Advertisement

வெளிநாடு தப்பியோடுவோர் சொத்து பறிக்க சட்டத்திருத்தம்

புதுடில்லி : மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, லோக்சபாவில் நேற்று, மத்திய அரசு தாக்கல் செய்தது.

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்ளிட்ட தொழிலதிபர்கள், வங்கிகளில் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போன்றோரின் சொத்துகளை பறிமுதல் செய்து, நிலுவைத் தொகையை வசூலிக்கும் வகையில், லோக்சபாவில் நேற்று, பொருளாதார குற்றம் இழைத்து தப்பியோடுவோருக்கு எதிரான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.மசோதாவில் கூறப்பட்டு உள்ளதாவது: வங்கிகளில், 100 கோடி ரூபாய் அல்லது கூடுதலாக கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோருக்கு, இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். இத்தகைய மோசடியாளர்கள், வெளிநாட்டில் பதுங்கி இருந்து, இந்தியாவில் நடக்கும் சட்ட நடைமுறைகளில் பங்கேற்காமல் தவிர்ப்பதை தடுக்க, இச்சட்டம் வகை செய்யும்.


வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், வங்கித் துறை கடுமையாக பாதிக்கும்.இதை தடுக்க, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே, புதிய சட்டத்திருத்தம் அவசியமாகிறது.


வங்கிகளில், 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு கூடுதலாக கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடும் மோசடியாளர்களின் சொத்துகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்ய, அதிகாரம் தரப்படும்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் மீது, மோசடியாளர்கள் உரிமை கோர முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய சட்டத்திருத்தம், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் இருந்து வேறுபடுகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில், குற்றத்தால் கிடைத்த லாபத் தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்படும்.புதிய சட்டத்திருத்தப்படி, குற்றம் செய்ததால் கிடைத்த சொத்து மட்டும் அல்லாமல் மோசடியாளரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (34)

 • ArulKrish -

  hahahha....ivargalayum muttalgal ended ninaithuvitargal

 • kc.ravindran - bangalore,இந்தியா

  திட்டம் போட்டு திருடுற கூட்டம் திட்டம் போட்டுக்கொண்டே இருக்குது. அதை தடுக்கிறோம்பாரு என்கிற கூட்டம் கூவி கொண்டே இருக்குது. ஜனங்களா பார்த்து திருந்தாவிட்டால் பின்னாலே காத்தடிச கூட தெரியாது.

 • kumar - chennai,இந்தியா

  அவங்கள ஓடவிட்டுட்டு பின்னாடியே நீங்க ஒடுங்க... இங்க ஒருத்தன் ஆயிரம் ரூபா லோன் கட்டலனா அவன்கிட்ட இருந்து .... கூட உருவிடறது.... ஆயிரம் கோடி வாங்கினாங்க அவனை ஓட விட்டு சட்டம் போடறது...நாசமா போக உங்க சட்டம்

 • GIRIPRABA - chennai,இந்தியா

  இப்படி கடன் வாங்கி ஓடி போகிறவர்கள் நன்றாக வெளியூரில் சுகமாக உள்ளனர். ஆனால் இவர்கள் துவங்கிய தொழிற்சாலையில் பணிபுரிபவர்களின் வேலை பறி போவது பற்றி அரசோ அல்லது கடன் கொடுத்த வங்கியோ கவலை பட போவதில்லை. தொழிற்சாலைகளை காட்டி பல கோடி கடன் வாங்கி அவர்கள் செட்டில் ஆகிவிட்ட நிலையில் கடன் வாங்கியது அவர்களின் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஒன்றும் தெரிய போவதில்லை திடீரென ஒருநாள் NCLT என்ற அமைப்பு ஒரே ஒரு கடிதம் மூலமாக பணியாளர்களை உங்களுக்கு வேலை இல்லை என கூறி நீங்கள் எல்லாம் தொழிற்சாலை உள்ளே வரக்கூடாது என்று முறையிடுகிறது அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகளை பற்றியும் அவர்களின் குடும்பத்தை பற்றியோ NCLT என்ற அமைப்புக்கு எந்தவித கவலையும் இல்லை. இதனால் மனமுடைந்து வயதான பணியாளர்களும். மேலும் பல கூலி தொழிலாளர்களும் என்ன செய்வது இனி எங்கே போய் முறையிடுவது தங்களுடைய நிலுவைத்தொகை வைத்து பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்வது எப்படி என நினைத்து எனக்கு தெரிந்த ஒருவர் இறந்தே விட்டார் இப்போது அந்த குடும்பம் நிர்கதியில் உள்ளது. இந்த பகுதியை உங்களுடைய பத்திரிகையில் இட்டால் இதற்கு ஒரு வழி கிடைக்கும் என நான் ethirparkiren

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  வரும் முன் காப்போம் என் திட்டங்கள் தொடங்குவார்கள் ... ஓடிய பிறகு திட்டங்கள் போடுகிறார்கள்

 • Divahar - tirunelveli,இந்தியா

  நம் நாட்டில் இதுவரைக்கும் இந்தமாதிரி சட்டம் இல்லையா? கொடுமை?

 • 23m Pulikesi - Chennai,இந்தியா

  ஏதாவது உருப்படியா நடந்தா சரி.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  உண்மை விளம்பி, இப்போது குறைந்தது சட்டமாவது கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு முன் உள்ள அரசு என்ன செய்த்து? இஷ்டத்துக்கு கடன் கொடுத்தது மட்டும் இல்லாமல் பொறுப்பு இல்லாமல் காங்கிரஸ் இந்த அரசை குறை கூறிக்கொண்டு உள்ளது .

 • rajan. - kerala,இந்தியா

  இந்த சட்டம் எல்லாம் சரிதான் சாமியோவ்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வெளிநாடு தப்பியோடுவோர் சொத்து பறிக்க சட்டத்திருத்தம்.... இதை கொண்டு வருவதற்குள் இருக்கும் ஒன்று இரண்டு ஆட்களும் ஏதோ ஒரு தீவிற்கு குடும்பதோடு சென்றுவிடுவார்கள் . இது அவர்களுக்கு கொடுக்கும் முன்னெச்சரிக்கை போல உள்ளது...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பலருக்கு பர்சனல் லோன் விவசாய கடன்போலவே இதனைப்பார்க்கிறார்கள் .கார்பொரேட் கடன் என்பது வேறு வகை ..இக்கடன்களை யாரும் தனிப்பட்ட பெயரில் வாங்கவில்லை . வாங்கியது பப்லிக் லிமிடேட் கம்பெனி பெயரில். .ஒரு பப்ளிக் Limited கம்பெனியின் வாராக்கடனுக்காக அதன் இயக்குனர்களை உடனே கைது செய்யும் சட்டம் எந்த நாட்டிலும் இல்லை .நீண்ட நடைமுறைகள் உள்ளன . இச்சட்டங்களை மாற்ற முயன்றால் நேர்மையான தொழில் முனைவோர் சிறுத்துவிடுவர் ஏமாற்றுக்காரர்கள் செய்யும் பிராடுகளுக்குக் காரணம் இவர்களது பட்டயக் கணக்காளர்கள் கொடுக்கும் ஐடியாக்களும் அரசியல் வியாதிகள் கேட்கும் மாமூலும்தான். .நேர்மையாக வணிகம் செய்தாலும் மாமூல் கொடுக்காவிட்டால் எப்படி தொந்தரவு கொடுப்பது என்பது நமது அரசியல் வியாதிகளுக்கு நன்கு தெரியும் .இதனால் பலனடைவது அரசியல் வாதிகளின் பினாமி கம்பெனிகள்தான் .கறுப்பில் ரொக்கமாக லஞ்சம் வாங்குவது அரிது. பெரும்பாலும் வெள்ளையாகவே ஷெல் கம்பெனிகள் மூலம் வாங்கி கம்பெனி வரி வருமான வரிகூட கட்டிவிடுகிறர்கள். இதற்கெல்லாம் நமது கட்டுமரம் மற்றும் கேடி சகோதரர்கள் பெரும் ஆசான்கள்

 • ஆப்பு -

  கிழிச்சாங்க....ஓப்பனா மல்லையாவுக்கு அடைக்கலம் குடுத்து தங்க வெச்சிருக்கும் இங்கிலாந்தை ஒண்ணும் கேக்க முடியல....அவிங்களோட வர்த்தக நிறுவனங்களை இந்தியாவில் தடை செஞ்சா மல்கையாவை திருப்பி அனுப்புவாங்க...நம்ம ஆளுங்களால அதை செய்ய முடியாது...ஏன்னா இவிங்க பணமெல்லாம் அங்கே உள்ள பேங்குகளில் தூங்குதே...

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  அது என்னையா நூறு கோடி கணக்கு? அதுக்கு கீழ வாங்கிட்டு ஓடுனா பரவாயில்லையா? ஒரு 5 கோடி கணக்கு வச்சா கூட பரவாயில்லை...பாவம் ஏதோ ஒரு தொழில் முனைவோர் சின்ன தொகை வாங்கி இருக்காங்கன்னு ஒதுக்கலாம்.......இவனுங்களே பிரிச்சு பிரிச்சு நூறு கோடி பத்து பேங்குல வாங்கிட்டு போடறதுக்கு ஐடியா கொடுப்பானுங்க போல?

 • Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்

  அடமானம் இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை கடனை கொடுத்து பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு இப்போது புதியசட்டம் என்பது வெறும் கண்துடைப்பே ...

 • ManiS -

  Adhu enaa 100 kodi? 100 roobaavum kaasudhaane?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஓடிப்போனவர்கள் சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கவில்லை... தவிரவும் நிறுவனத்துக்கு கடன் கொடுப்பது தனி மனிதருக்கு கொடுப்பதை விட சிக்கல் இல்லாதது - அதாவது அந்த நிறுவனம் ஒழுங்காக நடத்தப்பட்டால்... பல நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் போலவே நடத்தப்படும் - ஆனால் பொது மக்களின் பணத்தை வைத்து விளையாடுபவை... கணக்குகளை சரி பார்க்கும் ஆடிட் நிறுவனங்கள் யோக்கியமானவையாக இருந்தால் தவிர வங்கிகளை ஏமாற்றுவது எளிது... ஓடிப்போனவர்களின் பின்னால் சென்று கடனை வசூலிப்பதில் முனைப்பை காட்டுவதை விட்டுவிட்டு, விதிகளை மீறி கடன் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் - ஓடிப்போனவர்கள் வேகமாக ஓடி வருவார்கள்...

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  நூறு கோடிக்கு மேல் என்றால் 99.99 கோடி மோசடி செய்யலாமா..? லஞ்சம் வாங்கிக்கொண்டு மோசடிக்கு உடந்தையாக இருக்கும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதற்க்கு கடிதம் கொடுக்கும் அரசியவாதிகளையும் அதில் சேர்க்க வேண்டும். அவர்கள் குடும்பத்தவர்களும் இணைக்க பட வேண்டும். காரணம் மோசடி செய்த பணத்தை அவர் மட்டுமே அனுபவிப்பதில்லை. அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தான் அனுபவிக்கின்றனர். இதில் குழந்தைகள், படிக்கும் மாணவர்களை விதியில் இருந்து விலக்கலாம்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  Patent பதிவிற்கு 2000 என மதிப்பிட்டு அதெற்கு 2,000 கோடிகள் கடனை மல்லையாவிற்கு வழங்கிய வங்கி அதிகாரிகளுக்கு பாரத் ரத்னா விருது வழங்க ஒரு சட்டம் கொண்டு வரப்படுமா? ஏன் கேட்கிறேன் என்றால் இந்த அதிகாரிகள் மீது எந்த வழக்கும் இது வரை பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் சிறை செல்ல போவதும் இல்லை. படே மோடி மஸ்தானும், ஜெட் லீயும் வாய் பேச்சில் வீரர்கள். செயலில் சுத்தம்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னைய பொறுத்தவரைக்கும் இவனுக திருடிட்டு ஓடுன பணம் கூட தேவை இல்ல. ஆனா இவனுக சுத்துனானுக பாரு ஒரு பொண்ணுங்க கூட்டம், அவங்க முன்னாடியே கூட்டிட்டு வந்து வெச்சு அந்த பிரம்பு பிஞ்சு போற அளவுக்கு வெளுக்கணும். பிரம்பு வீசுற சத்தம் சும்மா சொய்ங்... சொய்ங்... ன்னு காதுக்குள்ள மிருதங்கம் வாசிக்கணும். அடடா அடடா ரெண்டு லட்டு தின்ன மாரி சொகமா இருக்கேன்னு நான் சந்தோசப்படணும். சொல்லுங்க அதுமட்டும் செஞ்சா நான் போடுறேன் ஆயிரம் ஒட்டு இந்த அரசாங்கத்துக்கு.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சட்டம்போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது.......................

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஒரு உதாரணத்துக்கு இந்த ஆட்டுதாடி மல்லய்யன், கீரிப்புள்ள தலையன் நீரவ் மோடி, லலித் மோடி இவனுகளையெல்லாம் கூட்டியாந்து சிங்கப்பூர் மாறி ஒரு பொது இடத்தில வெச்சு, சும்மா வெளு வெளுன்னு வெளுத்து கட்டணும். அதையே பாக்கிற கடன் வாங்குற ஒவ்வொருத்தனுக்கும் நின்ன இடத்திலேயே போகணும். இனிமேல் கடன் வாங்கிட்டு ஓடுனா கக்கா கூட போக முடியாதுடா சாமிங்கிற பயம் வரணும். செய்ய முடியுமா இந்த அரசாங்கத்தால? ஒத்துழைப்பாங்களா மக்கள் இந்த மாறி ஒரு சட்டத்துக்கு? சொல்லுங்க. அத விட்டுட்டு சும்மா அவனுக திருடுறதும், அப்புறம் ஓடுறதும், இவிங்க புடிக்கிறேன்னு சொல்லிட்டு பின்னாடியே ஓடுறதும், இதெல்லாம் என்ன, எங்களையே பாத்தா லூஸுண்ணே முடிவு பண்ணிட்டிங்களா?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இதெல்லாம் பத்தாது. இதெல்லாம் மோசடி நடந்ததுக்கு அப்புறம் என்ன கிடைக்கும்? ரெண்டு லட்டுதான் கிடைக்கும். அப்புறம் சொத்தே இல்லாம எல்லாத்தையும் சுத்தமா மொத்தமா வித்துட்டு ஓடிடுவானுக. இல்லேனா இருக்கிற பொண்டாட்டி, மனைவி, துணைவி, இணைவி இவிங்க பேர்ல எல்லாம் சொத்துக்களை வாங்கிப்போட்டுட்டு ராசா ஊட்டு புள்ளை மாறி மூக்குல டூப்பு வெச்சுக்கிட்டே இன்னும் பல காலம் வாழ்வானுங்க. அதெல்லாம் முடியாது. ஒன்னு குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வழி வகைகளை உடனே உருவாக்குங்கள், அடுத்து மோசடி நடந்து விட்டால் கூடிய சீக்கிரமே கண்டு பிடிச்சு ஜப்தி பண்ணி ஜெயில்ல போட்டு மேட்டரை முடிச்சு விடுங்க. அதை விட்டுட்டு வெளிநாடு தப்பி ஓடுனதுக்கப்புறம் என்ன பண்ண போறீங்க? அங்க போயி அவன் குஜாலா இருப்பான். நீங்க இங்க எங்க காதுல பூ சுத்திக்கிட்டே இருப்பீங்க.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  கூடவே, அவர்களின் பினாமிகளின் சொத்துக்களையும் பறிக்கனும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement