Advertisement

உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்கு ஆலோசனை; ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு

''ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குங்கள்,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில், தமிழகம் மற்றும் உ.பி.,யில், 'காரிடார்' எனப்படும், தொழிற்சாலை வழித்தடம் அமைக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதையடுத்து, இந்த சிறப்பு ராணுவத் தொழிற்சாலை வழித்தடம் அமைப்பது குறித்த, நாட்டின் முதல் ராணுவக் கண்காட்சி, சென்னையில், அடுத்த மாதம் நடக்க உள்ளது.இந்நிலையில், ராணுவ தளவாடங்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்வது குறித்த கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும், இரண்டு தொழிற்சாலை வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.


உ.பி.,யில், ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி, சித்திரகூட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், ஒரு வழித்தடம் அமைய உள்ளது. தமிழகத்தில், சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சியை இணைக்கும் வகையில், மற்றொரு வழித்தடம் அமைய உள்ளது. ஆயுத உற்பத்தியின் மையமாக, நம் நாட்டை மாற்ற வேண்டும். அதற்கு, இத்துறையில், தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்.


அதற்கேற்ற வகையில், தனியார் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்துறையில் தற்போது, 37 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆயுதத்தயாரிப்பில், அதிக அளவிலான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.


உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு உற்பத்தியை அதிகரிப்பது, இத்துறையை மேம்படுத்துவது போன்றவை குறித்து, ஏற்கனவே, இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும், புதிதாக ஈடுபட ஆர்வமாக உள்ள நிறுவனங்களும், தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.புதிய தொழில் வழிப்பாதை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • Manian - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் தொழில் தொடங்க யாரும் நிலம் தர மாடடார்கள். சமுதாய சுரண்டல் கும்பல், அமெரிக்க கத்தோலிக்க சபை, போன்ற மதம் சார்ந்தவர்களிடம் இருந்து பணம் பெற்று, கூடாங்குளம் அணு உலைகளை தடை செய்ய முயன்ற அமெரிக்க தளவாட நிறுவனங்கள் இதை தடுக்கப் பார்ப்பார்கள். மேலும், சீரான மிஞ்சாரம் வேனும் என்றால், தனியாக மின் அம்பும் அமைத்து சூரிய ஒளி மூலம் மின்சாரம், கடலில் காராடி அமைத்து வரும் மின்சாரம் எல்லாம் அந்த தொழில்களுக்கே போகவேண்டும் . தனியார் முதலையிடு செய்வதை மத்திய அராசாங்க ஆனாய் மூலமே செய்ய வேண்டும். இப்படி வரும் மிஞ்சாரத்தை பொது மக்களுக்கு விற்க கூடாது. மேலும் ஜாதி-மதம்-இட ஒதுக்கீட்டில் தகுதி அற்றவர்கள் லஞ்சம் மூலம் பின் வாசல் மூலம் வரக்கூடாது. பணப் பரிவர்த்தனை நேரடியாக தொழில் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும். இத்தடை தரகர்களாக திருடர்கள் கழக அரசியல் வியாதிகளை கட்டு படுத்தும். எந்த வித உள்ளூர் வரி, ஜி.எஸ்.டி 10 வருஷங்களுக்கு கூடாது. பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசை நம்பக் கூடாது. ஆயுதப்படை வேற்றார்களே இருக்க வேண்டும். அவர்களும் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.தண்ணீர் தேவைக்கு கடல் நீரை அந்த நிறுவனங்களே அவர்களுக்கு கிடைக்கும் மிஞ்சரம் மூலம் பெற வேண்டும். அதில் பொது மஹாலுக்கு எந்த பகிர்மானமும் கிடையாது . வெளி நாட்ட்டு இந்தியர்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு வரி கிடையாது. 10 வருஷம் கழித்து, 20 % வருமான வரியே கடடவேண்டும். அதன் பின் ஜிஎச்டி வரியம் தரவேண்டும் (இதுவே பல மேல் நாடுகளில் வெளிநாடடார் முதலீடை ஈற்கும்விதம்) . அப்போது போடுடா மூலதனம் எல்லாம் எடுத்து வி டதால், லாபத்திலேயே வரி கட்டுவார்கள். அண்ணல் இதெல்லாம் வெறும் கற்பனையே. என் என்றால் (1 ) முதலீடு சாடாதை மாரற எதிர் கட்சிகள் ஒத்துழைக்காது. நாடு நாசமாக் போயி, சைனாவிடம் ஒப்படைத்து அடிமைகளாக ஆனால் பணக்காரார்களாக வாழவே அவர்கள் விரும்புவார்கள்.அவர்களை சைனா கொன்றுவிடும். (2 ) உள் கட்ட அமைப்பு சீராக்க யாரும் பணம் தரமாடார்கள். அதில் இடை தரகர்களாக திருடர்கள் கழகம் போன்று நாடு பூறா அரசியல் ஒட்டுண்ணிகள் இருக்கிறார்கள். மரண தண்டனை மூலமே அவர்களை ஒழிக்க முடியும். (3 ) இங்கு ஓசி கேட்க்கும் மக்கள், வெளிநாடார் பலன் இல்லாமல் முதலீடு செய்து போண்டியாக வேண்டும் என்று சொல்வார்கள்.(4 ) 95 % இளைஜர்களுக்கு எந்த ஆளுமை திறமை, சிந்திக்கும் திறமை என்னும்போது, வெளி மானிலத்தாரை வரவிடாமல் தினசரி போராட்டம் நடத்துவார்கள்.(5) வேலை வாங்கிய மறுநாளே அதிக சம்பளம் வேண்டும் என்று கோடி பிடித்து, கோஷம் இட்டு, ஆலைகளை மூடிவிட கம்யூனிஸ்ட்டு காம்ரேட்டுகளுடன் திருடர்கல் கழகம், ப. மா க, வைகோ, திருமா வளவன் போன்ற அற்ப்பர்கள் போராட்டம் நடத்துவார்கள். (6 ) சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் வன்முறையை தூண்டி உற்பத்தியை தடை செய்ய பார்ப்பார்கள். ... ஆகவே, நிர்மலா, மோடி விரும்பும் மாற்றங்களை சமூக விரோதிகள், முடடாள் மக்கள் வர விட மாட்டார்கள். ஒரே வழி, 10 வருஷம் எமர்ஜென்சி கொண்டுவருதல் நன்று.

 • MurugeshSivanBjpOddanchatram -

  ராணுவ மந்திரி அவர்களே நீங்கள் எத்தனை நன்மை செய்தாலும் இந்த நன்றி கெட்ட தமிழர்கள் ஓட்டை திராவிஷங்களுக்கு விற்றுவிட்டு மோடி ஒழிக கோசம் மட்டும்தான் போடுவார்கள்

 • Govind Srinivasan - Worthing,யுனைடெட் கிங்டம்

  ஆனால் வெங்கட்ராமனுக்கு பூணுல் அறுத்து தஞ்சாவூரில் அசிங்க படுத்தி மகிழ்ந்தது நமது திருட்டு கழகமும் திருட்டு முட்டாள் கழகமும். வரலாறை மறக்க வேண்டாம், மறைக்கவும் வேண்டாம் நண்பரே

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  எல்லாம் சரிதான்..,தனியாருக்கு கொடுங்க., வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிக்கொடுங்க.., கடைசீயில கம்பெனி நஷ்டமுன்னு சொல்லிட்டு..,10000 கோடி ரூபாய் ஆட்டயப்போட்டுட்டு அவன் போகட்டும்.,பாஸ்போர்ட்.,விசா எல்லாம் கம்பெனி தொடங்கும் போதே ஏற்பாடுபண்ணி கொடுத்திடுஙங்க..,அவன் போனபிறகு இங்குள்ள ஆதார் கார்டு..,ரேஷன் கார்டு எல்லாம் முடக்கிடலாம்.அவனுடைய சொத்தை பினாமி பேருல மாத்திக்க சொல்லிடலாம்.அப்ப..,அப்ப நமக்கு மட்டும் தேர்தல்நிதி., கட்சிநிதி.,மருத்துவநிதின்னு வந்து சேர்ந்தா போதும்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இந்த மாதிரி சிறு தொழில்கள் ஆரம்பித்து முன்னுக்கு வந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும், நாடு உண்மையில் முன்னேறும்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இந்த ஆண்டின் மிக சிறப்பான ஜோக், திமுக ஆட்சியில் தொழில்கள் நன்றாக இருந்தன என்பது. வியாபாரத்தில் இருந்த கமிசன் என்ற வார்த்தையை அரசியலில் கொண்டுவந்ததே அந்த திருட்டு முட்டாள் கட்சிதான். அந்த கமிஷன் இல்லாமல் இருந்திருந்தால் இன்று தமிழ்நாடு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்தே மதுரையை தலையகமாக கொண்ட பேருந்து நிறுவனத்தை அரசுடமை ஆக்கினார்கள். அந்த பஸ் வரும் நேரத்தை வைத்து கைக்கடிகாரத்தை சரி செய்தவர்கள் ஏராளம். இன்றய அரசு பஸ் நிறுவனங்களின் லட்சணத்தை யாரும் சொல்லி தெரிய வேண்டாம். ஒரே ஒரு குடும்பம் தொழிலில் முன்னேறுகிறது, அந்த தொழிலால் படிக்கும் குழந்தைகள் நாசமாவது தான் உண்மை. என்று சினிமா மாயையில் அறுபத்தி ஏழில் மாட்டிக்கொண்ட தமிழகம் வெளிவருகிறதோ அன்றுதான் தமிழகத்துக்கு விடிவுகாலம்.

 • Darmavan - Chennai,இந்தியா

  இதில் ஒன்று கவனிக்க வேண்டும்...நாட்டின் உண்மையான அக்கறை யாருக்கு என்று...போர் தளவாடங்கள் 70% நாம் இறக்குமதி செய்கிறோம் என்பது செய்தி அதுவும் சிறிய நாடுகளிடமிருந்து என்பது நாட்டுக்கு கேவலம் .ஆனால் காங்கிரஸுக்கு கமிஷன்தான் தேவை....அதுவும் இறக்குமதி செய்தால்தான் அடிக்கமுடியும்....இங்கே தயாரிப்பதனால் கமிஷன் கிடைக்காது...இது இன்றே போதும் இதுநாள்வரை இந்த திருட்டு கும்பல் நாட்டை சுரண்டதான் ஆட்சியில் இருந்தது என்று.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  உலகெங்கும் தனியாரே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கிறார்கள், அங்கேயே லேட்டஸ்ட் டெக் உடனேயே கிடைக்கும்.... ரபேல் நிறுவனமே ரிலையன்ஸை தேர்ந்து எடுத்து உள்ளனர். இதுல இந்திய அரசு எங்க வந்தது. 70 வருடமா தரகு மட்டுமே வாங்குவதற்காக HAL , BHEL , DRDO etc வை மழுங்கடித்து விட்டு, இப்போது உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்க பாஜக செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடுவது காங்கிரஸ் ன் பாக்-தந்திரம்./// - உங்கள் கருத்து, நிச்சயமாக, பிற மக்களை(வாசகர்களை), மிக ஆழ்ந்து யோசிக்க வைக்கும் எனலாம், இந்த, நம் இந்தியாவின், ராணுவ தளவாடங்கள்(லேடஸ்ட் மாடல்கள்) உற்பத்திகள் மற்றும் ஆராய்ச்சிகள் சார்ந்த, தொழிற்ச்சாலைகள் அமைக்கும் விசயங்களில்.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் .... போய் சேரக்கூடாது.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  இந்த தொழிற்சாலைகளை தென் மாவட்டங்கள் பக்கம் திருப்புங்க ...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கேட்பதற்கு இனிமையாக இருக்கு, சொல்வதற்கு அவர்களுக்கு எளிதாக இருக்கு, இவையெல்லாம் நடந்தால் நல்லது தான், ஆனால் எதுவும் நடைபெறப் போவதில்லை, அதைத்தான் நாம் பல விஷயங்களில் பார்த்து வருகிறோம்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உலகில் மிக பெரிய தரகு ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் மூலம் தான் கிடைக்கிறது... உள்நாட்டில் தயாரித்தால் கமிஷன் பறிபோய் விடுமே...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அம்பானி அதானி போன்ற இந்திய தொழிலதிபர்கள் இதில் தொழில் துவங்கினால் மதச்சார்பற்றவர்கள் எதிர்ப்பு அதிகமாகும் . அவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழகத்துக்கு நிறைய தொழில்கள் வரவேண்டும்... காங்கிரஸ் கால இரண்டாம் நிலையை விட மேன்மை பெறவேண்டும்...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  நல்ல செய்தி தான் . இது நாள் வரை இறக்குமதி செய்தெ பழகி விட்டோம் . இனிமே நமக்கு நாமே . மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் கை கொடுக்கும் . ரிலையன்ஸ் நிறுவனம் இதில் நுழைகிறதாமே ? பெரிய வாய்ப்பு எல்லாம் அங்கு போகுமே ?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பல நல்ல மத்திய நிறுவனங்கள் தொடங்கியதாக கூறுவார்கள்.....நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரால் அது மீண்டும் நிகழும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  போர் காலங்களில், உள்நாட்டு தயாரிப்புக்கள்தான், மிகவும் பக்க பலமாய் இருக்கும் எனலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement