Advertisement

பிற மாநிலத்தவருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு

தமிழகத்தில் வசிக்கும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.


தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, ரேஷன் கார்டு அவசியம். இதை, உணவு வழங்கல் துறை வழங்குகிறது.


ரேஷன் கார்டு வாங்குவதற்கு, தனி சமையல் அறை இருப்பதுடன், இந்தியாவில், வேறு எங்கும் கார்டு இருக்கக் கூடாது.
இதனால், தமிழகத்தில், பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு மட்டுமே, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தற்போது, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பிற மாநிலத்தவர்கள், அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.


இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், எந்த பொருளும் வாங்காத, 'என்' ரேஷன் கார்டு வழங்குவதற்கு கூட, இரு ஆண்டுகள், ஒரே பகுதியில் வசித்ததற்கான ஆவணம் பெறப்பட்டது. தற்போது, 'ஆதார்' வாயிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.


இதனால், ஓரிடத்தில், ஏற்கனவே ரேஷன் கார்டு வாங்கி இருந்தால், அந்த விபரத்தை கம்ப்யூட்டர் வாயிலாக, சுலபமாக கண்டறிந்து, மறு கார்டு வழங்குவது தடுக்கப்படும்.
இதையடுத்து, தமிழகத்தில் வசித்து, இங்குள்ள முகவரியில், ஆதார் வாங்கி இருக்கும் பிற மாநிலத்தவர்கள், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • ஆனந்த் -

  கொள்ளை ஆரம்பம்...

 • Meenu - Chennai,இந்தியா

  ஒரு நபர் உள்ள ஸ்மார்ட் கார்ட்டுகளுக்கு பொருள் கொடுப்பதை நிறுத்தப்போவதாக எங்கள் கிராமத்தில் உள்ள விற்பனையாளர் சொல்றார், அது உண்மையா அல்லது இவர் ஏதாவது ஏமாத்த பார்க்கிறாரா? ஒரு நபர் கார்டுதாரர்கள் இதுவரை அரிசி, பருப்பு வாங்கி, பொருளாதாரத்தில் முன்னேறிட்டாங்களா? கோடீஸ்வரர் ஆக மாறிட்டாங்களா? அவர்களும் தானே ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். ஏன் அவர்கள் கார்ட்டுகளுக்கு மட்டும் பொருட்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். அவர்கள் மட்டும் மண்ணையா அள்ளி தின்பார்கள் ?

 • MB THIRUMURUGAN - Vengambakkam, Chennai,இந்தியா

  வரவேற்கத் தக்க முடிவு. மக்களுக்கு எப்படியாவது நல்லது நடக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும்.

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  தமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை கொடுப்பதில் தவறில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கும் இலவச பொருட்களும் கொடுக்க வேண்டி வரும். மற்ற மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கும் மற்ற மாநிலத்தவர்களுக்கும் இது போன்ற ரேஷன் அட்டை கொடுக்க பட்டுள்ளதா .... மும்பையில் வாழும் தமிழர்களுக்கு ரேஷன் கார்டு உண்டு ஆனால் அது வெறும் அடையாளத்துக்கு மட்டுமே , பொருட்கள் ஏதும் கிடையாது .... இப்போதுதான் ஆதார் அட்டை இருக்கும்போது இன்னொரு அட்டை அவசியம் தானா ?

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  இந்திய பிரஜை யாராயினும் கொடுப்பதில் தவறில்லை. வேறு ஒரு இடத்தில் இந்தியாவில் மற்றொரு கார்டு வைத்திருப்பது தவறு. ஒரு சமயம் வீட்டுக்கு வீடு பல கார்டுகள் இருந்தன. அதனால் முக்கிய ஆதாரமாக விளங்கிய ரேஷன் கார்டு கிடைப்பது குதிரை கொம்பாகி போனது. ஆதார் கார்டு மூலம் அதற்க்கு ஒரு நிவாரணம் கிடைத்துள்ளது. இனியாவது மக்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை முதலியவை விரைவில் அலைந்து திரியாமல், திரிய விடாமல் கிடைக்குமா...?

 • seyadu ali - tamilnadu,இந்தியா

  பார்றா காமெடியை இருக்கிறவர்களுக்கே ரேஷன் பொருட்கள் சரியாக கொடுப்பதில்லை இந்த லெச்சணத்தில் பிறமாநிலத்தவர்களுக்கும் ரேஷன் சிஸ்டம் .எங்கேயோ உதைக்குதே இப்போ புரியுது இருக்கிறவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டி சுருட்டுவது போதாதென்று புதிதாக கொடுக்க போவதாக சொல்லி அவர்கள் பெயரிலும் ஆட்டைய போட இந்த திட்டம் போடப்படுகிறது .சபாஷ் நடத்துங்கடா உங்களோட திருட்டு திருவிளையாடலை .நாடு வெளங்கும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எப்படியோ மக்களின் வரிப்பணத்தில் கள்ளத்தனமாக ரேஷன் பொருட்களை கேரளாவுக்கு மாட்டுத்தீவனமாக எடுத்துச்செல்லாமல் இருந்தால் நல்லது...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இதில் தவறில்லை, வரவேற்க்கத்தக்கதே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement