Load Image
Advertisement

அம்மா டூவீலர் திட்ட பயனாளிகள் தேர்வு

திருப்பூர் : அரசு மானியம், 25 ஆயிரம் ரூபாய் போக, மீதித்தொகையை செலுத்தும் திறனுள்ளவர்கள், அம்மா டூ வீலர் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின், அம்மா டூ வீலர் திட்டத்தில், வேலைக்கு செல்லும் பெண்கள் டூ வீலர் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. வரும் 24ம் தேதி, பிரதமர் மோடி, இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதற்கு பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பயனாளிகளுக்கு டூ வீலர்களுக்கான மானியம் வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 13 ஆயிரத்து 886 பேர், இத்திட்டத்தில் மானியம் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். டூ வீலர் மானியம் வழங்கும் திட்டத்தில், பெண் பயனாளிகள் கட்டாயம் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க, எல்.எல்.ஆர்., இருந்தாலே போதும் என்று அரசு அறிவித்திருந்தாலும், லைசென்ஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தொகுதி வாரியாக, சில பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் விழா முடிந்ததும், அந்தந்த தொகுதிகளில், "டூ வீலர்' மானியம் வழங்கும் விழா நடக்க உள்ளது. இத்திட்டம் அறிவித்த பிறகு, லைசென்ஸ் எடுத்தவர்களுக்கு இந்தாண்டு மானியம் கிடைப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: "டூ வீலர்' மானிய திட்டத்தில், மானியத்தொகை, 25 ஆயிரம் ரூபாய் போக, மீதித்தொகையை மொத்தமாக செலுத்தும் பயனாளிகள் கிடைத்தால், எவ்வித தொந்தரவும் இருக்காது. மானியத்தை பெற்றுக் கொண்டு, தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில், டூ வீலர் எடுப்பவர்களால் சிக்கல் வர வாய்ப்புள்ளது.
வங்கி கடன் வசதி கிடைத்துள்ளதாக, வங்கியாளர்கள் கடிதம் அளிக்க வேண்டும். டூ வீலருக்கான மீதித்தொகை செலுத்தாமல் இருந்தால், டூ வீலர் பறிமுதல் செய்யப்படும்; தமிழக அரசின் இத்திட்டத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிடும். எனவே, மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரையை ஏற்று, டூ வீலர் வழங்கப்படாது. குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் லைசென்ஸ் பெற்றிருந்து, வாகனத்துக்கான மீதித்தொகையை செலுத்த தயாராக இருக்கும் பயனாளிகளை கண்டறிந்து, பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement