Load Image
Advertisement

சிடி மணியை தொட முடியுமா?

 சிடி மணியை தொட முடியுமா?
ADVERTISEMENT
பிரபல ரவுடி, 'சிடி' மணியை, போலீசாரால் நெருங்கக் கூட முடியாது என்றும், 'முடிந்தால், 'சிடி' மணியை தொட்டுப்பார்க்கட்டும்' என்றும், தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டரை மிரட்டி பிடிபட்ட, ரவுடி தவக்களை பிரகாஷ், சவால் விட்டுள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண் டாட்டத்திற்கு பின், ரவுடி கள் களையெடுப்பில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
தேனாம் பேட்டை இன்ஸ்பெக்டர், கிரி, பிரபல ரவுடி, 'சிடி' மணியின் கூட்டாளி, கணேசனை பிடித்து விசாரித்தார்.
தகவல் அறிந்து, தேனாம்பேட்டை, தாமஸ் சாலையைச் சேர்ந்த, ரவுடி, 'தவக்களை' பிரகாஷ், போனில், இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்தான்.
இன்ஸ்பெக்டர் வீட்டில், வெடிகுண்டு வீசுவதாக, மிரட்டினான். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தவக்களை பிரகாஷை, போலீசார் பிடித்தனர். காவல் நிலைய, 'லாக் அப்'பில், அவன் இருந்த போது, பிரபல ரவுடி, 'சிடி' மணியை, போலீசார் வளர்த்த விதம்; அவனிடம், மாமூல் வாங்கிய, உயர் போலீஸ் அதிகாரிகள் பற்றி, பட்டியலிட்டு
உள்ளான்.
தவக்களை பிரகாஷ், கூறியதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தேனாம்பேட்டை, தாமஸ் சாலையைச் சேர்ந்த, மணிகண்டன், 2007ல், தி.நகர், சைதாப்பேட்டை நடைபாதைகளில், 'சிடி' விற்றான். இதனால், அவன், 'சிடி' மணி என, அழைக்கப்பட்டான்.
செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வன், சினிமா தொழிலாளியாகவும் வேலை பார்த்தான்.
போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட, பிரபல ரவுடி, திண்டுக்கல் பாண்டியனின் நட்பு, அவனுக்கு கிடைத்தது. பாண்டியன் மறைவுக்கு பின், 'சிடி' மணி, பெரிய ரவுடியாக
உருவெடுத்தான்.
நவீன ரக துப்பாக்கி
யுடன், வலம் வந்தவன், வெடிகுண்டு வீச்சு, ஆள் கடத்தல், தொழில் அதிபர்களை மிரட்டி, பணம் பறித்தலில் ஈடுபட்டான்.
தேனாம்பேட்டை வெங்கடாவை, 2007லும், கோயம் பேட்டில், வாழைத் தோப்பு, சதீஷை, 2009லும், கொன்றான். அதே ஆண்டு, கே.கே.நகரில், சங்கர், திவாகரன் ஆகியோரை கொன்றான்.
கடந்த, 2011ல் கோட்டூர்புரத்தில், எம்.ஜி.ஆர்., நகர் கார்த்திக், 2012ல், கோட்டூர்புரத்தில், 'ஆவி' சுரேஷ், தேனாம்பேட்டை, ஆலயப்பன் என்ற சாமியர், 2013ல், வாலாஜாபேட்டையில், சிலோன் மோகன், 2014ல், சைதாப்பேட்டையில், அண்ணாமாலை, என, 'சிடி' மணியின், கொலை பட்டியல் நீள்கிறது.
கடந்த, 2015ல் மேற்கு சைதாப்பேட்டை, குமரன் காலனியில், முன்னாள் ரவுடியும், தி.மு.க., வட்ட செயலருமான, ஜெகநாதன், 50, என்ற, குள்ள ஜெகாவை, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் கொடூரமாக வெட்டியும், கொல்ல முயன்றான்.
'சிடி' மணி, பெரிய தாதா போல், வளர்ந்ததற்கு, உயர் போலீஸ் அதிகாரிகள், ஐந்துக்கும் மேற்பட்ட, இன்ஸ்பெக்டர்களே காரணம். அவர்களுக்கு, 'சிடி' மணி, கிழக்கு கடற்கரை சாலையில், நிலம் வாங்கி கொடுத்துள்ளான். மாமூல் வசூலிக்க, அவனை, போலீசாரே வளர்த்தனர். அவனிடம், கிலோ கணக்கில், நகை வாங்கி குவித்துள்ளனர்.
'சிடி' மணி, தி.நகர் தொழில் அதிபரை மிரட்டி, 1.50 கோடி ரூபாய் வாங்கினான். அதேபோல், சைதாப்பேட்டையில், உதவி போலீஸ் கமிஷனராக வேலை பார்த்த ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெற்றார். அவருக்கு, 'சிடி' மணி, 50 லட்சம் ரூபாய் செலவழித்து, பிரிவு உபசார விழா
எடுத்தான்.
தற்போதும், கட்டப்பஞ்சாயத்து, தொழில் அதிபர்களிடம் மாமூல் வசூலிப்பு என, கொடி கட்டி பறக்கும், 'சிடி' மணியை, போலீசாரால் தொடக்கூட முடியவில்லை. முடிந்தால், 'சிடி' மணியை பிடித்து பாருங்கள்.
இவ்வாறு தவக்களை பிரகாஷ் கூறியதாக, போலீஸ் அதிகாரிகள்
தெரிவித்தனர்.

- நமது நிருபர் -


வாசகர் கருத்து (10)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement