Advertisement

சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை

ஐதராபாத் : ஐதராபாத் நகரில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர், 69 பேருக்கு, சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.


தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜனவரியில் நடந்த சாலை விபத்தில், சிறுவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். 'வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற, 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்' என, சட்டம் உள்ளது.


இந்நிலையில், வாகனங்கள் ஓட்டும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐதராபாத் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். ஒரு மாதத்தில் மட்டும், கார், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டிய, 69 சிறுவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் தந்தையரை, நீதிமன்றம் வரவழைத்தனர்.


சிறுவர்களுக்கு அபராதம் விதிக்காமல், சட்ட விரோதமாக அவர்கள் வாகனம் ஓட்ட காரணமாக இருந்த, அவர்களது தந்தையருக்கு, மூன்று நாட்கள் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • சீனி - Bangalore,இந்தியா

  லட்சக்கணக்கில் பீஸ் வாங்கும் கோழிப்பண்ணை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத்தெரிவதில்லை. 18 வயது நிறம்பிய மாணவர்களுக்கு, கல்லூரிகளில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு, வெட்டியாக பொழுது போக்குவதை விட வாகன ஓட்டும் பயிற்ச்சி கொடுத்து, முறையாக லைசன்சு பெற்று தரவேண்டும். அது பிற்காலத்தில் மிக உபயோகமா இருக்கும். பெரும்பாலும் லைசென்சு வாங்க லஞ்சம் கொடுக்கவேண்டும், அதுனால லைசென்சு இல்லம ஓட்டுறாங்க பசங்க, இவங்க இப்படி இருக்க போக்குவரத்து அதிகாரிகளும் காரணம். கல்லூரிக்கி போய் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமில்லை, மாட்டாங்க, கட்டிங் வருமானம் கொறைஞ்சிருமில்ல.....

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ரோட்டில் நடக்குறத்துக்கு லைசென்ஸ் வாங்கிக்கணும் போல இருக்கு..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அதிவேகமாக செல்லும் , விலைமிக்க இருசக்கர வாகனங்களை , தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்களை தண்டிப்பது அவசியம்.

 • JAGADEESAN - chennai,இந்தியா

  வறவேற்கதக்கது மற்றும் பெற்றோரை தண்டிக்கபடுவதை விட வாகனத்தின் உரிமையாளருக்கு தண்டனை வழங்குவதே சரியான தீர்ப்பு...

 • Santhosh V - bangalore,இந்தியா

  ஐதராபாத் போக்குவரத்து போலீசார் க்கு ஒரு சல்யூட் . விபத்து நிச்சயம் குறையும்

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  பல கல்வி நிலையங்களில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருகிறார்கள். கல்வி நிறுவனமும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • MB THIRUMURUGAN - Vengambakkam, Chennai,இந்தியா

  தான் வாழும் சமூகம் மேல் அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானியின் [நீதியரசரின்] மிக அருமையான தீர்ப்பு

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  சபாஷ்....சரியான தீர்ப்பு...இச் சட்டம் தமிழகத்திலும் நடைமுறைக்கு வருமா...

 • ushadevan -

  பிள்ளைகளா விதியை எப்போதும் மீறக்கூடாது உங்களுக்காகவே இமை மாதிரி பாத்துக்கற பெற்றோரை சிறை வாசல்ல நிக்க வச்சுடாதீஙக.ஓ கே. Good decision.

 • Gopalsami.N - chennai,இந்தியா

  சபாஷ். சரியான தீர்ப்பு. வாகன உரிமையாளருக்கும் தண்டனை தரப்பட வேண்டும். உரிமையாளரும் பெற்றோர்களும் ஒருவராகவே இருந்தால் இரட்டை தண்டனை தரவேண்டும்.

 • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

  This act should be followed in Tamil Nadu too to stop driving below 18 years old.

 • சிவம் -

  பெற்றோர் சொல்லை கேட்காத சிறுவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்கள் வண்டியை ஓட்டினால்.... எனவே இந்த விஷயத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் உரிமையாளருக்கு தண்டனை வழங்குவதே சரியான தீர்ப்பு.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  .இவர்களால் ஏற்படும் விபத்துக்கு இன்சூரன்ஸ் கூட கிடைக்காது .கடுமையான சட்டங்கள் இயற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் தடையாக உள்ளன. . இரண்டாம் முறையாக தவறு செய்தால் அரசு வேலை மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என சட்டம் வேண்டும். அதுபோல பைக் ரேஸ் விடுபவர்களை நிரந்தரமாக வண்டி ஓட்ட தடை செய்து அவர்கள் குடும்பமே வண்டி வாங்காதவாறு செய்யவேண்டும்

 • Prem -

  Pls implement this also in Tamilnadu

 • Balu1968 - Doha,கத்தார்

  இது போல் சீர்திருத்தங்களை சட்டங்களும் தான் மாணவர்கள் தவறு செய்வதை கட்டுக்குள் கொண்டுவரும்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  சிறுவர்கள், வீதியில் பைக், ஸ்கூட்டி ஓட்டும் அக்கப்போர்கள், எனது வசிப்பிட நகரில் கூட நடக்குதுங்க. பிற மக்கள்தான் பயப்பட வேண்டி இருக்கு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement