Advertisement

கார்த்தி சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு!

புதுடில்லி : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு எதிரான, ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அவரை, 13 நாள் நீதிமன்ற காவலில், திகார் சிறையில் அடைக்க, டில்லி சி.பி.ஐ., நீதிமன்றம், நேற்று உத்தரவு பிறப்பித்தது. 'சிறையில் அவருக்கு எந்த சிறப்பு வசதியும் அளிக்க முடியாது' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார், 'டிவி' நிறுவனம், வெளிநாட்டில் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்கு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, விதிமுறைகளை மீறி ஒப்புதல் வழங்கப்பட்டதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீட்டால் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இதற்காக லஞ்சம் பெற்றதாகவும், கார்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே, மகளைக் கொலை செய்து எரித்ததாக, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான, இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கார்த்திக்கு பணம் கொடுத்ததாக, சமீபத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்திராணி முகர்ஜிதெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த மாதம், 28ல், கார்த்தி, சென்னை விமான நிலையில் கைது செய்யப்பட்டார்.

அவரை காவலில் எடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. காவலுக்கான கெடு முடிந்ததையடுத்து, கார்த்தி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.கார்த்தியை, 13 நாள் நீதிமன்ற காவலில், டில்லி, திகார் சிறையில் அடைக்க, சி.பி.ஐ., நீதிபதி, சுனில் ரானா உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், தேடப்படும் நபராக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை, உயர் நீதிமன்றத்தில், கார்த்தி தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும், நேற்று முடிந்தன.இதையடுத்து, எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் மனு



கார்த்தி தாக்கல் செய்த, ஜாமின் மனு தொடர்பாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் கூறியதாவது: கார்த்தி ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை, 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற புதிய மனுவை ஏற்க முடியாது; அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிமன்றம் கூறியது. ஜாமின் மனுவை, சி.பி.ஐ., நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், கார்த்தி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் திகார் சிறையில் அடைக்க, சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டதும், 'பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், தனிச் சிறையில் அடைக்க வேண்டும்' என, கார்த்தி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் கூறியதாவது: கார்த்தி மற்றும் அவரது தந்தை, சிதம்பரத்தின் சமூக அந்தஸ்தை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இருப்பினும், இந்த வழக்கில் மற்ற கைதிகளுக்கு எந்தச் சலுகையும் அளிக்காத நிலையில், கார்த்திக்கு மட்டும் சலுகை காட்ட முடியாது. அதே நேரத்தில், விதிகளுக்கு உட்பட்டு, அவருக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும் என, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. சிறை மருத்துவர்கள் ஒப்புதல் அளித்தால், மூக்கு கண்ணாடி மற்றும் மருந்துகளை எடுத்துச் செல்லலாம். அதே நேரத்தில், சோப்பு, புத்தகம், துணி, வீட்டு உணவு ஆகிய கோரிக்கைகளை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (53)

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    ஆனால் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய்கள் சுருட்டின வழக்கில் எப்படி ராசாவுக்கும் கனி தங்கச்சிக்கும் விடுதலை கொடுக்கப்பட்டது , அப்படி பார்க்கும் போது கார்த்தி சிதம்பரமும் சில காலம் கழித்து விடுதலை ஆகி விடுவார்

  • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

    கார்த்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த சந்தோஷத்துல இருக்கார். இவனை பற்றி ரஜினி , கமல் ஏன் வாய திறக்கலை?

  • V Gopalan - Bangalore ,இந்தியா

    It is only matter of some days, thereafter he will be released like Shri Raja and Smt Kanimozhi stating that there is no evidence minus is public money drained.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    என்னத்த செஞ்சு கிழித்துவிட்டாய் கார்த்தி , எதற்கு இந்த கேவலமான சமாளிப்பு , கையை தூக்கினால் நீயெல்லாம் தலைவனா ?

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    தகுந்த முறையில் விசாரணை மேட்கொண்டாள் தான் உண்மைகள் வெளி வரும் யுவர் ஆனர்

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    ஊழல் குற்றவாளிகளின் அடைக்கலமான இந்திரா காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற வேண்டுமா மக்களே சிந்திப்பீர்

  • Naga Rajendran - Chennai,இந்தியா

    Ada chi kaiya keela podu. Neria padam paathu kettu poierupan nu nenaikuren. Chhumma kai ya mela thooki kaamichutu scene potukitu eruka.

  • vns - Delhi,இந்தியா

    A day after Karti Chidambaram moved the Delhi High Court seeking bail, Justice Indermeet Kaur on Tuesday recused herself from the hearing of the bail plea . இதுதான் ஊழலின் துவக்கம்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    அது இன்னாடா சிதம்பரத்தோட சமூக அந்தஸ்து ? வறுமையால் கொள்ளை அடிக்கிறவனுக்கும், முப்பது தலைமுறைக்காச்சும் குந்தித் திங்கிற மாதிரி சேர்த்துடணும் -ன்னு கொள்ளை அடிக்கிறவனுக்கும் வித்தியாசம் இல்லையா ? கொண்டு வந்தாலும் விஜய் மால்யா, நீரவ் மோதி கூட விதம் விதமா, வெரைட்டி வெரைட்டியா கேப்பானுகளே .... கொடுப்பீர்களா ?

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    ஆட்சி, சட்டம் மேல அவ்ளோ இளக்காரம் .... ஏரோட்டுறவன் இளைச்ச ஆளா இருந்தா எருது கூட மச்சான் மொற கொண்டாடும் -ன்னு எங்க ஊருல சொல்லுவாங்க ....

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

    ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி பதவி விலகி இருக்கிறார், இதில் இருந்தே தெரியும் மோடி அரசு நீதி துறையில் எப்படி அதிகாரம் செலுத்துகிறது என, பதவி விலக அறிவுறுத்தப்பட்டாரா அல்லது பதவி விலகும் வண்ணம் வந்த மேலிட நிர்பந்தம் காரணமாக தானே வெறுத்து விலகினரா? நீதிபதி லோயா போல கொல்லப்படாமல் இருப்பாரேயானால் ஒரு நாள் உண்மை வெளிவரும்.

  • Varun Ramesh - Chennai,இந்தியா

    குற்றவாளியோ இல்லையோ அது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது. எதற்கு எதையோ சாதித்துவிட்ட வெற்றியாளரைப்போல் கார்த்தி சிதம்பரம் இப்படி கையை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்? நிரபராதியான தன் மீது இப்படி அபாண்டங்கள் சொல்லப்படுகிறதே என்ற கவலை அவர் முகத்தில் காணவே காணோம். ஒருவேளை குற்றவாளிதான் என்பதை அவர் உணர்ந்தே இருக்கிறாரோ? ஆம் என்றால், அதற்காக வருந்த வேண்டாமா? இப்படியா ஏதோ தியாகியைப்போல

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    அப்போது 2g வழக்கு மாறன்கள் வழக்கு இவை திரும்ப விசாரிக்கப்படுமா தற்சமயம் நாட்டில் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள், மாறன்சகோதர்கள் ஆ ராசா , கனி தங்கச்சி இவர்கள்தான் ஒட்டு மொத்தமாக இவர்கள் எல்லோரையும் கார்த்தி சிதம்பரத்துடன் திஹார் சிறையில் அடைக்கவேண்டும்

  • cgovind1972 - Chennai,இந்தியா

    We are living in India, please remember. political power and Money, anything is possible. this case will go until the end of his life. Then judgement will come

  • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

    குற்றவாளியா - இல்லையா? தீர்ப்பு வரும்வரை சிறையில்தான் இருக்கவேண்டும். ஆனால், நீதிமன்றுக்கு - சிறைக்கும் செல்லும் போது, அரசியல்வாதிகள் போல கையைக் காட்டுகின்றாரே, அது ஏன்? பொய்யின் முழு உருவங்கள் தப்பு செய்யும் போதே, அவைகள் தப்பு என்று தெரிந்துகொண்டு செய்வதால், மாட்டிக் கொண்டாலும், தாங்கள் உத்தம புருஷர்கள் என்றல்லவா மக்கள் மத்தியில் காட்டிக்கொள்கின்றனர்.

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    அஹஹா.. அப்புச்சிய வச்சி செய்றாங்க போலருக்கு.. செய்ங்க செய்ங்க.. பேஷா செய்ங்க ரொம்ப நன்னா இருக்கு..

  • Indhuindian - Chennai,இந்தியா

    இவன் சமாச்சாரம் ஏற்கனவே நாத்தமடிக்குது இதுலே எஜமான் சோப்பு குடுக்கலேன்னா என்ன ஆகும் கொஞ்சம் யோசனை பண்ணுங்க எஜமான்

  • ARASU - ,சிங்கப்பூர்

    எப்படி இது வடநாட்டுக்காரன் வழக்குல மாட்டாம வெளிநாடு தப்பிச்சு போறான் தமிழ்நாட்டுக்காரங்களை மட்டும் வழக்கு சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கு

  • அகஸ்தியர் ஐயர் தொல்காப்பியர் ஐயர் திருவள்ளுவர் ஐயர் - சென்னை,இந்தியா

    எதுக்கெடுத்தாலும் இப்ப ஏன் எல்லோரும் அக்குளை காட்டிகிட்டு 1 சி பஸ் ல மேல் கம்பியை பிடிச்சிட்டு நிக்கிற மாதிரியே போஸ் கொடுக்கிறாங்க.

  • அகஸ்தியர் ஐயர் தொல்காப்பியர் ஐயர் திருவள்ளுவர் ஐயர் - சென்னை,இந்தியா

    அடுத்தவன் பணத்தை ஏமாத்தி கொள்ளை அடிச்சா இப்ப நல்லா இருக்கும். சந்ததிகள் அதை விட பத்து மடங்கு பறி கொடுத்துட்டு நிப்பான். அரசாங்க பணத்தை ஏமாத்தி கொள்ளை அடிச்சவன் இப்போ நல்லா இருப்பான். அத்துக்குப்புறம் வர்ற இருபது சந்ததிகள் பணத்தை இன்னொரு நாட்டு அரசாங்கத்துக்கு தேவை இல்லாம 30 - 35 சதவீத வரி கொடுத்து ஏமாறும். அடுத்த நாட்டு பங்கு வர்த்தகத்தில் பணம் போட்டு முதலீடு போண்டியாகும். பாஸ்வார்டு மறந்து போகும். சம்பந்தமே இல்லாத வெளிநாட்டுக்காரன் பாஸ்வார்டு சர்டிபிகேட் எடுத்து பணத்தை லவட்டிட்டு போவான்.. இதாவது பரவாயில்லை...பணத்தோடு ஒழியும்.... ஆனா ஒரு பாவமும் அறியாத பெண்ணை அதுவும் கல்யாணம் ஆகாத கன்னி பெண்ணை கெடுத்து கொலை பண்ணினா அது செஞ்சச்சவனுக்கு 7x7 49 ஜென்மத்துக்கும் தொடர்ந்து வரும். எந்த பாவம் பண்ணினாலும் பெண் பாவம் மட்டும் பண்ணவே கூடாது...குலமே அழியும். - இந்த கருத்துக்கும் , இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை.

  • Gopalsami.N - chennai,இந்தியா

    இவனுக்கு இவ்வளவு சொத்து எங்கேயிருந்து வந்ததுன்னு கேட்டபின் சொத்துக்களை பறிமுதல் செய்து இவனையும் சுட்டுத்தள்ளனும். பிசினஸ் பண்ணி சம்பாரிச்சதுன்னு சொன்னால் வரி கட்டாம ஏச்சுயிருக்கான்னு அர்த்தம்.

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    சுதந்த்திரப்போராட்டமா செய்தான் செய்ததீல்லாம் பிராடு அப்பன் உதவியே பெரிசா காய் காட்டிண்டு ஜெயிலுக்குபோறானே

  • kailawsh - Pollachi,இந்தியா

    ஒரு கொலைக்குற்றவாளி சிக்கியதும் அவளிடம் வாக்குமூலம் வாங்கி அதற்கு ஆதாரம் தயாரித்து தங்களது அனுமான குற்றத்திற்கு கார்த்தியிடம் ஒப்புதல் பெற நடப்பதுதான் இந்தக்கூத்து. என்ன அடி அடித்தாலும் , எவ்வளவு நாள் ஆனாலும் இலவு பழுக்காது. அது வெடிக்கும். இந்த வழக்கு பஞ்சு பஞ்சாய்ப்பறக்கும்.

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    ஏனுங்க நீதிபதி ஐயா....நேத்து ஒரு லிஸ்டு கொடுத்தானே அந்த வசதிகளை செஞ்சு கொடுப்பீர்களா அய்யா...........கர்நாடகா சிறையிலே ஷாப்பிங் எல்லாம் ப்ரீயா போயிட்டு வர்றாங்க....பக்கத்துலயே அபார்ட்மெண்ட் எல்லாம் வாடகைக்கு எடுத்து தங்கி தூங்கி பிரியாணி சாப்பிட்டிட்டு வர்றாங்க.......நான் உங்ககிட்ட என்ன அப்படி பெரிசா கேட்டுட்டேன்.....ஏசி, வீட்டு சாப்பாடு, காட்டில் மெத்தை சோப்பு, டீவி இப்படி கொஞ்சம் கிடைக்க கூடிய அயிட்டங்களை தானே கேட்டேன்...இதுக்கு போயி கோவிச்சுக்கிறீங்களே? நீதிபதி: அந்த லிஸ்ட்டை எடுத்து நீயே படிடா.........அதுல அல்வா, மல்லிகைப்பூ, ஒரு சொம்பு பாலு அது மட்டும் தான் நீ எழுத்தாள..உட்டா ஜெயில்ல முதலிரவை ஏற்பாடு பண்ண சொல்லுவ போல.......முதல்ல எழுந்து போயி அந்த டாய்லெட்டை கழுவிட்டு வாடா..............இது திஹார் ஜெயிலு ..கனிமொழியை வந்தாலும் மெழுகுவர்த்தி தான் உருட்டனும்........

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    ஒத்தையில திகாரில நிக்காண்டா ...தைரியம் இருக்கறவன் இங்க வந்து பாருங்களா...........நான் காளாடா....நீ அசந்தா தான் அம்பது கோடி அடிப்ப.....நான் உன்னை அசர வக்கே அம்பது கோடி அடிப்பேண்டா....எனக்கு மேல ஒருத்தன் இருக்காண்டா அவன் அஞ்சாயிரம் கோடி அடிப்பாண்டா....தைரியம் இருந்தா திகாருக்கு வாடா.......

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தண்டனைக்காலத்தில் திருவாசகத்துக்கு உரை எழுதி தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் பெரிய சேவை செய்வார் என்று எதிர் பார்க்கலாம்

  • vns - Delhi,இந்தியா

    திரு சிதம்பரம் அவருக்கு நெருக்கமான உச்சநீதி மன்ற நீதிபதியிடம் தன்னுடைய வழக்கை விசாரிக்க வைத்து எப்படியும் ஏதாவது சலுகை தன்னுடய மகனுக்கு வாங்கிக்கொடுப்பார்.. இருக்கவே இருக்கிறார் பானுமதி போன்ற ஊழல் நீதிபதிகள்..

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

    ஒருவரின் ஒப்புதலின்றி எடுக்கப்படும் நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட், தனி மனித சுதந்திரத்திற்கும் இந்திய அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என்று கடந்த தசாபத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளது. இப்பேற்பட்ட சூழ்நிலையில் சாதாரண குடிமகனுக்கு கூட நார்க்கோ அனாலிசிஸ் டெஸ்ட் எடுப்பது சிரமம், ஒரு முன்னாள் பாரத பிரதமரை இந்த விஷயத்தில் நெருங்ககூடமுடியாது. ப்ராக்டிகலா யோசிங்க பாஸ். மேலும் ஒப்புதலுடன் நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட் எடுக்கப்பட்டாலும், அந்த நபர் அளிக்கும் வாக்குமூலம் அவர் சுய நினைவின்றி வழங்கியதால் அதை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று மேலும் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

  • Krishna - Trichy,இந்தியா

    ரஹீம் பாய்க்கு மோடி அரசு எது செய்தாலும் குற்றம், கார்த்திக் சிதம்பரத்தை தண்டித்தாலும் குற்றம், வெளிநாட்டிற்கு அவன் தப்பித்து போயிருந்தாலும் குற்றம். வேண்டுமானால் கார்த்திக் விஷயத்தில் என்ன பண்ணலாம் என்று உமது கருத்தை கூறும். உமது தேசபக்தி எம்மாத்திரம் என்று நாமும் பார்க்கலாமே.

  • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

    காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் தொட்டு கருணாநிதி குடும்பங்கள் வரை ஊழல் செய்தன .சோனியா ராஜபக்க்ஸவுடன் சேர்ந்து 2009 இல் தமிழின அழிப்பு செய்வதட்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டு மறுபக்கம் ஊழல் செய்தார்கள் .இன்று ஆட்சியை இழந்தார்கள் .பிஜேபி யம் ஊழலில் குறைந்தது அல்ல..3 லட்சக்கு மேல் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளின் ஆவிகள் இவர்களை தண்டித்துக்கொண்டே இருக்கும் .நேற்று ராகுல் சொல்லி இருந்தார் தங்கள் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டார்கள் .வர்கள் அதை செய்யவில்லை.ஒரு முன்னாள் விசாரணை அதிகாரி தான் குறிப்பை மாற்றி எழுதித்தான் இவர்களை தண்டித்தேன் என்று.அன்று ஈழத்து தமிழர்களுக்கு ராஜீவ் செய்த ஆமியை இலங்கைக்கு அனுப்பி தமிழரை அழித்தார்கள்.பெண்களின் கட்புக்களை சூறை ஆடினார்கள் .இவை எல்லாருக்கும் கடவுள் செயலால் கருணாநிதியும் ஆட்சியை இழந்தார் சோனியா லோகஸாபா தேர்தலில் 44 தொகுதிகளை மட்டும்தான் பெற்று காங்கிரஸ் ஆட்சியையும் இழந்தது.சிதம்பரத்தையும் கூண்டில் அடைக்க வேண்டும் .ஓர் அரசியல்வாதி மக்கள் வரிப்பணத்தை அபகரித்து ஊழல் செய்தால் தகுதி தராதரம் பார்க்க கூடாது .சட்டத்தின் முன் எல்லோரும் சமன்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    குட்டி வணிகர் உள்ளே செல்வது வணிகருக்கு பெரிய கவலையாம்... இத்தாலி கூட்டத்தின் பெனாமியை கவனமாக பாதுகாப்பது மிக முக்கியம் - ஏனென்றால் இத்தாலிக்கூட்டம் கொலை செய்ய சற்றும் அஞ்சாது...

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

    தனிமையிலே இனிமை காண முடியுமா ? பாதுகாப்பும் வேணும் என்ன செய்யலாம் ? சிவகங்கையின் பெரிய கோமகனையும் உள்ள பிடிச்சு போடுங்க .ஒருவருக்கு ஒருவர் துணையா இருக்கலாம் . சதி ஆலோசனை செய்யலாம் . இவர் உள்ள போய்ட்டா பேத்தியை யாரு கவனிப்பாங்க . பாட்டியும் வழக்குகளில் மூழிகி விடுவாரே? கவலைய விடுங்க . தங்க சொத்தையே பல கோடி அளவுக்கு இந்த சின்ன பொண்ணு மேல எழுதி வெச்சிட்டாங்க . பாசமா பாத்துக்க மாட்டங்ககளா ?

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

    அப்படியே கைய ரெம்ப தூக்கி போஸ் குடுக்க கூடாதுன்னு சொல்லுங்க எசமான் . எப்ப பாத்தாலும் கைய கைய தூக்கிட்டு நிக்கிறாரு .

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    சின்னம்மா பெங்களூர் சிறையில் எப்படி இருக்கின்றார் என்ற அறிவே நீதிபதிக்கு கிடையாது போல. துட்டை அள்ளி இறைத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த தாய் திரு நாட்டில்.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    மூக்குக் கண்ணாடியார் சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டார்.... இனி இவருக்கு தமிழகமெங்கும் சிலை வைக்க வேண்டும்.....

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

    "சோப்பு, புத்தகம், துணி, வீட்டு உணவு ஆகிய கோரிக்கைகளை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது." இதெல்லாமா ஓசியில் கிடைக்குது என்று பிள்ளையாண்டான் மேலும் ஐந்தாறு மாசங்களுக்கு உள்ளேயே இருந்து விட போகிறான். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் காலம் அதிலும் கரையான்புற்றின் ஊழல் ரத்தம் ஓடும் இனத்திற்கு சொல்லி கொடுக்கவே வேண்டாம்.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    திருட்டு பயலுக்கு என்ன சமூக அந்தஸ்து?.....

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    வெளிய வந்ததும் தமிழை வளர்க்க சிறை சென்றேன் ன்னு வாய் கூசாம சொல்லணும் ஜி.... மறந்துராதீங்க.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement