Advertisement

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: கமல் குற்றச்சாட்டு

கோவை : ''தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் தெரிவித்தார்.


கோவையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது: குரங்கணி காட்டுத் தீ விபத்து, யாரும் எதிர்பாராதது. அரசு, உரிய நடவடிக்கை எடுத்து உள்ளது. விமர்சிப்பது சரியானது அல்ல. காணாமல் போனவர்களை, கண்டுபிடிப்பர் என, நம்புகிறேன்.


தற்போது நிகழ்ந்த விபத்தை, ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள்,

வனப்பகுதியில் அஜாக்கிரதையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பீடி, மதுபாட்டில்களை வீசுவது, வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் ஆபத்தாக முடிகிறது.


தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை. விபத்துக்கும், குற்றங்களுக்கும் தொடர்பில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தீர்வு கிடைக்கவேண்டும்.


விவசாயிகளுக்கும், தமிழர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள், தண்ணீரை சேகரிக்க
வேண்டும்; சேமிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., தவறான முடிவு எனச் சொல்லவில்லை; செயல்படுத்தப்பட்ட முறை தான் சரியில்லை.நல்ல திட்டங்களை வேண்டாம் என்பதை விட, எப்படி அமல்படுத்த வேண்டும் எனக் கூற, பல அறிஞர்கள் இருக்கின்றனர். அதை செவிமடுத்தால்போதும்.


இரு நாட்கள் சுற்றுப்பயணத்தில், நான் மகிழ்ந்து போனேன் என்பதை விட, என் மீது இவ்வளவுபாசமா என, நெகிழ்ந்து போனேன் என்பது தான் உண்மை.இவ்வாறு அவர் கூறினார்.முதல்வருக்கு பதிலளிக்க மறுப்பு சென்னை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: மத்திய, பா.ஜ., அரசை, நான் விமர்சிக்காமல் இல்லை; அவசியம் வரும்போது விமர்சிப்பேன். விமர்சனம் என்பது, ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். எனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தான், அரசியலுக்கு வந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். அதற்கு, நான் பதிலளிக்க விரும்பவில்லை; மக்கள் பதில் சொல்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (51)

 • tamilselvan - chennai,இந்தியா

  கோவை : ''தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் தெரிவித்தார். கமல் அவர்கள் முதல் உங்களை வாழவைத்த சினிமாவில் உலகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது முதலில் அதை சரி செய்ங்கள் அதற்கும் தமிழ் நாடு வாங்கள்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  நேத்து கருப்பு சட்டத்தை போட்டுக்கிட்டு கிஸ்தி (GST ) மோசம் ன்னு சொன்னாரு இன்னிக்கு வெள்ளையும் சொள்ளையுமா வந்து , கிஸ்தி (GST ) மோசம் இல்ல இத செயல் படுத்துறதுல தான் சரி இல்லன்னு சமாளிக்கிறார் . இது வேற வாய் அது நார.இவர் சொல்லுற எல்லா கருத்தையும் மாத்தி மாத்தி சொல்லுவாரு . இவர்க்கு இமயமலை அய்யா செய்வது சரியோன்னு தோணுது . உதறிவிட்டு மாறுவதைக் காட்டிலும் உலராமல் இருப்பது நன்று.

 • ram - chennai,இந்தியா

  'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு இப்போது பரவாயில்லை கமல் சார்.. நீங்க வந்தா என்ன ஆக போகுதோ...???

 • Sundaram - Thanjavur,இந்தியா

  தமிழகத்தில் சட்டம் ,ஒழுங்கு நிலையாக உள்ளது

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  கிறிஸ்தவ அடிமையாக அருமையாக வேலைபார்க்கும் கமலுக்கு கூடிய சீக்கிரம் மக்கள் செருப்படி கொடுப்பாரகள்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  வரும் தேர்தலில் ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் முடிவு கட்டுவோம் புதியவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் , எல்லோரையும் எதாவது ஒரு காரணம் சொல்லி ஒதுக்க வேண்டாம் . திமுக அதிமுகவின் ஊழல் பேர்வழிகள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டனர்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்த ஆட்சி குமாரசாமியின் தவறான தீர்ப்பால் வந்த ஆட்சி , இதை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து லோக்சபாத்தேர்தலுடன் தேர்தல் நடத்த வேண்டும். குமாரசாமி மட்டும் ஒழுங்கான தீர்ப்பு கொடுத்திருந்தால் எடப்பாடியெல்லாம் இந்த பதவிக்கு வந்திருக்கவேய முடியாது இது தான் அதிஷ்டம் என்பது இனிமேல் இவர்கள் கனவில் கூட ஜெயிக்க முடியாது.

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  கமல் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஒரே பல்லவியை பல இடங்களில் அதே வார்த்தையை சொல்லி கருது தெரிவிக்கின்ற்னனர். எனக்கு ஒரு சந்தேகம்.. இவர்கள் எதோ ஒரு கட்சியின் தகவல் துறை ஆட்களாகத்தான் இருக்க வேண்டும்..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அட ..... திடீர் -ன்னு அப்சர்வ் பண்ணி சொல்லிட்டாரே ??

 • Anand - chennai,இந்தியா

  எங்கேயோ இவரை செமயா மொத்து மொத்துனு மொத்தியிருக்கிறார்கள். வடிவேலு பாணியில் பேசுகிறார்.

 • JSS - Nassau,பெர்முடா

  திராவிட கட்சிகள் என்று ஆட்சிக்கு வந்தனவோ அன்றே சட்டம் ஒழுங்கு, உண்மை நேர்மை ஒழுக்கம் எல்லாம் விடைபெற்று விட்டன. எதோ இப்போதுதான் சட்டம், நேர்மை, உண்மை எல்லாம் இல்லாதது போல் பேசுகிறார். கருணாவிடம்என்று ஆசி பெற்றாரோ அன்றே இவரும் அவர் வழிதான் செல்வர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மொத்தத்தில் தமிழ்நாடு ஒரு சுடுகாடு. ஒருமுறை ப ம வுக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம். மற்றவர்கள் எல்லாம் வேஸ்ட் உபயோகமற்றவர்கள்.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  1965 முதலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது

 • yila - Nellai,இந்தியா

  ஆனால் இம்முறை ஆளும் கட்சிகளால்...

 • Srikanth - chennai,இந்தியா

  இவ்வளவு பேசற உனக்கு முதல... சம்பளம் குடுக்க துப்புஇருக்கா. முதல் அதை செய்

 • rajan. - kerala,இந்தியா

  ஹலோ இங்கே சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு நாலு தலைமுறையை ஆகிவிட்டது. இப்போ தான் உங்களுக்கு தெரியுதாகும் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏம்ப்பா... இவ்வளவுநாள் கண்ணு தெரியாம இருந்ததா... ? இப்போ புதுசா கண்ணாடி போட்டீங்களா...? எல்லாம் விளக்கமா ..தெரியுதா...?

 • sankar - Nellai,இந்தியா

  சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் - சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிம்ரனை தூக்கிச்செல்ல முடியும்

 • அகஸ்தியர் ஐயர் தொல்காப்பியர் ஐயர் திருவள்ளுவர் ஐயர் - சென்னை,இந்தியா

  குடி கெடுத்த குடியை கெடுக்க வந்த பரமக்குடி கொடுத்த தமிழ்க்குடியின் தலை மகன்.

 • அகஸ்தியர் ஐயர் தொல்காப்பியர் ஐயர் திருவள்ளுவர் ஐயர் - சென்னை,இந்தியா

  கமல் ஒரு சீர்திருத்தவாதி. எந்த குறைகளை சுட்டி காட்ட வேண்டுமோ அதை சுட்டி காட்டுகிறார். குரங்கிணி சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறார். இவரை போல ஒருவர் வேண்டும்... பொறுப்புள்ள ஒருவர் வர வேண்டும். எல்லா இளைஞர்களும், மாணவர்களும் கமலின் முதல்வர் விஸ்வரூபத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஏம்ப்பா யோக்கியரு ஆம்ள சிங்கம், குறைகள் கூற முடிவு பண்ணிட்டீங்க. அப்படீன்னா, மத்திய மாநில அரசுகளின், ஆட்சிகளில் உள்ள குறைகளை கூறுங்களேன். ஏன் செலக்டீங் அம்னீசியா மனம்(மூளை) போல, எப்பவும், தமிழக அரசை மட்டுமே குறைகள் கூறிக்கினு வர்றீங்களே, கமாலு.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு அறிவு கெட்டவர்கள் வாழும் மாநிலமல்ல தமிழ் நாடு. ஆனால் கமல் சொல்வது போல சீர்கேடுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அமைதி வழியில் சென்று கொண்டிருந்த மெரினா புரட்சி போராட்டத்தை பரிவாரின் ஏவலுக்கு பணிந்து தீவிரவாதத்தின் பெயரில் இரும்பு கரம் கொண்டு அடக்கியது தொடங்கி விவசாயிகள் கோரிக்கைகளுக்காக மக்களிடம் விழிப்புணர்வு நோட்டிஸ் கொடுத்த அய்யாக்கண்ணுவிடம் வம்பிழுத்து தன்னை விட பெரியவர் ஒரு ஆண் என்றும் பார்க்காமல் கன்னத்தில் அறைந்து அசிங்கப்பட்டுப்போன ஒரு தறுதலையை கைது செய்யக்கூட வக்கற்றுப்போய் நிற்கும் அடிமைகளால் ஆளப்படும் பினாமி ஆட்சி தான் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறது.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இவரு எங்க செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தாரா? இந்த ஒரு வருசமா தான் எதுவும் சரியில்லையா? என்னை கேட்டா ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி ஆட்சி பரவாயில்லன்னு தான் சொல்லுவேன்........சில உருப்படியான விஷயங்களாவது நடக்கிறது............இவரு ரஜினி எல்லாம் சினிமாவுல இனிமே வருமானம் வராதுன்னு கட்சி ஆரம்பிச்சு அடுத்து எலக்சன் சமயத்துல கூட்டணின்னு ஒரு பெரிய தொகை பார்க்கறதுக்கு, கட்சி நிதி என்ற பெயரில் வசூல் பண்றதுக்கு தான் இப்போ கட்சி ஆரம்பிச்சு இருக்காங்க......இவங்க ஜெயிச்சு வந்தா என்ன நடக்கும்? இவங்க ஆஸ்பத்திரியில போயி படுத்துப்பாங்க.....கட்சிக்குள்ள பதவி சண்டை ஆரம்பிக்கும்...ரஜினி கட்சி ஜெயிச்சா தனுஷ் தான் அடுத்த தலைவர்னு கோஷ்டி சண்டை நடக்கும்....சவுந்தர்யா தீபா மாதிரி புரட்சி பண்ணுவாங்க....லதா ஏற்கனவே எந்த வாடகையும் கொடுக்கறதில்லை...அரசு கட்டிடங்கள் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுடுவாங்க..வோல்டாஸ் கட்டிடம் கதை மாதிரி....கமல் ஜெயிச்சு வந்தா , சுருதியோட வெள்ளை கார பாய் பிரண்டு வந்து நான் தான் பச்சை தமிழன்னு கதை சொல்லுவான்....இந்த ஜால்றா கூட்டங்கள் வந்து அவரு பாப்பா நாயக்கன் பட்டியில் தான் பொறந்தாரு அவரு தான் அடுத்த தலைவருன்னு கதை சொல்லுவான்.....கவுதமி வந்து எனக்கு அதுல உறுத்து இருக்குன்னு சொல்லுவாங்க...தமிழ்நாடு எவ்வளவு கேவலமா போயிகிட்டு இருக்கு பாரு............தமிழர்களும் தானான்னு எனக்கு சந்தேகம் இருக்கு..........

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  காசிமணி பாஸ்கரன் பாதிரியார் அங்கியை புடிச்சி ஏன் இந்த தொங்கு தொங்குறார்? உண்மையோ பொய்யோ, சும்மா ரெண்டு பிட்டை போட்டு வைப்போம்.. பின்னால யூஸ் ஆகும்னு நினைக்கிறாங்க 'படுகுழி' பாஜக பக்தாள்ஸ்.. கமலோட பெரியப்பன் சித்தப்பன் மாமன் மச்சான் ஒன்னு விட்ட ரெண்டு விட்ட சொந்தகாரன் எவனாவது மதம் மாறாமலா இருப்பான்.. அதை லிங்க் பண்ணி பூசி மெழுகி விட்டாப் போச்சு.. எவன் இதுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துகிட்டு இருக்க போறான்.. யாராவது அரசாங்கத்தை விமர்சித்தால், அதற்கு பதில் சொல்ல வக்கில்லாம ஜாதி மதம்னு பேசி மூளை மழுங்கி போன தொண்டர்களை வச்சி இப்படித் தான் கேடுகெட்ட அரசியல் செய்வது கூட்டு களவாணிகளான 'படுகுழி' பாஜக மற்றும் அதிமுக மாஃபியாக்களின் பிழைப்பு...

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  தேடப்படும் குற்றவாளியான அன்புச்செழியன், முதல்வர் தலைமையேற்ற விழாவில் பங்கெடுத்து சிறப்புச் செய்தார்.. அவர் இன்னமும் தேடப்படும் குற்றவாளி என்பது மேலும் சிறப்பு.. குற்றவாளிகளின் ஆட்சி இது.. அந்த அழகுல தான் இருக்கும் சட்டம் ஓழுங்கு..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வாவ்... கமல் சொல்லித்தான் மக்களுக்கு இது தெரியவந்து இருக்கிறது... கமலால் ஒருவேளை இலவசம் கொடுக்கமுடிந்தது என்றால் ஓட்டுப்போடுவார்கள்... இல்லை என்றால் நோ சான்ஸ்... பாதிரியாராக கமல் வேஷம் போட்டது கிடையாது - ஆனால் நிஜமாகவே நன்றாக செய்கிறார்...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஆமாம் ஏன் வெள்ளை சட்டைக்கு மாறினீர்கள் கருப்பு சட்டை தான் உங்களின் தீரா-விட கட்சி பற்றை வெளிச்சாற்றும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  கமால் நீங்க அரசியலில் வருவேன் என்றதும் நாட்டில் கலவரம். நீங்க மையம் ஆரம்பித்த பிறகுதான் மோசமானது.பொறுப்பேற்று மக்களுக்கு புரியும்படியாக பேசவும்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  போகிறவனும் வருபவனும் ஒழுங்காக இருந்தால் நாட்டில் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கும்.உங்களை போன்றவர்களினால் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு கொண்டு இருக்கிறதென்பது தான் உண்மை.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  பாவம் கமல், இன்று ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, மற்றும் செல்லூர் ராஜிடம் சிக்கி சின்னாபின்னமாக போகின்றார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement