Load Image
Advertisement

வந்தது நிதி: தந்தது நிம்மதி!கோவை மண்டலத்தில் ரூ.270 கோடி பட்டுவாடா:போக்குவரத்துக்கழக பணியாளர்கள் பெரு மகிழ்ச்சி!

  வந்தது நிதி: தந்தது நிம்மதி!கோவை மண்டலத்தில் ரூ.270 கோடி பட்டுவாடா:போக்குவரத்துக்கழக பணியாளர்கள் பெரு மகிழ்ச்சி!
ADVERTISEMENT
கோவை:பல ஆண்டுகளாக, நிலுவை வைக்கப்பட்ட பல கோடி நிலுவைத் தொகை வந்து சேர்ந்ததில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முன்னாள் பணியாளர்கள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, 2010ம் ஆண்டுக்கு பின், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், 20 ஆயிரம் பேருக்கு, மூவாயிரம் கோடி ரூபாய் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டியுள்ளது. கோவை மண்டலத்தில் மட்டும், நான்காயிரம் பேருக்கு நிலுவையுள்ள தொகை, 270 கோடி ரூபாய். விடுப்பு, பணிக்கொடை கம்யூட்டேஷன், பி.எப்., பஞ்சப்படி, ஒப்பந்தகால அரியர், அதற்கான பென்ஷன், கிரேடு பே போன்றவை இதில் அடக்கம்.
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தம், அமலுக்கு வந்த நிலையில், 2013ம் ஆண்டு, ஒப்பந்த பணப்பலன்கள், ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் வழங்கப்படவில்லை. 2003 ஏப்ரலுக்குப் பின், பணியில் சேர்ந்தோருக்கு, பென்ஷனும் இல்லை, கணக்கும் இல்லை. அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர், பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.மருத்துவத்திட்டம், சேமநலத்திட்டம், 7வது ஊதியக்குழு பரிந்துரை, குறைந்த பட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை, அரசு ஏற்றுக் கொண்டது.

நிலுவைத் தொகையை, விரைவாக வழங்குவதாக அரசு அறிவித்தது. அதன்படி, அனைவருக்கும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், முன்னாள், இந்நாள் அலுவலர்கள், பணியாளர்களுக்கு அவர்களுக்குரிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

4,000 பேருக்கு...
கோவை மண்டலத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்ற, நான்காயிரம் பேருக்கு, 270 கோடி ரூபாய் நிலுவைத் தொகை, சமீபத்தில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில், மேலாண் இயக்குனர், பொது மேலாளர், உதவி மேலாளர், கோட்டமேலாளர், தலைமைப் பொறியாளர், உதவிப்பொறியாளர் அந்தஸ்தில் பணிபுரிந்த அதிகாரிகள், கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், பணப்பலன் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement