Advertisement

குரங்கணி காட்டுத்தீயில் 11 பேர் பலி

போடி : தேனி மாவட்டம், போடி அருகே, குரங்கணி காட்டுப் பகுதியில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணியர்,காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில், ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர், செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து பலியாயினர். படுகாயமடைந்த இரண்டு இளம்பெண், மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த, 27 பேர், ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த, 12 என, மொத்தம், 39 பேர், கேரள மாநிலம், மூணாறுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அங்கிருந்து, சூரியநெல்லி வழியாக, கொழுக்குமலை தேயிலை எஸ்டேட்டிற்கு, மலையேற்ற பயிற்சி செல்ல
திட்டமிட்டனர்.


'அவ்வழியாக சென்றால், கேரள வனத்துறையிடம் கட்டணம் செலுத்த வேண்டும். தேனி மாவட்டம், குரங்கணி வழியாக, கட்டணமின்றி செல்லலாம்' என, சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கூறியதால், மூணாறில் இருந்து, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு குரங்கணி வந்தனர்.


புற்களில் பரவிய தீ
செங்குத்தான, ஆபத்துமிக்க காட்டிற்குள் செல்ல, வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 'நீண்ட துாரத்தில் இருந்து வருவதால் அனுமதிக்க வேண்டும்' என, ராஜேஷ் கேட்டு உள்ளார்.
'கவனிப்புக்கு' பின், 39 பேரையும் காட்டிற்குள், வனத்துறையினர் அனுமதித்தனர். காலை, 8:30 மணிக்கு கொழுக்குமலைக்கு மலையேற துவங்கினர். குரங்கணியில் இருந்து, 7 கி.மீ., வரை சென்றனர். கொழுக்குமலை எஸ்டேட் நெருங்கி கொண்டிருந்தது.


மதியம், 1:00 மணிக்கு, மலை உச்சியில், ஒத்தமரம் எனும் பகுதிக்கு பின்புறம், 5 அடி உயரமுள்ள காட்டுப்புற்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. திடீரென சுற்றுலா பயணியரை, தீவு போல் தீ சுற்றி வளைத்தது. செய்வதறியாது தவித்த அவர்கள், சிதறி ஓடினர்.காட்டுத்தீயில் சிக்கியோரின் ஆடைகளில் தீப்பிடித்தது. உயிர் பிழைக்க, வழி தெரியாமல் ஓடிய போது, செங்குத்தான பள்ளத்தில், ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் விழுந்தனர்.ஏற்கனவே தீயில் பாதி உடல் வெந்திருந்ததால், பள்ளத்தில் தவறி விழுந்ததில், ஒன்பது பேரும் உடல் சிதறி பலியாயினர்.தீ விபத்து குறித்து, குரங்கணி கிராமத்தினருக்கு மதியம், 2:00 மணிக்கு தெரிந்தது. இளைஞர்கள் சிலர் அங்கு சென்று, தீயில் கருகி உயிருக்கு போராடியவர்களை மீட்டனர்.தீயணைப்பு இணை இயக்குனர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்புக் குழுவினர், 78 பேர், பல பிரிவு காவல் மற்றும் வனத் துறையினர் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 27 பேரை, 'டோலி' கட்டி மீட்டனர்.


இவர்கள் மதுரை, தேனி அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், சென்னையைச் சேர்ந்த நிஷா, 27, என்ற பெண்ணும், ஈரோட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணும் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்; இதனால், பலி, 11 ஆக உயர்ந்தது.


உடல்கள் மீட்பு

செங்குத்தான பள்ளத்தாக்கில், ஒன்பது பேர் உடல்கள் கிடப்பதை, மீட்புக் குழுவினர் நேற்று காலையில் உறுதி செய்தனர். அப்பகுதிக்கு செல்வது பெரும் சவாலாக இருந்தது. கிராமத்தினர் உதவியுடன், தீயணைப்பு குழுவினர், கயிறு கட்டி பள்ளத்தாக்கில் இறங்கினர்.


நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின், காலை, 11:00 மணிக்கு உடல்களை கயிற்றில் கட்டி துாக்கினர். உடல்கள், விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களில், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, காலை, 11:30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


அமைச்சர்கள் முகாம்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில், நேற்று முன்தினம் மாலையில் நடந்த, ஜெ., பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், உதயகுமார் ஆகியோர், தீ விபத்து குறித்து தெரிந்தவுடன், போடிக்கு சென்றனர்.இரவு முழுவதும் அங்கு முகாமிட்டு, மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 30 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், 27 பேரை உயிருடன் மீட்க முடிந்தது.


தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் மலையில், மேலும் தீ பரவாமல் தடுக்க, ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் தெளிக்கப்பட்டது. இதனால், விடிவதற்குள் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

பலியானவர்கள் விபரம்
1. ஈரோடு, முத்துக்குமார் மகள் திவ்யா, 25.

2. ஈரோடு, கவுந்தப்பாடி, நடராஜன் மகன் விவேக், 32.

3. ஈரோடு, கவுந்தப்பாடி, தங்கராஜ் மகன் தமிழ்செல்வம், 26.

4. கும்பகோணம், கிருஷ்ணமூர்த்தி மகள் அகிலா, 25.

5. மதுரை, புதுவிளாங்குடி, திருஞானசம்பந்தம் மகள் ஹேமலதா, 30.

6. கடலுார், திட்டக்குடி, செல்வராஜ் மகள் சுபா, 28.

7. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், பாலாஜி மனைவி புனிதா, 26.

8. சென்னை, பூந்தமல்லி, ரகுராமன் மகன் அருண்பிரபாகரன், 35.

9. கன்னியாகுமரி, உண்ணாமலைக்கடை, தாமோதரன் மகன் விபின், 30.

10. சென்னை, அருள் ஒளி மகள் நிஷா, 27.

காயமடைந்த 26 பேர்
பலியான விவேக் மனைவி திவ்யா, 25, திருப்பூர் ராஜசேகர், 29, திருப்பூர் சக்திகலா, 40, மகள்கள் பாவனா, 12, சாதனா, 11, ஈரோடு செந்தில்குமார் மகள் நேகா, 9, சென்னை சகானா, 20, சென்னை வடபழனி மோகன்ராஜ் மகள் நிவேதா, 23, காஞ்சிபுரம் முடிச்சூர் ரவி மகள் விஜயலட்சுமி, 27. சென்னை வேளச்சேரி பியூஷ் மனைவி பூஜா, 27, சென்னை மடிப்பாக்கம் தனபால் மனைவி மோனிஷா, 30, தாம்பரம் அனுவித்யா, 25, போரூர் சந்திரன் மனைவி இலக்கியா, 29, ஈரோடு சென்னிமலை தண்டபாணி மகன் பிரபு, 30. ஈரோடு சபிதா, 35, சென்னை தினேஷ் மனைவி சுவேதா, 28, ஈரோடு கவுண்டம்பாளையம் கிரி மகன் கண்ணன், 26, சேலம் தேவி, 28, சென்னை ராஜன் மகள் திவ்யா பிரக்ருதி, 24, உடுமலைப்பேட்டை முருகபூபதி மகள் சிவசங்கரி, 25, ஈரோடு ராமர் மகன் சதீஷ்குமார், 29, சென்னை சூரியநாராயணன் மகள் பார்கவி, 23, சென்னை இளங்கோவன் மனைவி ஜெயஸ்ரீ, 32, கிருஷ்ணமூர்த்தி மகள் சாய்வசுமதி, 20, கோவை விஸ்வநாதன் மகள் திவ்யா, 27, கேரளாவைச் சேர்ந்த மினா ஜார்ஜ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  சமூக விரோதிகள் அடுப்புக்கரிக்காக காடுகளில் தீ வைப்பார்கள்.இது பல காலமாக நடந்து வருகிறது.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எப்போதும் ஒரு துக்ககரமான சம்பவம் நடந்தபிறகு தான் அரசு அவசர அவசரமாக முடிவுகளை எடுக்கும், மலையேற்றம் போன்றவற்றிற்கு பயிற்சி அளிப்பவர்கள் முறையாக பதிவு பெறவேண்டும், வன இலக்காவினரிடம் முன்கூட்டியே அனுமதி வாங்கவேண்டும், வன இலக்காவினர் குழு பயிற்சி நடக்கும் இடத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும், போன்ற சட்டதிட்டங்களை அரசு கண்டிப்பாக பின்பற்றவேண்டும், வெளிநாடுகளில் இதுபோன்ற மலையேற்றம் போன்ற பயிற்சிகளுக்கு விதிமுறைகள் கடுமையாக இருக்கும் மேலும் பயிற்சி அனைத்தும் தரமானவையாக இருக்கும், நமது நாட்டில் அனைத்தும் மிக எளிமையாக பணம் கொடுத்தால் எல்லாமும் கிடைத்துவிடும் என்கிற நிலைமை

 • mindum vasantham - madurai,இந்தியா

  Summer time il trekking thavirthi vidungal ,matrapadi winyer time il ,malai kaalam mudintha udane sellungal aanal kootamala sellungal ,malai kaalathil vella avathu undu,,malai kalam mudintha january matham thaan sariyana neram,aanal neer athikam iruppathaal mirukam athikam varum

 • அகஸ்தியர் ஐயர் தொல்காப்பியர் ஐயர் திருவள்ளுவர் ஐயர் - சென்னை,இந்தியா

  புவியியல் வல்லுநர்கள் திரும்ப திரும்ப அலட்சியமாக இருக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் சம்பவம் நடந்த மலையில் விலங்குகள் பல மாதங்களுக்கு முன்பே இடத்தை காலி செய்து விட்டு இருக்க கூடும். மேற்கு தொடர்ச்சி மழையின் கீழ் பூமி பிளக்கிறது. இது செயற்கை தீயல்ல. பூமி பிளந்து சிறிய வால்கானா க்கள் அங்கங்கே மலை சிகரங்களில் உண்டாகி வருகிறது. அதனால் ஏற்பட்ட விபத்து.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ட்ரெக்கிங் பயிற்சி பள்ளி உரிமையாளர், வனத்துறையினர், ராஜேஷின் பணத்தசையால் இளைஞர்கள் இளைஞிகள் மாண்டுவிட்டார்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கவனிப்புக்கு' பின், 39 பேரையும் காட்டிற்குள், வனத்துறையினர் அனுமதித்தனர்..... ஆனால் எமதர்மன் பத்து பேர் உயிரை கவனித்து விட்டானே...

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  ssssss

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  குரங்கணி காட்டுத்தீ? சனி செவ்வாய் சந்திரன் சேர்க்கை இதை அரிது இவர்கள் செயல் பட்டிருக்க வேண்டும் தமிழக அரசு ஆஸ்தான ஜோதிடர்களை வைத்துக்கொண்டு அவர்கள் அறிவுரையை என்று முன் எச்சரிக்கையாக நடப்பது நன்று. நேபால் விமான விபத்தும் இந்த காலத்தின் நிலைதான். தேர்தல் நிற்கவேண்டும் என்றால் அரசியல் வாதிகள் ஜோதிடர்களை அணுகுகின்றார்கள். ஜோதிடம் விஞ்ஞான பூர்வமானது. இது மிகவும் எளிது. சனி செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்வது என்பது சற்று கவனிக்க வேண்டுய விஷயம். இதில் யாரை குறை சொல்வது? பொதுமக்களும் சற்று ஜோதிடத்தை நம்பி செயல் படுங்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எளிதில் யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது... ஏனென்றால் நம்மிடம் இது போன்ற சாதாரண விஷயங்களை கூட நேர்த்தியாக செய்ய தொழில் நுணுக்கம் மற்றும் உள்க்கட்டமைப்பு மற்றும் பயிற்சி கிடையாது... வனத்துறை இன்னும் முன்னேறவேண்டும்... செயற்கை கொள் மூலம் தீத்தடுப்பு போன்ற விஷயங்களை வளர்ந்த நாடுகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும்... உயிர்ச்சேதம் மிக எளிதில் தவிர்க்கக்கூடியதே...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அதுமட்டுமன்றி தமிழக அரசு 4 லட்சம் இவர்களுக்கு அறிவித்து இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவர்கள் எல்லாம் ஏதோ தினமும் வயித்து பிழைப்புக்காக தேன் எடுக்கவும், விறகு வெட்டி பிழைக்கவும் காட்டுக்குள் போன ஏழை அப்பாவி கிராமத்தினர் இல்லை. இவர்கள் எல்லாம் வீர சாககம் என்ற பெயரிலும், பேஸ் புக்கில் போட்டோ போட்டு பெருமை பீத்தி கொள்ளவும் அடங்கமாட்டாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தி கொள்ளும் மேல்த்தட்டு வர்க்கத்தினர். அதுமட்டுமன்றி விதிமுறைகளை மீறி போனவர்களுக்கு பணம் கொடுப்பது அதையே ஊக்குவிக்குப்பது போல ஆகி விடும். பார்க்க போனால் விதிமுறைகளை மீறி போனதற்க்காகவும் அவர்களுக்காக கொடுக்கபட்ட மீட்ப்பு பணிகளுக்கு உண்டான செலவுகளையும் இவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். இந்த பணம் அனைத்தையும் இவர்களை மீட்பதற்கு உயிரை பணயம் வைத்து செயல் பட்ட வீரர்களுக்கும், ஏழை அப்பாவி கிராமத்து பொது மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இப்போ இந்த ஒரு சம்பவத்தில் கூட எவ்வளவு சட்ட விதிமுறை மீறல்கள் நடந்து இருக்குன்னு பாருங்க. 1. அப்புடி போனா காசு தாஸ்தி ஆகும் இப்படி போனா கொஞ்சம் கம்மி ஆகும். இது கூட பரவாயில்லை. 2. வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்-அதையும் மீறி லஞ்சம் கொடுத்து, அவர்களை வற்புறுத்தி நிர்பந்தித்து இருக்கின்றனர். இது தேவையா? ஒரு விதிமுறை இருக்குன்னா அதை பாலோ பண்ணிட்டு போக வேண்டியதுதானே. அப்புடி என்ன நீங்க அவ்வளவு பெரிய அறிவாளி? லஞ்சம் குடுத்து உள்ள போனாலும், சிங்கம் இருந்தா உன்னை கொல்லத்தானே செய்யும்? ஸோ Don't try to act smart against a law, rule and/or nature. For sure you will be beaten to death. 3. பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு முறைகள், எமர்ஜென்சியில் என்ன செய்ய வேண்டும் என்ற பாடம், எதுவும் இருந்ததாக தெரியவில்லை. 4. Don't blame everyone else in the world for your bloody fu.....g mistakes. No body is responsible for your arrogant, stupid mistakes. If you don't follow the rules be ready to meet the consequences that can be even death in this case. 5. ஸோ, இதுல பரிதாபடுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், இதுல இருந்து ஒரு நாலஞ்சு பாடங்களையாவது கற்று கொள்ளுங்கள். இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தவிருங்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இப்புடித்தான் நம்ம ஆளுங்க, ஒரு ரூல் (RULE) அதாவது ஒரு சட்டம் இருக்கு அதை பாலோ பண்ணுங்கன்னா ஒரு பய கூட பாலோ பண்ண மாட்டான். அதை எப்புடி உடைச்சிட்டு நாம முன்னாடி போறதுன்னுதான் பார்ப்பானுக. இது ரொம்ப ரொம்ப தப்பு. நம்ம நாட்டுல இருக்கிற எல்லா பிரச்சினைக்கும் இதுதான் ஆணி வேறே. இப்புடியே போனா நாம எப்பதான் மாறுவது? இதுவே வெளிநாட்ல எல்லாம் பாலோ பண்ணுவாங்க. ஆனா நம்ம ஊருக்கு வந்துட்டா அதையும் பாலோ பண்ண மாட்டாங்க. அதுதான் ஏன்னு புரியல. நம்ம நாடு, நம்ம ஊருன்னா அவ்வளவு இளக்காரமா? இல்ல நம்ம ஊருங்கிறதுனால என்ன வேணா செய்யலாம் என்கிற தைரியமா? இல்ல நம்ம நாட்ல காசை கொடுத்தா எதை வேணாலும் பண்ணிக்கலாம் என்ற ஏகாந்தமா? ஏன் இப்புடி பண்றீங்கண்ணே தெரியல. முதல்ல நாமே எல்லோருமே, வாழ்க்கைல கொஞ்சம் கொஞ்சமாச்சும் ரூல்களை பாலோ பண்ணுவேன்னு என்று பாலோ பண்ணி பாருங்க. நாளடைவில் அதுவே கொஞ்சம் கொஞ்சமா மாறி எல்லோருமே பாலோ பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு ஒழுக்கம் வரும், நாடும் முன்னேறும். இதெல்லாம் நம்ம கைலதான் இருக்கு. அதைவிட்டுட்டு கவர்மெண்ட்டுதான் இதய பண்ணனும், இதெல்லாம் யாரு ஆரம்பிப்பாங்க, யாரு பண்ணுவாங்கன்னு பார்த்தீங்கன்னா யாருமே பண்ண மாட்டாங்க, அப்புறம் கடைசி வரைக்கும் நாம இப்படியேதான் இருப்போம். அதனாலதான் சொல்றேன், தயவு செஞ்சு நம்ம நாட்டை நேசிங்க, ரூல்களை பாலோ பண்ணுங்க. நல்ல படியா வாழுங்க.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சென்னையில் இருந்து காரில் வருபவர்கள், நல்ல வேலையில் சம்பாதிப்பவர்கள், அரசுக்கு கட்டணம் கட்டாமல் குறுக்கு வழியில் குரங்கணி வழியாக செல்ல முயற்சித்தது, பெரிய தவறு. போதை புற்களை தடுக்க தோட்டத்தினர் பற்றவைத்த தீ பரவி இரண்டு வாரங்களாக எரிந்து கொண்டு இருந்தது என்று நேற்றைய செய்தியில் வந்தது. பெரும்பாலான நேரங்களில், சிகரெட் மற்றும் குளிர் காய்வதற்கு சுற்றுலா பயணிகள் மூட்டிய தீயால், காடு பற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இறந்து போன பத்து மனித அப்பாவி உயிர்களை எண்ணி பெருந்துயரம் நாம் கொள்கிறோம். ஆனால் அதே சமயத்தில், எரிந்து போன எண்ணிலடங்கா மரங்கள், செடிகள், அவற்றை நம்பி உயிர் வாழும் பிற ஜீவன்கள் என்ன தவறு செய்தன? அவற்றை பற்றியும் நாம் கருத்தில் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும். இப்போது பத்துபேர் இறந்து போனதால், இந்த காட்டு தீ வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கே உள்ள இயற்கையை பாதுகாப்பது நமது தலையாய கடமை.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  சரியான வழிகாட்டிகள் இல்லாமல், காடுகளுக்குள் நுழைந்தால், எவரின் உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது எனலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement