதன் மூலம், பாக்.,கில், செனட்டராக பதவி ஏற்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த, முதல் தலித் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார். பாகிஸ்தான் பார்லிமென்டில், செனட்டராக, இவர் நேற்று பதவியேற்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • sundaram - New Delhi,இந்தியா

    after 60 years of independence in pakistan, first time person belongs to dalit category becomes senate member. this is very shameful for pakistan. it shows how much minority community is suffered and still suffering including kidnapping of hindu girls and convert to islam.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement