Load Image
Advertisement

டீ கடை பெஞ்ச்

  டீ கடை பெஞ்ச்
ADVERTISEMENT
ஆவினை திவாலாக்கும் பணியில் அதிகாரிகள்!


''அமைச்சரின் உறவினர்னு சொல்லியே மிரட்டுறாங்க பா...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாரு வே அது...'' என கேட்டார்
அண்ணாச்சி.
''ஈரோட்டுல இருக்குற ஒரு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை தான்... இவங்க, ஆசிரியர்கள், அலுவலர்களை, சமுதாய கண்ணோட்டத்துல பார்க்குறாங்க பா...
''தன் சமுதாயத்தைச் சேர்ந்தவங்களிடம் பரிவோட நடந்துக்குறாங்க... அவங்களுக்கு தாராளமா சலுகைகள் தர்ற இவங்க, மத்தவங்களை ஒருமையில பேசி, 'டார்ச்சர்' பண்றாங்க...
''இது பத்தி, அவங்க காதுபடவே அரசல், புரசலா புகார்கள் போயிருக்கு... அதுக்கு, 'நான் அமைச்சரின் உறவினர்... என்னை யாரும் அசைக்க முடியாது'ன்னு தெனாவெட்டா சொல்லி, வாயை அடைச்சுட்டாங்க பா...'' என, கூறிய அன்வர்பாயின் போன் ஒலித்தது...
போனை எடுத்த அன்வர்பாய், ''அம்மா ஜெயந்தி... உங்க அண்ணன் செங்கோட்டையன் போன், 'பிசி'யா இருக்கு... அவர் வந்த உடன் பேசச் சொல்லு...'' என்று
கூறி வைத்தார்!''ஸ்பெஷல் விருந்து குடுத்திருக்காவ வே...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''பஸ் கட்டண உயர்வை கண்டிச்சு, திருவள்ளூர்ல நடந்த பொதுக் கூட்டத்துல, ஸ்டாலின் கலந்துக்கிட்டாரு... கூட்டம் முடிஞ்சதும், அவருக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும், பக்கத்துல இருந்த தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில, இரவு விருந்து குடுத்தாவ வே...
''இதுக்கு வந்த ஸ்டாலினுக்கு, நிர்வாகம் தரப்புல, வெள்ளி தட்டுல ஆரத்தி எடுத்தாவ... அப்புறமா, ஆம்பூர் மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், டைகர் இறால்னு, வகை வகையா அசைவ உணவுகளை
பரிமாறியிருக்காவ வே...
''பழவேற்காடு ஏரியில பிடிச்ச, நண்டுல செஞ்ச ஸ்பெஷல் மசாலாவை, ஸ்டாலின் ரொம்பவே ரசிச்சு சாப்பிட்டிருக்காரு... கூட வந்த கட்சிக்காரங்களும், ஒரு பிடி பிடிச்சிட்டு கிளம்புனாவ வே...'' என்றார்
அண்ணாச்சி.''ஆவினை திவாலாக்கிடுவான்னு புலம்பறா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னையில, ஆவினுக்கு, 40க்கும் மேற்பட்ட மொத்த பால் முகவர்கள் இருக்கா... இவாள்ல, பால் பதப்படுத்தற வசதி உடைய லாரிகளை வச்சிருக்கறவாளுக்கு, லிட்டருக்கு, 50 பைசாவும், அந்த வசதியில்லாத லாரிகள் வச்சிருக்கறவாளுக்கு, லிட்டருக்கு, 27 பைசாவும், ஊக்கத் தொகையா குடுக்கறா ஓய்...
''இடையில, சம்பந்தமே இல்லாம, 2017 ஆகஸ்ட்ல இருந்து, மூணு மாசத்துக்கு, இவாளுக்கு திடீர்னு கூடுதல் ஊக்கத்தொகை குடுத்திருக்கா... அதாவது, பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு, 40 பைசா, ஆரஞ்சு, நீல நிற பாக்கெட்களுக்கு, 30 பைசா, ஊக்கத்தொகையா
குடுத்திருக்கா ஓய்...''சென்னையில, தினமும், அஞ்சு லட்சம் லிட்டர் பாலை, மொத்த வியாபாரிகள் வாங்கறா... மாசத்துக்கு, 1.2 கோடி லிட்டர் வீதம், மூணு மாசத்துக்கு, 3.6 கோடி லிட்டருக்கு, ஊக்கத்தொகை குடுத்திருக்கா ஓய்...
''இந்த வகையில, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல போயிருக்கு... இதை, இடைத்தரகர் மூலமா, சில உயர் அதிகாரிகளுக்கு, 50 சதவீதம் பிரிச்சு குடுத்திருக்கா ஓய்...
''இந்த ஊக்கத் தொகை திட்டத்தை தொடரவும் முடிவு பண்ணியிருக்கா... இப்படியே போனா, ஆவின் திவாலாகிடும்னு நேர்மையான அதிகாரிகள் புலம்பறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement