Advertisement

மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல் தினமலர் செய்தி எதிரொலி

சோழவந்தான், மேலக்கால் அருகே கச்சிராயிருப்பு வைகை ஆற்றில் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் லாரிகளில் நடக்கும் மணல் திருட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது குறித்து பிப்.,10ல் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன்எதிரொலியாக, நேற்று முன்தினம் இரவு சமயநல்லுார் டி.எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி, எஸ்.ஐ.,க்கள் சுரேஷ்குமார், சதீஷ்குமார் மற்றும் போலீசார் கச்சிராயிருப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வைகை ஆற்றில்மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓடியது. 5 லாரிகள், 2 மணல் அள்ளும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.மணல் கொள்ளையர்களுக்கு எதிராக போலீசார் மட்டுமே அவ்வப்போது இதுபோன்ற பறிமுதல், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டிய வருவாய், பொதுப்
பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மணல்
கொள்ளையை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement