Advertisement

உ.பி.,யில், 'சோலார்' மின் ஆலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

லக்னோ : உ.பி.,யில், 'சோலார்' எனப்படும், மிகப்பெரிய சூரிய ஒளி மின் ஆலையை, பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர், இமானுவேல் மேக்ரானும், நேற்று துவக்கி வைத்தனர்.


உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், மிர்சாபுர் மாவட்டத்தில், மாநிலத்தின் மிகப்பெரிய சோலார் மின் ஆலை நிறுவப்பட்டு உள்ளது.


இங்கு, 75 மெகாவாட் மின் திறனுள்ள இந்த ஆலையை, பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் அதிபர், மேக்ரான் திறந்து வைத்து, உ.பி., மக்களுக்கு அர்ப்பணித்தனர்.


இந்த ஆலை, 500 கோடி ரூபாய் செலவில், பிரான்சின், 'என்கி' என்ற நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது. 380 ஏக்கர் நிலத்தில், 1.18 லட்சம் சோலார் பேனல்களுடன், இந்த ஆலை நிறுவப்பட்டு உள்ளது.

இதில் தயாரிக்கப்படும் மின்சாரம், ஜிக்னா துணை மின் நிலையத்துக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக, உ.பி., வந்த பிரான்ஸ் அதிபர், மேக்ரானையும், அவரது மனைவி, பிரிகிட்டையும், விமான நிலையத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத், கவர்னர், ராம் நாயக் வரவேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  சோலார் போன்ற பாதுகாப்பான, எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எல்லாம் வடமாநிலங்களுக்கும், அணு உலை மற்றும் நியூட்ரினோ போன்ற மக்கள் விரோத, எதிர்கால சந்ததிகளுக்கே வேட்டு வைக்கும் திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கா? மோடிஜி சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல் தமிழர்களின் தீராப்பகையை சம்பாதிக்க நேரிடும்.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  அப்படியே அந்த ஆக்சிஜென் சிலிண்டரும் எல்லா மருத்துவ மனைக்கும் குடுங்கப்பா

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சூரிய ஒளி மின்சாரத்தில் குஜராத்சாதனை படைத்த மோடி இப்போது தேசம் முழுவதும் இதை கொண்டு சேர்கிறார் உபி யோகி கரம் கோர்த்து பயன் பெறுகிறார் வாழ்த்துக்கள்

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  டிஜிட்டல் இந்தியா என்கிறோம்.பின் ஏன் பிரான்ஸ் நிறுவனம் வந்து அமைத்தது. நம்மிடம் தொழில் நுட்ப்பம் இல்லையா ?மனித வளங்கள் இல்லையா?வேலை வாய்ப்பு கொடுத்து நாமே அமைத்து இருக்கலாமே.ஊழல் ஆக இருக்குமோ எனக்கு தெரிய வில்லை அப்பா

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  சுற்று சூழல் மாசடையாத முறையில் இலவசமாக கிடைக்கும் மின்சாரம்.எல்லா மாநிலங்களுக்கும் இந்த திட்டங்கள் தேவை.

 • ARASU - ,சிங்கப்பூர்

  மோடி, முதல்ல அத்வானியை மதிக்க கற்றுக்கொள்ளுங்க

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  பாராட்டுகிறோம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Uttar pradesham sariyana paathayil,aathi kalam muthal valam petru irukkum oralavu nallatchiye petra tamilakam viraivil thirumba vum,edappadi athiradiyai ethavathu pannu paa

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சோலார் மின் உற்பத்தி நிலையத்தை கொண்டுவந்தது நல்லது... இதையே தமிழகத்தில் கொண்டுவந்தால் நல்லது... காரணம் தமிழக அரசு மின் உற்பத்தியில் நாட்டம் செலுத்துவது இல்லை.,,, எனவே மத்திய அரசு மின்னுற்பத்தி நிலையங்க அமைக்க ஏற்பாடு செய்தல் தமிழக மக்கள் பி ஜெ பி யை நினைத்து கொண்டு இருக்க பெரும் வாய்ப்பு உள்ளது...

 • c.Thirumalaisamy -

  சூரியன் ஹிந்துக்களின் கடவுளே எனவே சோலார் மின்சாரம் காவி அல்லது ஹிந்துத்துவா மின்சாரம் என தமிழகமாய் இருந்தால் எதிர்ப்பைக்காட்டியிருக்கலாம்.தமிழன்டா என்று வேறு குதித்திருக்கலாம்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அருமை.. குறைந்த செலவில் மின் உற்பத்தி என்பது தொழில் வளர்ச்சிக்கு வெகுவாக உதவும்..

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  நல்ல விஷயம் ஆரம்பம் . படிப்படியாக சூரிய ஒளி குடும்பத்திற்கு மாற வேண்டும் .75 மெகா வாட் என்பது சிறிய அளவு .போகப்போக இது போல் பல மின் திட்டங்கள் வரும் என நம்புவோம் .

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இது போன்ற திட்டங்களில், பிரதமர் மோடிஜி அதிக கவனம் செலுத்தி செயல்படுவது, உண்மையிலேயே பாராட்டத்தக்கதுதான் எனலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement