Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

போலி மல்லிகை


மல்லிகைப்பூ விளைச்சல் குறைவாக இருக்கும்போது, நந்தியாவட்டைபூவின் மொட்டு தான், மல்லிகைபூவிற்கு மாற்றாக விற்பனை செய்யப்படுகின்றது. மல்லிகைப்பூவின் காம்பை விட இதன் காம்பு, நீளம் என்பதால் காம்பினை வெட்டி பயன்படுத்துகின்றனர். நந்தியாவட்டை மொட்டுகளை கழுவினால் கஞ்சி வடித்த நீர் போல வரும். அதன் பின்னரே கட்ட முடியும். இதன் மொட்டுகள் பறித்த பின், மலர்வது இல்லை. இதன் இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பட்டை, பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

தகவல் சுரங்கம்

அலகாபாத்தில் 'மாசி மேளா'


மகா கும்பமேளா, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்ப மேளாவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அர்த்த கும்பமேளாவும் நடைபெறும். அலகாபாத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 'மாஹ் மேளா' ஒரு மாதம் நடைபெறுகிறது. மாஹ் மேளாவில் இந்தியா முழுவதும் உள்ள சாதுக்களும், சன்னியாசிகளும், பக்தர்களும் அலகாபாத் நதிக்கரையில் கூடாரங்கள் அமைத்து தங்குவர். காலையும், மாலையும் கங்கை, யமுனை கலக்கும் 'சங்கம்' என்ற இடத்தில் நீராடுவர். அதிகளவில் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் விழாவாக உள்ளது. சுற்றுலா வர்த்தகம் மேம்பட இது உதவுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement