Advertisement

'மனச பத்தரமா பாத்துக்கறது' காமெடி மட்டும் தான் : நடிகர் சாம்ஸ் உறுதி

பொள்ளாச்சியில், 'களவாணி மாப்பிள்ளை' பட ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக இருந்தது. மக்களை கலாய்த்துக் கொண்டிருந்த காமெடி நடிகர் சாம்ஸ் விஸ்வநாதன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி...


* 'சாம்ஸ்னு' எப்படி பெயர் வந்தது?
நிஜ பேரு சுவாமிநாதன், சினிமாவுக்கு வந்ததும், 'சாம்ஸ்' விஸ்வநாதன் என, மாற்றினாங்க. கிரேசியுடன் நாடகத்தில் நடித்த போது, 'சாம்ஸ்'னு பேரு வச்சுட்டாரு.


* சினிமா ஆர்வம் பற்றி...
சகோதரர் ரவிச்சந்திரன் சிறுவயதில், லென்ஸ் வைத்து, பழைய பிலிம்களால, வீட்டிலேயே 'ஸ்லைடு' ஓட்டுவார். நாடகத்துக்கு கதை எழுதுவார். அவரை பார்த்து பழகியதால், எனக்குள் கலை ஆர்வம் வந்தது. எனது தாத்தாவும் ஒரு விகடகவி. அதன் தாக்கம், என்னை மக்கள் முன்னிலையில் காமெடி நடிகனாக உருவாக்கியது.


* சினிமா என்ட்ரி எப்போது?
கிரேசி மோகன் நாடகத்தில், நடித்த அனுபவம் சினிமாவுக்குள் என்னை அழைத்துச் சென்றது. என்னோட குருநாதர் கிரேசி மோகன்; குருகுலம் கிரேசி கிரியேஷன்ஸ். காதல் மன்னன் படத்தில், 'தல'யுடன் தலை காட்டினேன். கிங் படத்தில் தான் டயலாக் பேச வாய்ப்பு கிடைத்தது. மொத்தம், 125 படங்கள் நடிச்சிருக்கேன்; 90 படங்கள் வெளிவந்திருக்கு.


* நாடகத்துறை நலிவடைந்து வருகிறதே...
'லைவ் ஆடியன்ஸ்' இருப்பதால் நாடக கலை இன்னும் உள்ளது. அதில், மாற்றங்கள் கொண்டு வந்தா நல்லா இருக்கும்.


* காமெடி டிராக் எப்படியிருக்கு?
என்னோட, நடிப்பில், 40 சதவீதம் டயலாக்; மற்றதெல்லாம் 'ரியாக் ஷன்' தான். பாடல் காட்சியாக இருந்தாலும், காமெடி இருக்கணும்கறது என்னோட ஆசை. ஒவ்வொருத்தர் பேசுவதிலும் காமெடியை தேடுவேன். மக்களை மனசு விட்டு சிரிக்க வைப்பது காமெடி காட்சிகள் தாணுங்க. அதனால, காமெடியில தான், மன திருப்தி கிடைக்குது.


* சினிமா நேரம் தவிர, மற்ற நேரத்தில் 'சாம்ஸ்' எப்படி?
'டிவி'யில், காமெடி சீன்ஸ் பார்ப்பேன்; பாடல்கள் கேட்பேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் படிப்பது பழக்கம். நாம் எங்கு செல்ல வேண்டும் என நினைக்கிறோமோ, அங்கு அழைத்துச் செல்லும் சக்தி கொண்டது புத்தக வாசிப்பு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement