Advertisement

'டவுட்' தனபாலு

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு: நாங்கள், மத்திய அமைச்சரவையில் இருந்து தான் வெளியேறி உள்ளோம்; கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை.

டவுட் தனபாலு: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து, தீவிர அரசியல் செய்து வர்றாரு... நாளைக்கே அவர், பா.ஜ.,வுடன் கைகோர்க்க மாட்டார் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை... எனவே, 'ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்' என்ற நிலைப்பாட்டை, நீங்க எடுத்து இருக்கீங்களோ என்ற, 'டவுட்' வலுக்குதே...!


பத்திரிகை செய்தி: அரசியல் கட்சிகள், வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர், ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்தார்.

டவுட் தனபாலு: காளானைப் போல கட்சிகள் முளைப்பது, இப்படி ஒரு வசதி இருப்பதால் தான்... அரசியல்வாதிகளின் அடிமடியில் கைவைக்கும் இத்திட்டத்துக்கு, நாட்டில் உள்ள லெட்டர் பேடு கட்சிகள் துவங்கி, ஆளுங்கட்சி வரை, அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டை போடும் என்பதில், துளியும், 'டவுட்'டே இல்லை...!


ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: தமிழகத்தில், பா.ஜ., காலுான்றாமல் தடுப்பதற்கும், தமிழக மக்களின் நன்மைக்காகவும், தி.மு.க.,வுடன் கூட்டு வைத்துள்ளோம்.

டவுட் தனபாலு: 'பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக மட்டும் தான், தி.மு.க.,வுடன் நெருக்கம் பாவிக்கிறோம்... மற்றபடி, தி.மு.க., மீதான நன்மதிப்பால் அல்ல... நாளைக்கே, தி.மு.க.,வை விட, பா.ஜ.,வை வீழ்த்தும் சக்தி ஏதும் தென்பட்டால், உடனடியாக அவர்கள் பக்கம் ஓடிடுவோம்'னு, வெளிப்படையாகச் சொன்னால் என்னங்கறது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • murali - Chennai,இந்தியா

    வை. கோ ஒரு அரசியல் வியாபாரி, அண்ணா தி மு க, தி மு க ,தே.மு தி க என மாறி மாறி கூட்டணி வைக்கும் அரசியல் கோமாளி

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    வைகோ வின் பேச்சுக்கெல்லாம் அர்த்தம் கற்ப்பிப்பது வேஸ்ட். இன்னயபொழுதுக்கு வண்டியை ஓட்ட ஏதோ பேசுவார். அவ்வளவுதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement