Load Image
Advertisement

தொண்டை பிரச்னையால் மக்கள் அவதி மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம்

  தொண்டை பிரச்னையால் மக்கள் அவதி  மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம்
ADVERTISEMENT
திருப்பூர் :திருப்பூரில் வினி@யாகிக்கப்படும், குடிநீரில் கு@ளாரின் அதிகளவில் கலப்பதால், பலருக்கும் தொண்டை வலி உள்பட பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ஏறத்தாழ, 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்; பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம், இரண்டு குடிநீர் திட்டங்களும்; காவிரி ஆற்றில் இருந்து, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் மூலம், மூன்றாம் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மாநகராட்சியில், ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 142 குடிநீர் இணைப்புகளும்; 8 ஆயிரத்து, 839 வணிக பயன்பாட்டு இணைப்புகளும் உள்ளன. போதிய குடிநீர் திட்டங்கள், கட்டமைப்புகள் இல்லாததால், வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நோய்களை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளோரினேசன் செய்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீரில், 0.2 பி.பி.எம்., முதல், 0.5 பி.பி.எம்., வரை மட்டுமே குளோரின் கலக்க வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய விதிமுறை உள்ளது. @மலும், தரமான குளோரின் பவுடரை, இயந்திரங்கள் மூலம் சரியான முறையில் கலக்க வேண்டும்.
மாநகராட்சி வினி@யாகிக்கும் குடிநீரை குளோரினேசன் செய்ய, போதிய தொழில் நுட்பங்கள், இயந்திரங்கள், பணியாளர்கள் இல்லை. இதனால், மூட்டை, மூட்டையாக கணக்கு ஏதுமின்றி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கு@ளாரின் கொட்டப்படுகிறது.

அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால், பொதுமக்கள் பல்@வறு பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவ்வாறு, கு@ளாரின் கலக்கப்பட்ட குடிநீரை பருகும் மக்களுக்கு, தொண்டை எரிச்சல், வாய்ப்புண், தொண்டை கரகரப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு உண்டாகிறது. @பŒ முடியாமல், பல்@வறு வகையில் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக, தொண்டை உபாதைகளுக்காக மட்டும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்øŒ பெற வரு@வாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், "வாரத்துக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீரில், தரமற்ற குளோரின் பவுடர் கலக்கப்படுகிறது. வெள்ளை சுண்ணாம்பு, குப்பையுமாக குடிநீர் உள்ளது. இதை பருகினால், தொண்டை எரிச்Œல் ஏற்படுகிறது. வா#ப்புண் உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகிறது. Œமையலுக்கு பயன்படுத்தினால், பருப்பு, காய்கறிகள், அரிசி வேக, நீண்ட@நரமாகிறது; ”வையாக இருப்பதில்லை.

எனவே, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில், குளோரினேசன் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்க @வண்டும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை, மாவட்ட நிர்வாகம் அமைத்து, குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய @வண்டும். அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

குடிநீரை நன்றாக கா#ச்சி குடியுங்க!

திருப்பூர் அர” தலைமை மருத்துவமனை டாக்டர் கூறுகையில், "குடிநீரில் கண்டிப்பாக கு@ளாரின் கலக்க @வண்டும். ஆனால், அது அனுமதிக்கப்பட்ட அளவாக இருக்க @வண்டும். அளவுக்கு மீறி கலக்கும் @பாதும் பிரச்னை ஏற்படலாம்.இதுதவிர ஆர்.ஓ., வாட்டர் குடிப்பதாலும், சிலருக்கு தொண்டையில் பிரச்னை ஏற்படும். ஆர்.ஓ., öŒ#யும் @பாது, குடிநீரில் உள்ள கனிமங்களை, அது எடுத்து கொள்கிறது. இதனாலும், சிலருக்கு தொண்டை கட்டு, எரிச்Œல் ஆகியன ஏற்படுகிறது. என@வ, எந்த குடிநீராகவும், நன்றாக கா#ச்சி, ஆற வைத்து குடித்தால், தொண்டையில் எந்த பிரச்னையும் ஏற்படாது,' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement