Load Image
Advertisement

டீ கடை பெஞ்ச்

   டீ கடை பெஞ்ச்
ADVERTISEMENT
ரவுடிகளின் தோஸ்தாக மாறிய இன்ஸ்பெக்டர்!


''தண்ணி குடுத்து தாகம் தணிச்சிருக்காங்க ஓய்...'' என்றபடியே வந்தார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''தி.மு.க., மகளிர் அணிச் செயலர் கனிமொழி, சமீபத்துல, புதுக்கோட்டை பொதுக் கூட்டத்துல பேசினாங்க...
''அப்ப, கீழே இருந்த ஒரு மூதாட்டி, பக்கத்துல இருந்தவாளிடம், தனக்கு குடிக்க தண்ணி வேணும்... கட்சிக்காராளிடம் இருக்கற தண்ணீர் பாக்கெட்டை வாங்கி தாங்கோன்னு சைகையில
கேட்டிருக்காங்க ஓய்...''இதை கவனிச்ச கனிமொழி, மேடையில தனக்கு வச்சிருந்த தண்ணீர் பாட்டிலை, கட்சிக்காரர் மூலமா, மூதாட்டிக்கு அனுப்பி குடிக்க வச்சாங்க... இதுல, மூதாட்டி நெகிழ்ந்து போயிட்டாங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''அமைச்சர் மணிகண்டனின், 'ஈகோ' பிரச்னையால, அ.தி.மு.க.,வுல உச்சக்கட்ட பூசல் நிலவுது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''ராமநாதபுரம் மாவட்டத்துல, பொதுக் கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளுன்னு எதுவா இருந்தாலும், அமைச்சர், தன்னையே முன்னிலைப்படுத்திக்குறார்... இதனால, மூத்த நிர்வாகிகள் மனம் வெதும்பி போயிருக்காங்க பா...
''சமீபத்துல, அ.தி.மு.க., சட்டசபை தொகுதி உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்துச்சு... இதுக்கு, மாவட்ட அவைத் தலைவரான, அமைச்சரின் அப்பாவை தவிர, வேற நிர்வாகிகள் யாருமே வரலை பா...
''சீனியரான, எம்.பி., அன்வர்ராஜா, மாவட்டச் செயலர், முனியசாமி, ராமநாதபுரம் நகரச் செயலர்னு யாருமே வரலை... 'இப்படியே போயிட்டிருந்தா, நம்ம மாவட்டத்துல கட்சி கலகலத்து போயிடும்'னு, எம்.ஜி.ஆர்., காலத்து தொண்டர்கள் புலம்புறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''ரவுடிகளை கண்காணிக்க வேண்டியவர், அவங்க கூடவே சகவாசம் வச்சுக்கிட்டாரு வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார்
அண்ணாச்சி.''எந்த ஊர் போலீசைச் சொல்றீங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.''சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல இருக்குற ரவுடிகளை கண்காணிச்சு, அவங்க செயல்பாடுகள்
சம்பந்தமா அறிக்கை தர, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு செயல்படுது...''இதுக்கு இன்ஸ்பெக்டரா இருக்குறவர், ரவுடிகளின் தோஸ்தாவே ஆயிட்டாரு வே... சேலம் ரவுடிகளான, 'அரை மூக்கன்' செல்வம், 'கோழி' பாஸ்கர், செல்லதுரை, சூரி, வளத்தி குமார்னு நிறைய ரவுடிகள்
இவருக்கு பழக்கம்...''இவங்களுக்கு, போலீசின் நடவடிக்கைகள் பத்தி, தகவல் குடுக்குறாரு வே... இதுக்காக, மாசம், வாரம்னு வசூல் வேட்டையும் நடத்துதாரு...
''இன்ஸ்பெக்டரின் போக்கு பிடிக்காம, எஸ்.ஐ., உள்ளிட்ட சில போலீசார், தங்களுக்கு பணி மாறுதல் கேட்டு கடிதம் குடுத்துட்டாவ... ஆனா, அவங்க கடிதங்களை, உயரதிகாரிகளுக்கு அனுப்பாம, இன்ஸ்பெக்டரே வச்சிருக்காரு வே...'' என்றார்
அண்ணாச்சி.''வாங்க ரவிச்சந்திரன்... வடை எடுத்துக்குங்க...'' என, நண்பரை அந்தோணிசாமி
உபசரிக்க, அரட்டை தொடர்ந்தது.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement